மேலும் அறிய
Rakesh Asthana | டெல்லி போலீஸ் கமிஷ்னராக நியமிக்கப்பட்ட ராகேஷ் அஸ்தானா
ராகேஷ் அஸ்தானா டெல்லி போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்

ராகேஷ் அஸ்தானா
எல்லை பாதுகாப்பு படையின் (பி.எஸ்.எஃப்) இயக்குநர் ஜெனரல் ராகேஷ் அஸ்தானா இன்று டெல்லி போலீஸ் கமிஷ்னராக நியமிக்கப்பட்டார். தொழில்முறை திறமை மற்றும் நேர்மைக்காக அறியப்பட்ட அஸ்தானா பல முக்கிய வழக்குகளை கையாண்டுள்ளார்.
ஜூன் 30 ம் தேதி எஸ் என் ஸ்ரீவாஸ்தவா ஓய்வு பெற்ற பின்னர் டெல்லி காவல்துறையின் கூடுதல் பொறுப்பை பாலாஜி ஸ்ரீவாஸ்தவா கவனித்து வந்தார். இந்த நிலையில் டெல்லி போலீஸ் கமிஷனராக ராகேஷ் அஸ்தானா நியமிக்கப்பட்டுள்ளார். அஸ்தானா குற்றவியல் விசாரணைக்கு பெயர் பெற்றவர் ஆவார். ராகேஷ் அஸ்தானாவின் வருகைக்கு பிறகு டெல்லி காவல்துறையில் பல மாற்றங்கள் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















