Republic Day 2024 Wishes: குடியரசு தின கொண்டாட்டம்: வாழ்த்துகளை அனுப்ப தயாராகுங்க! வாட்ஸ் அப்; ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ் இதோ!
Republic Day 2024 Wishes in Tamil: அரசியலமைப்புச் சட்டம் அமலுக்கு வந்த நாள், ஜனவரி-26.
நாடு முழுவதும் குடியரசு தின விழாவை (Republic Day 2024) கொண்டாட தயாராகி கொண்டிருக்கிறது. இந்தியா குடியரசு பெற்று 75-வது ஆண்டு கொண்டாட்டம் இது.
இந்திய குடியரசு தினம்
1950 -ம் இந்தியா குடியரசு பெற்றது. இந்தியா ஒரு இறையாண்மை கொண்ட நாடு என்பதை உணர்த்தும் விதமாக ஜனவரி 26 தேர்ந்தெடுக்கப்பட்டது. அதே நாளில் 1930 இல், இந்திய தேசிய காங்கிரஸ் (INC) காலனித்துவ ஆட்சியைக் கண்டித்து, பூர்ண ஸ்வராஜை அறிவித்தது. அதாவது - ஆங்கிலேயர்களிடமிருந்து "முழு சுதந்திரம்" பெறுவதாகும். 1947 ஆகஸ்டு 29 அன்று பீமாராவ் ராம்ஜி அம்பேத்கர் தலைமையில் அரசமைப்புச் சட்ட வரைவுக் குழு உருவாக்கப்பட்டது. 1949ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி அரசமைப்பு நிர்ணய மன்றம் இந்திய அரசமைப்புச் சட்ட வரைவை ஏற்றுக்கொண்டது. அரசியலமைப்புச் சட்டம் அமலுக்கு வந்த நாள், ஜனவரி-26.
Facebook, WhatsApp மற்றும் பிற சமூக ஊடக தளங்களில் உங்கள் நண்பர்கள், சகாக்கள், அன்புக்குரியவர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு வாழ்த்துகள், படங்கள், தேசபக்தி மேற்கோள்கள் மற்றும் செய்திகளை அனுப்ப இந்த நாளை கொண்டாடலாம். நமது மகத்தான தேசம் மற்றும் அரசியலமைப்பை நமக்கு ஆசீர்வதித்த தலைவர்களுக்கு நன்றி உணர்வைத் தூண்டும் வகையில் உங்களுக்கு தேவையான தொகுப்பு இங்கே உள்ளது.
வாழ்த்து மெசேஜ்கள்
- நாட்டின் 75-வது குடியரசு தினம். பெருமையுடன் சொல்வோம் வந்தே மாதரம்.
- குடியரசு தின வாழ்த்துகள். கொண்டாடி மகிழுங்கள்.
- செழுமையான பாரம்பரியம் மற்றும் கலாச்சாரம் கொண்ட நாட்டின் ஒரு பகுதியாக இருப்பதற்கு நன்றியுணர்வுடன் இருப்போம். குடியரசு தின வாழ்த்துக்கள். இந்தியராக பெருமை கொள்வோம்.
- நமது தேசத்தின் பன்முகத்தன்மை அதன் முக்கிய பலங்களில் ஒன்று. நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையுடன் குடியரசு தின வாழ்த்துக்கள்.
- நாட்டின் வளர்ச்சிக்கு இடையூராக இருக்கும் எதையும் செய்ய மாட்டோம் என்று உறுதி ஏற்போம்.
- சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகத்தை இந்த நாளில் நாள்கூர்வோம். இந்த குடியரசு தினத்தில் வரலாற்று நிகழ்வுகளை மறக்காமல் இருக்க உறுதிமொழி ஏற்போம்.
- உங்கள் வாழ்வில் மகிழ்ச்சி பொங்கட்டும். குடியரசு தின வாழ்த்துகள்.
- அமைதியும் செழிப்பும் உண்டாகட்டும். குடியரசு தின வாழ்த்துகள்.
- உங்கள் வாழ்வில் அமைதி நிறைந்திருக்கட்டும். குடியரசு தின வாழ்த்துகள்.
- அரசியலமைப்பு சட்டம் நமக்கு கிடைத்ததற்கு வணங்குவோம். குடியரசு தின வாழ்த்துக்கள்.
- தேசத்தினை வணங்குவோம். குடியரசு தின வாழ்த்துகள்.
- வந்தே மாதரம் என்று முழங்கி குடியரசு தினத்தை கொண்டாடுவோம். குடியரசு தின வாழ்த்துகள்.
- தனிமனித உரிமைகளை மதிப்போம். இனிய குடியரசு தின வாழ்த்துகள்.
- ஜனநாயகத்தைப் போற்றுவோம். இனிய குடியரசு தின வாழ்த்துகள்.
- எல்லாம் நன்மைக்கே. இனிய குடியரசு தின வாழ்த்துகள்.
- இந்திய அரசியலமைப்புச் சட்டம் பற்றி விழிப்புணர்வு பெற உறுதியேற்போம். இனிய குடியரசு தின வாழ்த்துகள்.
விசுவாசம் இன்னும் இருட்டாக இருக்கும்போது ஒளியை உணரும் பறவை. - ரவீந்திரநாத் தாகூர்.
குடியரசு எனது பிறப்புரிமை, அதை நான் பெறுவேன். - பாலகங்காதர திலகர்.
பெண்கள் அடைந்துள்ள முன்னேற்றத்தின் அளவைக் கொண்டு ஒரு சமூகத்தின் முன்னேற்றத்தை நான் அளவிடுகிறேன். - பி.ஆர். அம்பேத்கர்.
ஒவ்வொரு இந்தியனும் இப்போது தான் ராஜபுத்திரன், சீக்கியன் அல்லது ஜாட் என்பதை மறந்துவிட வேண்டும். அவர் ஒரு இந்தியர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். - சர்தார் வல்லபாய் படேல்.
ஒரு நாட்டின் மகத்துவம், இனத்தின் தாய்மார்களை ஊக்குவிக்கும் அன்பு மற்றும் தியாகத்தின் அழியாத இலட்சியங்களில் உள்ளது. - சரோஜினி நாயுடு