Republic Day Award 2022: பிபின் ராவத்துக்கு பத்ம விபூஷன்.. தமிழகத்தில் 7 பேருக்கு பத்ம விருதுகள் - முழு விவரம்!!
பல்வேறு துறைகளில் புகழ்பெற்ற மற்றும் விதிவிலக்கான சாதனைகள் / சேவைக்காக பத்ம விருதுகள் வழங்கப்படுகிறது. நான்கு பேருக்கு பத்ம விபூஷண் விருதுகளும், 17 பேருக்கு பத்ம பூஷணும், 107 பேருக்கு பத்ம ஸ்ரீயும் வழங்கப்படுகின்றன
![Republic Day Award 2022: பிபின் ராவத்துக்கு பத்ம விபூஷன்.. தமிழகத்தில் 7 பேருக்கு பத்ம விருதுகள் - முழு விவரம்!! Republic Day 2022: Padma Awards have been announced, CDS Bipin Rawat given Padma Vibhushan posthumously Republic Day Award 2022: பிபின் ராவத்துக்கு பத்ம விபூஷன்.. தமிழகத்தில் 7 பேருக்கு பத்ம விருதுகள் - முழு விவரம்!!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/25/03a18255250dd6328f1c5d7aa21b003a_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
இந்தியாவின் மிகவும் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம விருதுகளை (பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்ம ஸ்ரீ) மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது. நான்கு பேருக்கு பத்ம விபூஷண் விருதுகளும், 17 பேருக்கு பத்ம பூஷணும், 107 பேருக்கு பத்ம ஸ்ரீயும் வழங்கப்படுகின்றன. தமிழகத்தின் 7 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன
மேலும், மறைந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத்துக்கு பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
பத்ம விருதுகள் பெறும் அனைவருக்கும் வாழ்த்து 💐
— Anand Vaishnov (@AnandVaishnov) January 25, 2022
Congratulations to all the Padma Awardees 💐 https://t.co/ePmaz23a1R pic.twitter.com/YWjC6qh8u6
பின்னணி:
ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்படும் இந்த விருதுகள் 1954ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த விருது 'தனித்துவமான பணியை'யை அங்கீகரிக்க முற்படுகிறது மற்றும் கலை, இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூகப்பணி, அறிவியல் மற்றும் பொறியியல், பொது விவகாரம், பொது சேவை, வர்த்தகம் மற்றும் தொழில் போன்ற துறைகளில் புகழ்பெற்ற மற்றும் விதிவிலக்கான சாதனைகள் / சேவைக்காக வழங்கப்படுகிறது.
இந்த விருதுக்கு இனம், வேலை, பதவி அல்லது பாலினம் என எந்த பாகுபாடின்றி அனைவரும் தகுதியானவர்கள். மருத்துவர்கள் மற்றும் விஞ்ஞானிகள் தவிர அரசு ஊழியர்கள், பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள், பத்ம விருதுகளுக்கு விண்ணப்பிக்க தகுதியில்லை.
முன்னதாக, 2022 பத்ம விருதுகளுக்கான (பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்மஸ்ரீ) ஆன்லைன் விண்ணப்பங்கள்/பரிந்துரைகளை 2021 செப்டம்பர் 15 வரை மத்திய அரசு பெற்றது. பத்ம விருதுகளை ‘மக்கள் பத்ம விருதுகளாக’ மாற்ற அரசு உறுதி பூண்டுள்ளது. எனவே, பெண்கள், சமூகத்தில் பின்தங்கியவர்கள், பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினர், மாற்றுத்திறனாளி நபர்கள் மற்றும் சமூகத்திற்கு தன்னலமற்ற சேவையைச் செய்கிறவர்களிடமிருந்து அங்கீகரிக்கப்பட வேண்டிய திறமையான நபர்களை அடையாளம் காணுமாறும் கேட்டுக் கொண்டது.
இன்று அறிவிக்கப்பட்ட பத்ம விருதுகளை, சில மாதங்களுக்குப் பிறகு குடியரசுத்தலைவர் மாளிகையில் நடைபெரும் சிவில் விருது வழங்கும் விழாவில் குடியரசுத் தலைவர் வழங்குவார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)