Indian Railways Jobs: வேலையில்லா பட்டதாரிகளுக்கு அடிச்சது ஜாக்பாட்.. RRB கொடுத்த சர்ப்ரைஸ்!
ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் மேலும் விவரங்களுக்கு indianrailways.gov.in என்ற இந்திய ரயில்வேயின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை அணுகலாம்.
RRB Recruitment: இந்திய ரயில்வேயின் ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) 8,000 க்கும் மேற்பட்ட பயண டிக்கெட் பரிசோதகர் பதவிகளுக்கான காலியிடங்களை அறிவித்துள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் மேலும் விவரங்களுக்கு indianrailways.gov.in என்ற இந்திய ரயில்வேயின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை அணுகலாம்.
பூர்த்தி செய்த விண்ணப்பத்தை மே மாதம் முதல் சமர்பிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விண்ணப்பதை பூர்த்தி செய்து சமர்ப்பிப்பதற்கு ஜூன் மாதம் வரை கால அவகாசம் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. ஆனால், தேர்வு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.
கூடுதல் விவரங்கள்:
காலியாக உள்ள பதவிகள்:
- பயண டிக்கெட் பரிசோதகர்
காலிப்பணியிடங்கள் எவ்வளவு:
- 8,000+
வயது வரம்பு:
- குறைந்தபட்ச வயது - 18 வயது
- அதிகபட்ச வயது - 28 வயது
சம்பளம்:
- பயண டிக்கெட் பரிசோதகர் (TTE) பதவியின் சம்பளம் ரூ.27,400 முதல் ரூ.45,600 வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கல்வி தகுதி:
- விண்ணப்பதாரர்கள் மெட்ரிகுலேஷன் அல்லது இடைநிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட வாரியத்திலிருந்து டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
தேர்வு நடைமுறை:
- எழுத்துத் தேர்வு
- உடல் தகுதி தேர்வு
- மருத்துவ பரிசோதனை
விண்ணப்பக் கட்டணம்:
- பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு: ரூ 500
- SC/ST பிரிவினருக்கு: ரூ 300
விண்ணப்பிப்பது எப்படி?
- இந்திய ரயில்வேயின் அதிகாரப்பூர்வ இணையதளமான indianrailways.gov.in க்கு செல்ல வேண்டும்.
- search ஆப்சனில் Railway TTE recruitment 2024 என்ற வார்த்தையை போட்டு தேடுங்கள்.
- ரயில்வே TTE ஆட்சேர்ப்பு பிரிவில், ஆன்லைனில் விண்ணப்பிக்கும் இணைப்பைக் காணலாம். அதை கிளிக் செய்யுங்கள்.
- நீங்கள் இங்கே அனைத்து தகவல்களையும் நிரப்ப வேண்டும். NEXT பட்டனை கிளிக் செய்யவும்.
- உங்கள் புகைப்படம் & கட்டைவிரல் பதிவை சரியான அளவுக்கு ஏற்ப பதிவேற்றவும்.
- அடுத்த பக்கத்தில், நீங்கள் கட்டணத்தை டெபாசிட் செய்து, உங்கள் படிவத்தைச் சமர்ப்பிக்கவும்
மேலும் விவரங்களுக்கு indianrailways.gov.in என்ற இந்திய ரயில்வேயின் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் அணுகவும்.