(Source: ECI/ABP News/ABP Majha)
Ayodhya Ram Mandir: நாடே எதிர்பார்க்கும், ராமர் கோயில் குடமுழுக்கு விழா: அயோத்தியில் இன்று கோலாகலம் - உச்சகட்ட பாதுகாப்பு
Ayodhya Ram Mandir: நாடே எதிர்பார்க்கும் அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு விழா இன்று கோலாகலமாக நடைபெற உள்ளது.
Ayodhya Ram Mandir: அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு விழா இன்று பிற்பகல், 12.20-க்கு தொடங்கி 1 மணிக்கு முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு விழா:
500 ஆண்டுகால நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, பெரும் பொருட்செலவில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள அயோத்த்ஜி ராமர் கோயில் இன்று திறக்கப்பட உள்ளது. 'பிரான் பிரதிஸ்டா' என்ற பெயரில் நடைபெறும் இந்த சடங்கில், பிரதமர் மோடி பங்கேற்று குழந்தை ராமர் சிலையை கருவறையில் நிறுவி ஆரத்தி வழங்கவுள்ளார். இந்த செயல்முறை பிற்பகல் 12.20-க்கு தொடங்கி 1 மணிக்கு முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதைத் தொடர்ந்து 7,000 க்கும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார். இந்த நிகழ்வை பொதுமக்கள் வீடுகளில் இருந்தே கண்டுகளிக்கும் வகையில் தொலைக்காட்சி மற்றும் ஆன்லைன் தளங்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. இதையோட்டி பல மாநிலங்கள் விடுமுறை அறிவித்துள்ள சூழலில், மத்திய அரசு தனது அலுவலகங்களுக்கு அரைநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, நாளை முதல் பொதுமக்கள் கோயிலுக்கு வந்த தரிசனம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விழாக்கோலம் பூண்ட அயோத்தி:
பிரமாண்ட ராமர் கோயில் மலர்களாலும், சிறப்பு விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது. நகரம் முழுவதும் மத ஆர்வத்தில் மூழ்கியுள்ளது. உள்ளூர் முழுவதும் எங்கு திரும்பினாலும் ராமர் பாடல்கள் ஒலிக்க தொடங்கியுள்ளன. மேம்பாலங்களில் உள்ள தெருவிளக்குகள், வில் மற்றும் அம்புகளின் கட்அவுட்கள் உட்பட ராமரை சித்தரிக்கும் கலைப்படைப்புகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. அலங்கார விளக்கு கம்பங்கள் பாரம்பரிய "ராமானந்தி திலகத்தின்" கருப்பொருளைக் கொண்ட வடிவமைப்புகளைக் கொண்டுள்ளன.
உலகளாவிய கொண்டாட்டங்கள்:
பிரமாண்டமான சிலை நிறுவும் விழாவைக் குறிக்கும் வகையில் இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் உள்ள கோயில்களிலும் சிறப்பு விழாக்களுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாஷிங்டன் டிசி முதல் பாரிஸ், சிட்னி வரை, இன்று உலகின் பல்வேறு பகுதிகளில் சிறப்பு பூஜைகளுக்கு திட்டமிடப்பட்டுள்ளன. இந்த நிகழ்ச்சிகள் விஸ்வ ஹிந்து பரிஷத் (விஎச்பி) அல்லது 60 நாடுகளில் உள்ள புலம்பெயர் இந்து குழுக்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
7000 விருந்தினர்கள்:
கோயில் குழ்டமுழுக்கிற்கு விழாவில் பங்கேற்க அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் தொழில் என பல்வேறு துறைகளைச் சேர்ந்த, 7,000 க்கும் மேற்பட்டவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவர்களில் 506 பேர் மிக முக்கிய பிரமுகர்கள் உள்ளனர். இதில் கலந்துகொள்பவர்களில் பலர் ராமர் கோயிலுக்கான போராட்டத்தில் தொடர்புடையவர்களும் அடங்குவர். பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், தொழில் அதிபர்கள் முகேஷ் அம்பானி மற்றும் கௌதம் அதானி, விளையாட்டு வீரர்களான சச்சின் டெண்டுல்கர் மற்றும் எம்எஸ் தோனி ஆகியோர் அழைக்கப்பட்ட முக்கிய நபர்கள் ஆவர். விழாவிற்கு அழைக்கப்பட்ட அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களும் விழாவில் பங்கேற்க மறுத்துவிட்டனர். காங்கிரஸ் இதை BJP-RSS நிகழ்வு என்று விமர்சித்துள்ளது.
உச்சகட்ட பாதுகாப்பு:
குடியரசு தலைவர், பிரதமர் மோடி உள்ளிட்ட நாட்டின் முக்கிய தலவர்கள் பங்கேற்க இருப்பதால், ஒட்டுமொத்த அயோத்தி நகரமே உச்சபட்ச பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. பல அடுக்கு பாதுகாப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக, நகரம் முழுவதும் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். விவிஐபி நடமாட்டத்தின் போது, போக்குவரத்தை ஒழுங்குபடுத்த கோயில் நகரின் ஒவ்வொரு முக்கிய குறுக்கு சாலையிலும் முள்கம்பிகள் இணைக்கப்பட்ட அசையும் தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. . ரசாயன, உயிரியல், கதிரியக்க மற்றும் அணுசக்தி தாக்குதல்கள், நீரில் மூழ்கும் சம்பவங்கள் மற்றும் பூகம்பம் போன்ற பேரழிவுகளை சமாளிக்க பயிற்சி பெற்ற பல NDRF குழுக்கள் அங்கு குவிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக கடும் குளிரால் ஏற்படும் எத்தகைய சுகாதார நெருக்கடியையும் சமாளிக்க நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. நகர அடிப்படையிலான மற்றும் மாவட்ட மருத்துவமனைகள் மற்றும் அங்குள்ள மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் படுக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அவசர சிகிச்சை உதவிக்காக மருத்துவர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.