மேலும் அறிய

Ayodhya Ram Temple : அயோத்தியில் ராமர் சிலை நிறுவப்படும் நாள் எப்போது தெரியுமா..? முழு விபரம் உள்ளே..!

அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலில் அடுத்த ஆண்டு ஜனவரி 14ஆம் தேதி ராமர் சிலை நிறுவப்படும் என ராமஜென்மபூமி அறக்கட்டளை பொதுச்செயலாளர் சம்பத் ராய் கூறியுள்ளார். 

அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலில் அடுத்த ஆண்டு ஜனவரி 14ஆம் தேதி ராமர் சிலை நிறுவப்படும் என ராமஜென்மபூமி அறக்கட்டளை பொதுச்செயலாளர் சம்பத் ராய் கூறியுள்ளார். 

இது குறித்து நேற்று அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் கட்டுமான பணிகள் உரிய நேரத்தில் முடிவடையும். மேலும், வருகிற டிசம்பர் மாதம் பணியை முடித்துவிட்டு, அடுத்த ஆண்டு அதாவது 2024ஆம் ஆண்டு  ஜனவரி மாதம் கோயிலை திறக்க இலக்கு நிர்ணயித்துள்ளோம். அடுத்த ஆண்டு ஜனவரி 14-ந்தேதி வரவுள்ள மகர சங்கராந்தியன்று கோயில் கருவறையில் ராமர் சிலை நிறுவப்படுவதற்கான பணிகள் இப்போது இருந்தே நடைபெற்று வருகிறது. கருவறையில் சிலை நிறுவப்பட்டதும், அதைத்தொடர்ந்து கோயில் திறக்கப்படும். இந்த ஆண்டு டிசம்பர் மாதமே கோயில் திறப்பு கொண்டாட்டங்கள் கோலாகலமாக தொடங்கி விடும் எனத் தெரிவித்துள்ளார். 

உத்தரபிரதேசம் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் வரும் 2024-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி திறக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்.

இந்தாண்டு பல்வேறு மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ராமர் கோயில் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. திரிபுராவில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, "வரும் 2024ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி, அயோத்தி ராமர் கோயில் திறக்கப்படும்.

ராமர் கோயில் கட்ட நீதிமன்றங்களில் தடை போட்டது காங்கிரஸ். உச்சநீதிமன்ற தீர்ப்பு வந்தவுடன் கோயில் கட்டும் பணியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்" என்றார்.

வரும் 2024ஆம் ஆண்டு, மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ராமர் கோயில் திறப்பு பாஜகவுக்கு சாதகமான சூழலை ஏற்படுத்தி தரும் என அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர். 1990களில், ராமர் கோயில் விவகாரத்தை முன்னிறுத்திதான், தேசிய அளவில் பாஜக மிக பெரிய கட்சியாக உருவெடுத்தது.

தற்போதைய மதிப்பீட்டின்படி, ராமர் கோயில் மற்றும் வளாகத்தின் மொத்த கட்டுமானச் செலவு தோராயமாக 1,800 கோடி ரூபாயாக இருக்கும் என ராமர் கோயில் அறக்கட்டளை கணித்துள்ளது. சன்னதி மற்றும் ஐந்து மண்டபங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய மூன்று தள மேல்கட்டமைப்பின் கட்டுமானப் பணிகள் முழு வீச்சில் தொடங்கியுள்ளன என அறக்கட்டளை சமீபத்தில் தெரிவித்தது.

“2023 டிசம்பரில் பக்தர்களுக்கு ஸ்ரீ ராம் லல்லா தரிசனம் திறக்கப்படுவதைக் கருத்தில் கொண்டு, யாத்திரை வசதி மையத்தின் கட்டுமானப் பணிகள், வளாகத்தில் உள்ள பிற பயன்பாடுகள் மற்றும் உள்கட்டமைப்பு பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன. ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை செப்டம்பர் 11 அன்று கூடி முன்னேற்றம் குறித்து விரிவான ஆய்வு செய்தது. கோயிலின் இந்த மேற்கட்டுமானம் 6.5 மீ (21 அடி) உயரமான பீடத்தின் மீது கட்டப்பட்டு வருகிறது. இதன் காரணமாக அதன் நேரடி சுமை குறைக்கப்படும். 

பெரும்பாலான பழமையான கோயில்கள் இயற்கையான பாறை அடுக்குகளில் கட்டப்பட்டதால், ஸ்ரீராமர் கோவியின் பொறியாளர்களின் கூட்டமைப்பு பீடம் வேலைக்காக கிரானைட் கல்லை பயன்படுத்தி உள்ளது. பிப்ரவரி 2022 இல் தொடங்கப்பட்ட பீடம் கட்டுமானப் பணிகள் கடந்த செப்டம்பர் மாதம் நிறைவடைந்தன.

ராமஜென்மபூமி-பாபர் மசூதி வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி அயோத்தியில் கட்டப்பட்டு வரும் மசூதி அடுத்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் கட்டி முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மசூதியை கட்டுவதற்காக பணி அமர்த்தப்பட்டுள்ள அறக்கட்டளை இது தொடர்பான தகவலை பகிர்ந்தது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain Alert: நாளை 7, நாளை மறுநாள் 19 மாவட்டங்களுக்கு வெளுக்கபோகும் கனமழை: வடகிழக்கு பருவமழை எப்போது தொடங்குகிறது.!
நாளை 7, நாளை மறுநாள் 19 மாவட்டங்களுக்கு வெளுக்கபோகும் கனமழை: வடகிழக்கு பருவமழை எப்போது தொடங்குகிறது.!
Breaking News LIVE 1st OCT 2024: மருத்துவமனையில் அமைச்சர் அன்பில் மகேஷ் அனுமதி
மருத்துவமனையில் அமைச்சர் அன்பில் மகேஷ் அனுமதி
TN Cabinet Meeting: துறை மாற்றத்துக்கு பின் முதல் அமைச்சரவைக் கூட்டம்! தேதி அறிவிச்சாச்சு...! என்ன விஷயம்?
TN Cabinet Meeting: துறை மாற்றத்துக்கு பின் முதல் அமைச்சரவைக் கூட்டம்! தேதி அறிவிச்சாச்சு...! என்ன விஷயம்?
Rajinikanth Health: தலைவரு நிரந்தரம்... ரஜினி எப்போது வீடு திரும்புவார்? மருத்துவமனை அப்டேட்!
தலைவரு நிரந்தரம்... ரஜினி எப்போது வீடு திரும்புவார்? மருத்துவமனை அப்டேட்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Anbil Mahesh | Vanitha Robert Marriage|வனிதாவுக்கு 4வது கல்யாணம்? ராபர்ட் மாஸ்டர் மாப்பிள்ளையா வைரலாகும் INVITATIONRahul Gandhi Slams Modi | ”கல்யாணத்துக்கு இவ்ளோ செலவா? அம்பானி பணத்தின் பின்னணி” போட்டுடைத்த ராகுல்Kanchipuram Lady : ’’வீடு கட்ட விடமாட்றாங்க’’பெட்ரோலுடன் வந்த பெண்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain Alert: நாளை 7, நாளை மறுநாள் 19 மாவட்டங்களுக்கு வெளுக்கபோகும் கனமழை: வடகிழக்கு பருவமழை எப்போது தொடங்குகிறது.!
நாளை 7, நாளை மறுநாள் 19 மாவட்டங்களுக்கு வெளுக்கபோகும் கனமழை: வடகிழக்கு பருவமழை எப்போது தொடங்குகிறது.!
Breaking News LIVE 1st OCT 2024: மருத்துவமனையில் அமைச்சர் அன்பில் மகேஷ் அனுமதி
மருத்துவமனையில் அமைச்சர் அன்பில் மகேஷ் அனுமதி
TN Cabinet Meeting: துறை மாற்றத்துக்கு பின் முதல் அமைச்சரவைக் கூட்டம்! தேதி அறிவிச்சாச்சு...! என்ன விஷயம்?
TN Cabinet Meeting: துறை மாற்றத்துக்கு பின் முதல் அமைச்சரவைக் கூட்டம்! தேதி அறிவிச்சாச்சு...! என்ன விஷயம்?
Rajinikanth Health: தலைவரு நிரந்தரம்... ரஜினி எப்போது வீடு திரும்புவார்? மருத்துவமனை அப்டேட்!
தலைவரு நிரந்தரம்... ரஜினி எப்போது வீடு திரும்புவார்? மருத்துவமனை அப்டேட்!
Crime: சூட்கேஸில் நிர்வாண நிலையில் இளம்பெண் சடலம்... 12 விரல்கள் கொண்ட பெண்னை கொன்றது யார்?
சூட்கேஸில் நிர்வாண நிலையில் இளம்பெண் சடலம்... 12 விரல்கள் கொண்ட பெண்னை கொன்றது யார்?
Vijay : சூப்பர்ஸ்டார் ரஜினி குணமடைந்து வீடு  திரும்ப வேண்டுகிறேன்..தவெக தலைவர் விஜய்
Vijay : சூப்பர்ஸ்டார் ரஜினி குணமடைந்து வீடு திரும்ப வேண்டுகிறேன்..தவெக தலைவர் விஜய்
செந்தில் பாலாஜி விவகாரம்: 'கம்பி கட்டும் கதை; எடுப்பார் கைப்பிள்ளையா முதல்வர் ஸ்டாலின்?’ பாமக பாலு சரமாரிக் கேள்வி!
செந்தில் பாலாஜி விவகாரம்: 'கம்பி கட்டும் கதை; எடுப்பார் கைப்பிள்ளையா முதல்வர் ஸ்டாலின்?’ பாமக பாலு சரமாரிக் கேள்வி!
”1989 ஜூலை16 நினைவிருக்கிறதா? டாக்டர் ராமதாஸ்.! பாவங்களை கழுவிவிட்டு திமுகவை விமர்சிக்கட்டும்”- திமுக கடும் தாக்கு.!
”1989 ஜூலை16 நினைவிருக்கிறதா? டாக்டர் ராமதாஸ்.! பாவங்களை கழுவிவிட்டு திமுகவை விமர்சிக்கட்டும்”- திமுக கடும் தாக்கு.!
Embed widget