Republic Day 2022: குடியரசு தின கொண்டாட்டம்... நேரலையில் எங்கு, எப்போது பார்க்கலாம்? - முழு விவரம்
குடியரசு தின விழாவின் பிரத்யேக கழுகு பார்வை காட்சிகள் தூர்தஷனின் அனைத்து தொலைக்காட்சி சேனல்களிலும், யூட்யூப் பக்கங்களிலும் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.
இந்தியா ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26ந் தேதியை குடியரசு நாளாக கொண்டாடப்படுகிறது. இந்த வருடம் இந்தியா தனது 73வது குடியரசு தினத்தை கொண்டாடுகிறது. இந்த ஆண்டு குடியரசு தின விழா நிகழ்ச்சிகளை நேரலையில் ஒளிபரப்ப அணிவகுப்பு நடக்க இருக்கும் டெல்லி ராஜபாதை வழி முழுவதும் தூர்தர்ஷனின் 59 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. ராஜபாதையில் 33 கேமராக்களும், தேசிய போர் நினைவுச்சின்னம், இந்தியா கேட், நேஷனல் ஸ்டேடியம் ஆகியவற்றில் 16 கேமராக்களும், ராஷ்டிரபதி பவனில் 10 கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன.
2021 நவம்பர் முதல் இதற்கான ஆயத்தப் பணிகள் தொடங்கிவிட்ட நிலையில், குடியரசு தின விழாவின் பிரத்யேக கழுகு பார்வை காட்சிகள் தூர்தஷனின் அனைத்து தொலைக்காட்சி சேனல்களிலும், யூட்யூப் பக்கங்களிலும் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.
WATCH NOW -
— Doordarshan National दूरदर्शन नेशनल (@DDNational) January 26, 2022
Pre-Event on the occasion of Republic Day Parade 2022 on https://t.co/qG3GVsE936#RepublicDayWithDoordarshan #RepublicDay #RepublicDay2022 pic.twitter.com/9zJq0jrDHP
நேரலை நிகழ்ச்சிகள் தொடங்கும் நேரம்: ஜனவரி 26, காலை 9.15 மணிக்கு
வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின அணிவகுப்பு காலை 10:00 மணிக்கு தொடங்கும். ஆனால், இந்த ஆண்டு காலை 10.30 மணிக்குத் தொடங்க உள்ளது. டெல்லியில் பணி மூட்டம் அதிகமாக இருப்பதால், அணிவகுப்புகளையும், நிகழ்ச்சிகளையும் காண நேரம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மேலும், அதிகரித்து வரும் கொரோனா பரவல் சூழ்நிலையின் காரணமாக, இந்த ஆண்டு குடியரசு தின நிகழ்வில், தலைமை விருந்தினராக சர்வதேச தலைவர் யாரும் அழைக்கப்படவில்லை.
நேரலை ஒளிபரப்பு தளங்கள்:
MUST WATCH -
— Doordarshan National दूरदर्शन नेशनल (@DDNational) January 26, 2022
The magnificent #RepublicDay Parade from 9:15 am onward LIVE on @DDNational & LIVE-STREAM on https://t.co/XSIufeZqNS#RepublicDayWithDoordarshan #RepublicDay2022 https://t.co/AP2rgPpL4G
- www.indianrdc.mod.gov.in என்ற இணையதளத்திலும், 'Indian RDC' என்ற யூட்யூப் பக்கத்திலும் குடியரசு தின நிகழ்ச்சிகளை நேரலையில் காணலாம்.
- பிரதமர் நரேந்திர மோடி இந்தியா கேட்டில் உள்ள தேசிய போர் நினைவிடத்திற்குச் சென்று மரியாதை செலுத்துவதில் இருந்து நிகழ்சியின் இறுதி வரை தூர்தர்ஷனின் யூட்யூப் பக்கத்தில் நேரலையாக ஒளிபரப்பப்படும்
- டிடி நேஷனல் மற்றும் டிடி நியூஸ் யூடியூப் சேனல்களிலும் நியூஸ்ஆன்ஏர் ஆப் மற்றும் இணையதளத்திலும் நேரலை ஒளிபரப்பாகும்
- Press Information Bureau யூட்யூப் பக்கத்தில் நேரலை ஒளிபரப்பாகும்
- பிரசார் பாரதி யூட்யூப் சேனலில் காலை 8.30 மணி முதல் குடியரசு நிகழ்ச்சிகள் ஒளிபரப்படும்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்