Trichy Siva: உக்ரைனிலிருந்து மீட்கப்பட்ட மாணவர்களின் எதிர்காலம் என்ன? கேள்வி எழுப்பிய எம்பி. திருச்சி சிவா
உக்ரைனிலிருந்து மாணவர்கள் மீட்பு தொடர்பாக மாநிலங்களவையில் வெளியுறவுத்துறை அமைச்சர் அறிக்கை தாக்கல் செய்தார்.
![Trichy Siva: உக்ரைனிலிருந்து மீட்கப்பட்ட மாணவர்களின் எதிர்காலம் என்ன? கேள்வி எழுப்பிய எம்பி. திருச்சி சிவா Rajyasabha MP Tirchy Siva and other question about future of Indian students returned from Ukraine due to conflict Trichy Siva: உக்ரைனிலிருந்து மீட்கப்பட்ட மாணவர்களின் எதிர்காலம் என்ன? கேள்வி எழுப்பிய எம்பி. திருச்சி சிவா](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/15/c9ff59dcf5dc2670cb108b31925bf20c_original.png?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
உக்ரைன்-ரஷ்யா இடையே கடந்த சில வாரங்களாக போர் நடைபெற்று வருகிறது. இந்தப் போர் சூழல் காரணமாக உக்ரைனில் சிக்கி தவித்து வந்த இந்தியர்களை மத்திய அரசு ஆப்ரேஷன் கங்கா என்ற திட்டத்தின் மூலம் மீட்டு வருகிறது. இந்த மீட்பு நடவடிக்கை தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மாநிலங்களவையில் அறிக்கை ஒன்றை இன்று தாக்கல் செய்தார். அதில் தற்போது வரை 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் உக்ரைனிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அதைத் தொடர்ந்து எம்பிக்கள் பலர் கேள்வி எழுப்பினர். அப்போது திமுக எம்பி திருச்சி சிவா பேசினார். அதில்,”தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியுறவுத்துறை அமைச்சரை அழைத்து மீட்பு நடவடிக்கை தொடர்பாக பாராட்டியுள்ளார். மேலும் ராஜங்க ரீதியாக இந்திய அரசு இந்த விஷயத்தை கையாண்டது தொடர்பாகவும் பிரதமர் மோடியை நாம் பாராட்ட வேண்டும். தமிழ்நாட்டைச் சேர்ந்த 2000 மாணவர்களுக்கு மேல் அங்கு சிக்கியிருந்தனர். அவர்களுக்கு இந்திய தூதரகத்தை தொடர்பு கொள்வதில் சிக்கல் ஏற்பட்டதாக தெரிந்தது. அதைத் தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் என் தலைமையில் குழு ஒன்றை உருவாக்கினார். நாங்கள் இங்கு வந்து வெளியுறவுத்துறை அமைச்சரிடம் பேசிய போது மத்திய அரசு எடுத்த நடவடிக்கை எங்களுக்கு திருப்தியாக அமைந்தது. அத்துடன் மாணவர்களும் வேகமாக உக்ரைனை விட்டு வெளியே வந்தனர்.
தற்போது முக்கியமான கேள்வி என்றால் அவர்களுடைய எதிர்காலம் என்ன என்பது தான்? ஏனென்றால் பல பல்கலைக்கழகங்கள் மாணவர்கள் உக்ரைன் நாட்டைவிட்டு சென்றால் அவர்களுடைய படிப்பு வீணாகிவிடும் என்று மிரட்டியுள்ளதாக தெரிகிறது. இந்தச் சூழலில் அவர்களுடைய படிப்பிற்கு மத்திய அரசு என்ன செய்யபோகிறது” எனக் கேள்வி எழுப்பினார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)