மேலும் அறிய

புறாவுக்கு போரா? சேவல் வைத்திருந்த பயணியிடம் 30 ரூபாய் வசூலித்த நடத்துனர்.. வைரலாகும் டிக்கெட்..

"மாநில பேருந்துகளில் உயிருள்ள அனைவரும் டிக்கெட் எடுக்க வேண்டும் என்பது விதி, பயணிகளுடன் கொண்டு செல்லப்படும் செல்ல பிராணிகளுக்கும் டிக்கெட் பெற வேண்டும்", என்று நடத்துனர் தெரிவித்தார்.

பேருந்தில் சேவலுடன் பயணம் செய்த நபரிடம் சேவலுக்கும் சேர்த்து 30 ரூபாய் பயணச்சீட்டு வழங்கப்பட்ட சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. நாட்டுக்கோழி வளர்ப்புத் தற்போது பிரபலமடைந்து வருகிறது. சிறுவிடை, பெருவிடை, கருங்கோழி என ரகம் வாரியாக வளர்த்து வருகிறார்கள். அதிலும் தென்னிந்தியாவில் சண்டை சேவல்களுக்கு தற்போது மவுசு அதிகமாகி வருகிறது. சேவல் சண்டைகள் நடத்துவதற்கான அனுமதி இல்லாத நிலையிலும் சிலர் சண்டை செய்யும் சேவல் இனம் அழிந்துவிடக்கூடாது என்பதற்காக வளர்ப்பார்கள். அவை எடை மற்றும் உயரம் சாதாரண கோழியைவிட அதிகமாக இருக்கும். இந்நிலையில்தான் தெலங்கானா மாநிலத்தில் அரசு பேருந்தில் கொண்டுச் செல்லப்பட்ட சண்டை சேவலுக்கும் உயரம் அதிகமாக இருந்ததால் பயண சீட்டு வழங்கப்பட்ட வேடிக்கையான சம்பவம் நடந்துள்ளது.

புறாவுக்கு போரா? சேவல் வைத்திருந்த பயணியிடம் 30 ரூபாய் வசூலித்த நடத்துனர்.. வைரலாகும் டிக்கெட்..

தெலங்கானா மாநிலம், கோதாவரிகானி பேருந்து நிலையத்தில் இருந்து கரீம்நகர் நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தில் சென்ற முகமது அலி என்பவர், தன்னுடன் சண்டை சேவலை கூண்டில் வைத்து கொண்டு சென்றுள்ளார்.  அதை கவனித்த நடத்துநர் ஜி. திருப்பதி, சேவல் உயரமாகவும் பெரிதாகவும் இருந்தசதால் தனியாக டிக்கெட் வாங்க வேண்டும் என்றும் இல்லையெனில் பேருந்தை விட்டு கீழே இறங்க நேரிடும் என்று தெரிவித்துள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த பயணி, சேவலுக்கும் 30 ரூபாய்க்கு டிக்கெட் எடுத்த பிறகு தொடர்ந்து பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளார். டிக்கெட் வாங்கும் முன் நடத்துனருக்கும் சேவல் உரிமையாளர் முகமது அலிக்கும் இடையே டிக்கெட் எடுக்கும் வாக்குவாதத்தில் நடந்த சண்டை காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

இதுகுறித்து பேசிய நடத்துநர், சேவலுக்கு டிக்கெட் பெற்றதாகவும், மாநில பேருந்துகளில் உயிருள்ள அனைவரும் டிக்கெட் எடுக்க வேண்டும் என்பது விதி என்றும், பயணிகளுடன் கொண்டு செல்லப்படும் செல்ல பிராணிகளுக்கும் டிக்கெட் பெற வேண்டும் என்றும் தெரிவித்தார். தற்போது இந்த வீடியோ சமூக தலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த சம்பவம் குறித்து டிஎஸ்ஆர்டிசி கோதாவரிகனி டிப்போ மேலாளர் வி வெங்கடேசன், தரப்பில் கூறப்பட்டதாவது, "சேவலுக்கு பயணச்சீட்டு கொடுப்பதற்கு பதிலாக விலங்குகளுடன் பயணம் செய்ய அனுமதி இல்லை என்று கூறி அந்த பயணியை கண்டக்டர்  இறக்கிவிட்டு இருக்கலாம். ஆனால் துணியால் சுற்றப்பட்டிருந்ததால் நடத்துனர் முதலில் அதை கவனிக்கவில்லை." என்று கூறினார். இந்நிலையில் இச்சம்பவத்தில் கவனக்குறைவாகவும், விதிகளை மீறியும் சேவலுக்கு பயணியிடம் கூடுதல் கட்டணம் வசூலித்ததற்காக நடத்துநரிடம் விளக்கம் கேட்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். என்னதான் இவ்வளவு சர்ச்சைகள் கிளம்பினாலும் அந்த சேவல் பாதுகாப்புடன், கொக்கரக்கோ கூவலுடன் கரீம்நகர் சென்று சேர்ந்தது என்று சமூக வலைதளங்களில் பேசிக்கொள்கிறார்கள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
WTC Points Table: ஹாட்ரிக் போச்சா..! உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் வாய்ப்பை இழந்த இந்தியா, புள்ளிப்பட்டியல் நிலவரம்
WTC Points Table: ஹாட்ரிக் போச்சா..! உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் வாய்ப்பை இழந்த இந்தியா, புள்ளிப்பட்டியல் நிலவரம்
IND vs AUS: சிட்னியில் சட்னியான இந்தியா! 11 வருஷத்துக்கு பிறகு தொடரை வென்ற ஆஸ்திரேலியா!
IND vs AUS: சிட்னியில் சட்னியான இந்தியா! 11 வருஷத்துக்கு பிறகு தொடரை வென்ற ஆஸ்திரேலியா!
TN Rain Update: சென்னையில் இன்று மழையா? தமிழ்நாட்டில் எங்கெல்லாம் கனமழை வெளுக்கும்? - வானிலை அறிக்கை
TN Rain Update: சென்னையில் இன்று மழையா? தமிழ்நாட்டில் எங்கெல்லாம் கனமழை வெளுக்கும்? - வானிலை அறிக்கை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

SU Venkatesan Hospitalized : சு. வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி  தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிTamilisai Delhi vist | தமிழைசையின் டெல்லி முகாம்!பெரிய பதவிக்கு தூண்டில் இதற்காகதான் காய் நகர்தினாராபிரியும் நட்சத்திர ஜோடி?  தனஸ்ரீ - சஹல் DIVORCE?  UNFOLLOW ! DELETE!கோதாவில் இறங்கிய அமைச்சர்  VOLLEYBALL ஆடிய செ.பாலாஜி  CHEER செய்த மாணவர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
WTC Points Table: ஹாட்ரிக் போச்சா..! உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் வாய்ப்பை இழந்த இந்தியா, புள்ளிப்பட்டியல் நிலவரம்
WTC Points Table: ஹாட்ரிக் போச்சா..! உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் வாய்ப்பை இழந்த இந்தியா, புள்ளிப்பட்டியல் நிலவரம்
IND vs AUS: சிட்னியில் சட்னியான இந்தியா! 11 வருஷத்துக்கு பிறகு தொடரை வென்ற ஆஸ்திரேலியா!
IND vs AUS: சிட்னியில் சட்னியான இந்தியா! 11 வருஷத்துக்கு பிறகு தொடரை வென்ற ஆஸ்திரேலியா!
TN Rain Update: சென்னையில் இன்று மழையா? தமிழ்நாட்டில் எங்கெல்லாம் கனமழை வெளுக்கும்? - வானிலை அறிக்கை
TN Rain Update: சென்னையில் இன்று மழையா? தமிழ்நாட்டில் எங்கெல்லாம் கனமழை வெளுக்கும்? - வானிலை அறிக்கை
Anna University Issue: அண்ணா பல்கலை வழக்கில் திருப்பூரைச் சேர்ந்தவருக்கு தொடர்பா.! டிஜிபி விளக்கம்
அண்ணா பல்கலை வழக்கில் திருப்பூரைச் சேர்ந்தவருக்கு தொடர்பா.! டிஜிபி விளக்கம்
Jagdeep Singh: நாளொன்றிற்கு ரூ.48 கோடி, ஆண்டிற்கு? உலகின் அதிக சம்பளம் வாங்கும் சிஇஒ..! யார் இந்த இந்தியர்?
Jagdeep Singh: நாளொன்றிற்கு ரூ.48 கோடி, ஆண்டிற்கு? உலகின் அதிக சம்பளம் வாங்கும் சிஇஒ..! யார் இந்த இந்தியர்?
PM Modi : ரூ. 12,200 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கிவைக்கும் பிரதமர் மோடி; எங்கு தெரியுமா?
ரூ. 12,200 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கிவைக்கும் பிரதமர் மோடி; எங்கு தெரியுமா?
IND vs AUS: 1 ரன்ல எல்லாம் போச்சு! ஸ்மித் ஆசையில் மண்ணை அள்ளிப்போட்ட இந்தியா!
IND vs AUS: 1 ரன்ல எல்லாம் போச்சு! ஸ்மித் ஆசையில் மண்ணை அள்ளிப்போட்ட இந்தியா!
Embed widget