Watch Video : ’தார்ப்பாய் இருக்க கவலை ஏன் ‘ அடைமழையிலும் விடாது தொடரும் திருமண சடங்குகள் ! வைரல் வீடியோ!
இந்த வீடியோவிற்கு கீழே பலரும் “இதெல்லாம் இந்தியாவில்தான் நடக்கும் “ என கமெண்ட் செய்து வருகின்றனர்.
![Watch Video : ’தார்ப்பாய் இருக்க கவலை ஏன் ‘ அடைமழையிலும் விடாது தொடரும் திருமண சடங்குகள் ! வைரல் வீடியோ! Rainstorm Couldn't Stop This Baraat In A Viral Video, Twitterati Says It's 'Pure Dedication' Watch Video : ’தார்ப்பாய் இருக்க கவலை ஏன் ‘ அடைமழையிலும் விடாது தொடரும் திருமண சடங்குகள் ! வைரல் வீடியோ!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/07/493a3580b0775caa8a1e9b45fb8e85db1657168035_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
இந்தியா ஒரு அழகான நாடு . இங்குதான் அதிக மழை , அதிக வெயில் , அதிக குளிர் என அனைத்து க்ளைமேட்ஸையும் ஒருங்கே பார்க்க முடியும். அதே போலத்தான் வெவ்வேறு கலாச்சாரங்கள் , மொழிகள் கொண்ட மக்களும் இந்தியாவின் ஒருமித்த அழகு. இந்தியாவில் கலாச்சாரம் என்பது தீவிரமானது. அது பல்லாயிரம் ஆண்டுகள் பழமையானது கூட . அந்த கலாச்சாரங்களுள் சில நம்மை கோவப்படுத்தலாம் , சில விஷயங்கள் நமக்கு ஆச்சர்யமாகவும் பெருமையாகவும் இருக்கலாம் , சில விஷயங்கள் நமக்கு வேடிக்கையாகவும் இருக்கலாம். அப்படியான ஒரு நிகழ்வுதான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
This called pure #dedication #Barat #Indore 😂🤣 pic.twitter.com/0AyZxVzRE2
— शैलेंद्र यादव (@ShailenderYadu) July 6, 2022
ஊருக்கே குடை பிடித்த மக்கள் :
திருமண ஊர்வலம் என்பது இந்தியாவில் எல்லா மதத்தினராலும் கடைப்பிடிக்கப்படும் ஒரு வழக்கமான விஷயம். வட இந்தியாவில் இதனை ஒரு சடங்காகவே பின்பற்றுவார்கள் . மாப்பிள்ளையை குதிரையில் அமர வைத்து , மேள தாளங்களுடன் நடனமாடியபடியே ஊர்வலமாக மண மேடைக்கு அழைத்து செல்வார்கள் . அதற்கு குறித்த நேரம் ஒன்று இருக்கிறது அந்த நேரத்திற்குள் தவறாமல் செய்துவிட வேண்டும்.அது நம்பிக்கை. இந்த நிலையில் மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் , திருமண ஊர்வலம் ஒன்றை விடாத மழையிலும் நிகழ்த்தியுள்ளனர் திருமண வீட்டார். மாப்பிள்ளையை குதிரை மேல் காணவில்லை என்றாலும் கூட , மேள தாளங்கள் முழங்க , பாடல்கள் பாடியபடி , நடனமாடிக்கொண்டு சில முன்னோக்கி செல்ல , மஞ்சள் நிற நீளமான தார்பாயை குடையாக பிடித்துக்கொண்டு 20 க்கும் மேற்ப்பட்டோர் பின்னோக்கி செல்கின்றனர். இதனை அங்கிருந்த ஒருவர் மொபைலில் வீடியோவாக எடுத்து இணையத்தில் பதிவேற்ற அந்த வீடியோ தற்போது படு வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
இந்த வீடியோவிற்கு கீழே பலரும் “இதெல்லாம் இந்தியாவில்தான் நடக்கும் “ என கமெண்ட் செய்து வருகின்றனர்.
It Happens only in India #Jugaar
— Ash (@AwaraDil21) July 6, 2022
When cancelation is not an option😅
— Allwyn Mendonca (@mendonca_allwyn) July 6, 2022
I happened only in India I love my india 🇮🇳 colour full culture only in india
— Khaja Gayazuddin (@KGayazuddin) July 6, 2022
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)