மேலும் அறிய

தலிபான் கிரிக்கெட் கிளப்.. நம்ம ஊருல இப்படி ஒரு கிளப்பா? எதுக்காகன்னு பாருங்க..!

சமீப நாட்களாக உலகமே உற்று நோக்கும் செய்தியாக தலிபான்களின் நகர்வு மட்டும்தான் இருக்கிறது.

சமீப நாட்களாக உலகமே உற்று நோக்கும் செய்தியாக தலிபான்களின் நகர்வு மட்டும் தான் இருக்கிறது. தலிபான்கள் தொடர்பாக இணையம் முழுவதும் ஹேஷ்டேக் விரவிக்கிடக்கிறது. இந்நிலையில், தலிபான் கிரிக்கெட் கிளப், (Taliban Cricket Club) என்ற பெயர் அதிர்ச்சியுடன் கலந்த கவனம் பெற்றது. 

அட ஆப்கானிஸ்தானில் இப்படி ஒரு கிரிக்கெக் கிளப் இருப்பதாக நினைத்துவிடாதீர்கள். இதோ நம்மூரில் ராஜஸ்தானில் தான் இந்த கிரிக்கெட் கிளப் இருக்கிறது.

அண்மையில் ஜெய்சால்மர் மாவட்டத்தில் நடந்த ஒரு போட்டியில் இந்த அணி கலந்து கொள்ள. போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் பெயரைக் கேட்டு திக்குமுக்காடிப் போயினர். பின்னர் அவர்கள் அந்தப் போட்டியில் இருந்தே விலக்கப்பட்டனர். அதுமட்டுமல்லாமல் தலிபான் கிரிக்கெட் கிளப்புக்கு நிரந்தரத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

போக்ரான் அருகே ஒரு சர்ச்சை கிளப்..

தலிபான் கிரிக்கெட் கிளப்பைச் சேர்ந்தவர்கள் ராஜஸ்தான் மாநிலம், ஜெய்சால்மர் மாவட்டம், பானியானா கிராமத்தைச் சேர்ந்தவர்கள். இந்த கிராமம் போக்ரானில் இருந்து 36 கி.மீ தொலைவில் இருக்கிறது. போக்ரான் இந்தியா முதலில் அணுஆயுத சோதனை நடத்திய இடம் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்தப் பகுதி பதற்றம் நிறைந்த பகுதியாக கண்காணிப்படுகிறது.

தலிபான் கிரிக்கெட் கிளப்.. நம்ம ஊருல இப்படி ஒரு கிளப்பா? எதுக்காகன்னு பாருங்க..!

இதற்கு அருகில் இருக்கும் பானியானா கிராமத்தில் முஸ்லிம் சிறுபான்மையின மக்களே அதிகம் வசிக்கின்றனர். அப்பகுதியைச் சேர்ந்த கிரிக்கெட் கிளப்புக்கு தலிபான் கிரிக்கெட் கிளப் என்று பெயரிடப்பட்டுள்ளது தான் தற்போது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இது குறித்து கிரிக்கெட் போட்டி ஒருங்கிணைப்பாளர் இஸ்மாயில் கான் கூறுகையில், தலிபான் கிரிக்கெட் கிளப் என்று சிலர் விவரம் அறியாமல் பெயர் வைத்துள்ளனர். அது குறித்து தெரிந்தவுடனேயே அந்த அணியை போட்டியில் இருந்து விலக்கிவிட்டோம் என்றார்.

பேர சொன்னா பயம் வரும்ல...

கடந்த ஆகஸ்ட் 15-ஆம் தேதியன்று, ஆப்கானிஸ்தான் முழுவதும் தலிபான்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. அதனைத் தொடர்ந்து அந்நாட்டு அதிபர் அஷ்ரப் கனி நாட்டைவிட்டு வெளியேறினார். அங்கு ஆட்சி அமைக்கும் முயற்சியில் தலிபான்கள் இறங்கியுள்ளனர். ஆனால், அந்நாட்டு மக்களோ எங்கே 1990-களில் தலிபான் ஆட்சி நடந்தபோது இருந்த கடுமையான கட்டுப்பாடுகள் மீண்டும் அமலாகுமோ என்ற அச்சத்தில் குவியல் குவியலாக வெளியேறி வருகின்றனர்.

சொந்த நாட்டு மக்களுக்கே சிம்ம சொப்பனமாக இருக்கும் பெயர் தலிபான், அதனைக் கொண்டுவந்து கிரிக்கெட் டீமுக்குப் பெயராக வைத்தால் அதிர்ச்சி ஏற்படத் தானே செய்யும். அதனால் தான் போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் ஒட்டுமொத்தமாக தலிபான் பெயர் கொண்ட தலிபான் கிரிக்கெட் கிளப் என்ற அந்த அணியை அப்படியே புறக்கணித்துவிட்டனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Vettaiyan Trailer : ஹண்டர் வந்துட்டார்... வெளியானது ரஜினியின் வேட்டையன் பட டிரைலர்
Vettaiyan Trailer : ஹண்டர் வந்துட்டார்... வெளியானது ரஜினியின் வேட்டையன் பட டிரைலர்
Breaking News LIVE OCT 2 :விசிக மாநாட்டில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றம்.!
Breaking News LIVE OCT 2 :விசிக மாநாட்டில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றம்.!
வெள்ள நீரில் தரையிறங்கிய இந்திய விமானப்படையின் ஹெலிகாப்டர்: அதிர்ச்சியை ஏற்படுத்தும் காட்சிகள்.!
வெள்ள நீரில் தரையிறங்கிய இந்திய விமானப்படையின் ஹெலிகாப்டர்: அதிர்ச்சியை ஏற்படுத்தும் காட்சிகள்.!
GST Collection: செப்டம்பர் மாத ஜி.எஸ்.டி.வரி  ரூ.1.73 லட்சம் கோடி வசூல்!
GST Collection: செப்டம்பர் மாத ஜி.எஸ்.டி.வரி ரூ.1.73 லட்சம் கோடி வசூல்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Jayam Ravi shifted Mumbai : விடாப்பிடியாக நிற்கும் ஆர்த்தி மும்பைக்கு நகர்ந்த ஜெயம் ரவிப்ளான் என்ன?Siddaramaiah Shoes Video : முதல்வரின் அதிகார திமிர்..காங். மரியாதைக்கு வேட்டு தேசிய கொடிக்கு கலங்கம்ADMK Vs AMMK : ’’யார் பெருசுனு அடிச்சு காட்டு!’’ Jayakumar vs TTV Dhinakaran..வம்பிழுத்த ஆதரவாளர்கள்Gambhir plan for Ruturaj |”நீ அடிச்சி ஆடு ருதுராஜ்”கம்பீர் MASTER STROKE அலறும் AUSSIES

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vettaiyan Trailer : ஹண்டர் வந்துட்டார்... வெளியானது ரஜினியின் வேட்டையன் பட டிரைலர்
Vettaiyan Trailer : ஹண்டர் வந்துட்டார்... வெளியானது ரஜினியின் வேட்டையன் பட டிரைலர்
Breaking News LIVE OCT 2 :விசிக மாநாட்டில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றம்.!
Breaking News LIVE OCT 2 :விசிக மாநாட்டில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றம்.!
வெள்ள நீரில் தரையிறங்கிய இந்திய விமானப்படையின் ஹெலிகாப்டர்: அதிர்ச்சியை ஏற்படுத்தும் காட்சிகள்.!
வெள்ள நீரில் தரையிறங்கிய இந்திய விமானப்படையின் ஹெலிகாப்டர்: அதிர்ச்சியை ஏற்படுத்தும் காட்சிகள்.!
GST Collection: செப்டம்பர் மாத ஜி.எஸ்.டி.வரி  ரூ.1.73 லட்சம் கோடி வசூல்!
GST Collection: செப்டம்பர் மாத ஜி.எஸ்.டி.வரி ரூ.1.73 லட்சம் கோடி வசூல்!
Thailand Bus Fire: பற்றி எரிந்த பள்ளி பேருந்து..! மழலைகள் உட்பட  23 பேர் உயிரிழப்பு - சரணடைந்த ஓட்டுநர் செய்த தவறு?
Thailand Bus Fire: பற்றி எரிந்த பள்ளி பேருந்து..! மழலைகள் உட்பட 23 பேர் உயிரிழப்பு - சரணடைந்த ஓட்டுநர் செய்த தவறு?
அமைச்சர் பொன்முடியுடன் ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் வாக்குவாதம் - கிராம சபை கூட்டத்தில் சலசலப்பு
அமைச்சர் பொன்முடியுடன் ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் வாக்குவாதம் - கிராம சபை கூட்டத்தில் சலசலப்பு
ரஜினி மனைவியின் மாங்கல்ய பாக்கியத்திற்காக மீனாட்சியம்மன் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கி வழிபாடு
ரஜினி மனைவியின் மாங்கல்ய பாக்கியத்திற்காக மீனாட்சியம்மன் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கி வழிபாடு
Chennai Air Show 2024: சென்னையில் விமானப்படை சாகச நிகழ்ச்சி - நேரில் காண்பது, டிக்கெட் பெறுவது எப்படி?
Chennai Air Show 2024: சென்னையில் விமானப்படை சாகச நிகழ்ச்சி - நேரில் காண்பது, டிக்கெட் பெறுவது எப்படி?
Embed widget