மேலும் அறிய

என்னாது இன்னும் இவ்வளவு 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வந்து சேரவில்லையா? ரிசர்வ் வங்கி அதிர்ச்சி தகவல்!

7,581 கோடி ரூபாய் மதிப்பிலான 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் மக்களிடம் இன்னும் புழக்கத்தில் உள்ளதாக ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

கடந்த 2016ஆம் ஆண்டு, மத்தியில் பிரதமர் மோடி ஆட்சி அமைத்த பிறகு நாடு முழுவதும் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அதிரடியாக அறிவித்தார். ஒட்டுமொத்த நாட்டையே அதிர வைத்த அந்த அறிவிப்புக்கு பிறகு, புதிய 500 ரூபாய் நோட்டுகளையும், புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளையும் ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்தது.

ரிசர்வ் வங்கி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்: இந்த சூழலில், கடந்தாண்டு ரிசர்வ் வங்கி திடீரென அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. செப்டம்பர் மாதம் 30ஆம் தேதிக்கு பிறகு புழக்கத்தில் உள்ள ரூபாய் 2 ஆயிரம் நோட்டுகளை திரும்ப பெறுவதாகவும் வங்கியில் ஒப்படைக்குமாறும் தெரிவித்திருந்தது.

2019ஆம் ஆண்டில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பதை பெருவாரியாக மத்திய அரசு நிறுத்திவிட்டதாலும், 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளின் புழக்கம் பெருமளவில் குறைந்துவிட்டது. இந்த நிலையில், 97.87 சதவிகித 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் தங்களிடம் வந்து விட்டதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இருப்பினும், 7,581 கோடி ரூபாய் மதிப்பிலான 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் மக்களிடம் இன்னும் புழக்கத்தில் உள்ளதாக ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

இன்னும் புழக்கத்தில் உள்ள 2 ரூபாய் நோட்டுகள்: கடந்தாண்டு மே 19ஆம் தேதி, 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிப்பு வெளியான சமயத்தில், 3.56 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன. இந்தாண்டு, ஜூன் 28ஆம் தேதி, 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளின் புழக்கம் 7,581 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.

கடந்தாண்டு அக்டோபர் 7ஆம் தேதி வரை, 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான கால அவகாசம் வழங்கப்பட்டது. கடந்தாண்டு, அக்டோபர் 9ஆம் தேதி முதல், தனிநபர்களும் நிறுவனங்களும் 2000 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி வெளியீட்டு அலுவலகங்களில் டெபாசிட் செய்து வருகின்றனர். 

ரிசர்வ் வங்கி வெளியீட்டு அலுவலகங்களுக்கு நாட்டிலுள்ள எந்த ஒரு தபால் நிலையத்திலிருந்தும் இந்திய அஞ்சல் மூலம் 2,000 ரூபாய் நோட்டுகளை அனுப்பி மாற்றி கொள்ளலாம்.

சில காலமாகவே மக்களின் செலவிடும் திறன் பெரும் நெருக்கடியை சந்தித்து வரும் நிலையில், 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறும் முடிவால் நுகர்வோர் அதிக அளவில் செலவிடுவார்கள் என ஆய்வுகள் கூறுகின்றன.

 

தலைப்பு செய்திகள்

Air India: ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
Crime: ஆட்டோ டயரில் சிறுநீர் கழித்த நாயால் முற்றிய தகராறு.. இளைஞர் கொடூர கொலை
Crime: ஆட்டோ டயரில் சிறுநீர் கழித்த நாயால் முற்றிய தகராறு.. இளைஞர் கொடூர கொலை
World Leaders Wish India: 80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
US Iran War China: பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்
Iran Vs Qatar: போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
Udhayanidhi: ”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
விவசாயிகளுக்கு ஆட்சியர் அதிரடி உத்தரவு: அனைத்து நிலங்களையும் உடனே பதிவு செய்யுங்கள்! பதிவு செய்தால் மட்டுமே அரசு சலுகைகள்....
விவசாயிகளுக்கு ஆட்சியர் அதிரடி உத்தரவு: அனைத்து நிலங்களையும் உடனே பதிவு செய்யுங்கள்! பதிவு செய்தால் மட்டுமே அரசு சலுகைகள்....
Air India: ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
Embed widget