மேலும் அறிய

Paytm: பேடிஎம்-க்கு பேரிடி! மக்கள் பயன்படுத்த தடையா? ரிசர்வ் வங்கியின் அதிரடி கட்டுப்பாடுகள்

விதிகளை மீறி செயல்பட்டதாகக் கூறி, பேடிஎம்-ஐ பயன்படுத்த ரிசர்வ் வங்கி அதிரடி கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாகவே, டிஜிட்டல் இணைய சேவைகள் மூலம் பண பரிமாற்றம் நடைபெறுவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பேடிஎம், ஜிபே உள்ளிட்ட சேவைகளைதான் மக்கள் அதிகமாக பயன்படுத்துகின்றனர். நட்சத்திர விடுதிகள் தொடங்கி சிறிய கடைகள் வரை, இவைதான் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது.

பேடிஎம்-ஐ பயன்படுத்த மக்களுக்கு தடையா?

இச்சூழலில், ரிசர்வ் வங்கி விதித்த விதிகளை தொடர்ந்து மீறி வருவதாக கூறி, பேடிஎம் நிறுவனம் மீது அதிரடி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பேடிஎம்-இல் பணத்தை புதிதாக டெபாசிட் செய்யவும் பண பரிமாற்றம் செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. வரும் பிப்ரவரி 28ஆம் தேதிக்கு பிறகு, இந்த கட்டுப்பாடுகள் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2022ஆம் ஆண்டு, புதிய வாடிக்கையாளர்களை இணைத்து கொள்ள பேடிஎம் பேமெண்ட் பேங்க் நிறுவனத்துக்கு தடை விதிக்கப்பட்டது.  இதற்கு மத்தியில், ரிசர்வ் வங்கியின் தணிக்கையாளர்கள் மேற்கொண்ட ஆய்வில், தொடர் விதி மீறலில் பேடிஎம் பேமெண்ட் பேங்க் ஈடுபட்டது தெரிய வந்தது.

இந்த நிலையில், பேடிஎம் மீது கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், "தொடர் விதிமீறல் நடந்துள்ளதால் தேவையான நடவடிக்கை எடுப்பது அவசியமாகிறது. பிப்ரவரி 29க்குப் பிறகு எந்தவொரு வாடிக்கையாளர் கணக்குகளிலும் Paytm Payments வங்கி டெபாசிட் செய்ய அனுமதிக்கப்படாது.

ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாடுகள் என்னென்ன?

வாலட் உள்பட எந்த பண பரிமாற்றங்களும் அனுமதிக்கப்படாது. ஆனால், பேடிஎம் கணக்குகளில் ஏற்கனவே இருக்கும் பணத்தை திரும்ப எடுக்கவும் பயன்படுத்தவும் எந்த கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை. வங்கி ஒழுங்குமுறைச் சட்டம், 1949 பிரிவு 35A மற்றும் வழங்கப்பட்டுள்ள அனைத்து அதிகாரங்களையும் பயன்படுத்தி Paytm Payments வங்கிக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

வரும் பிப்ரவரி 29ஆம் தேதிக்கு பிறகு, வாடிக்கையாளர் கணக்குகள், ப்ரீபெய்ட் கணக்குகள், வாலட்கள், பாஸ்டேக், நேஷனல் காமன் மொபிலிட்டி கார்டு உள்ளிட்டவற்றில் மேலும் டெபாசிட் செய்யவோ, பண பரிமாற்றம் செய்யவோ, டாப் அப் செய்யவோ அனுமதிக்கப்படாது.

ஆனால், சேமிப்பு வங்கி கணக்குகள், நடப்புக் கணக்குகள், ப்ரீபெய்ட் கணக்குகள், வாலட்கள், பாஸ்டேக், நேஷனல் காமன் மொபிலிட்டி கார்டு உள்ளிட்டவற்றில் ஏற்கனவே இருக்கும் பணத்தை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வங்கியின் UPI வசதியை பயன்படுத்தவும் வாடிக்கையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Paytm-இன் தாய் நிறுவனமான One97 Communications Ltd மற்றும் Paytm Payments Bank நிறுவனங்களின் கணக்குகள், ரிசர்வ் வங்கியால் முடக்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி 29 அல்லது அதற்கு முன் தொடங்கப்பட்ட பரிவர்த்தனைகளும், மார்ச் 15 ஆம் தேதிக்குள் முடிக்கப்பட வேண்டும், மேலும் எந்த பரிவர்த்தனைகளும் அனுமதிக்கப்படாது" என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

HMPV Virus China | மீண்டும் LOCKDOWN? சீனாவிலிருந்து அடுத்த பயங்கரம் அச்சுறுத்தும் HMPV வைரஸ்! INDIASU Venkatesan Hospitalized : சு. வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி  தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிTamilisai Delhi vist | தமிழைசையின் டெல்லி முகாம்!பெரிய பதவிக்கு தூண்டில் இதற்காகதான் காய் நகர்தினாராபிரியும் நட்சத்திர ஜோடி?  தனஸ்ரீ - சஹல் DIVORCE?  UNFOLLOW ! DELETE!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
"ரெக்க கட்டி பறக்குதடி" அண்ணாமலை ரஜினி போன்று சைக்கிள் ஓட்டிய மன்சுக் மாண்டவியா!
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
Embed widget