பிரதமர் மோடி கூறும் பொய்களை டெலிப்ராம்ப்டரால் கூட ஏற்க முடியாது.. - ராகுல் காந்தி
பிரதமர் மோடி கூறும் பொய்களை டெலிப்ராம்ப்டரால் கூட ஏற்றுக் கொள்ள முடியவில்லை என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
ஆண்டு தோறும் சுவிட்சர்லாந்தில் உள்ள டாவோஸ் நகரில் உலக பொருளாதார மாநாடு நடைபெற்று வருகிறது. கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு நடத்த முடியாததால் 2022 ஆம் ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இதனை அடுத்து இன்று முதல் 5 நாள்களுக்கு காணொலி மூலமாக நடைபெறும். இந்த மாநாட்டில் பல்வேறு நாட்டி தலைவர்கள் உரையாற்றுகிறார்கள். அதன் படி நேற்று காணொலியில் பிரதமர் மோடி உரையாற்றிக் கொண்டிருக்கும்போது, டெலிப்ராம்ப்டர் இயந்திரத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் பேச்சை நிறுத்தி சில நிமிடங்கள் தயங்கி நின்றார். இந்த விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Don’t those getting excited at the tech glitch not realise that the problem was at WEF’s end? They were not able to patch PM, so requested him to start again, which is evident in the way Klaus Schwab said that he will again give a short introduction and then open up the session… pic.twitter.com/HblG1w0mfN
— Shalabh Mani Tripathi (@shalabhmani) January 17, 2022
இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், 'பிரதமர் மோடி கூறும் பொய்களை டெலிப்ராம்ப்டரால்கூட ஏற்றுக்கொள்ள முடியவில்லை' என்று பதிவிட்டு உள்ளார்.
इतना झूठ Teleprompter भी नहीं झेल पाया।
— Rahul Gandhi (@RahulGandhi) January 18, 2022
For those jobless dolts who've made the teleprompter an issue!! This should settle the matter...better luck next time!! pic.twitter.com/i77zjMT4mw
— Priti Gandhi - प्रीति गांधी (@MrsGandhi) January 18, 2022
Worst nightmare of @narendramodi #TELEPROMPTER FAILURE 🥶 #TeleprompterPM pic.twitter.com/Ue3vNMIPT0
— இசை (@isai_) January 18, 2022
முன்னதாக டெலிப்ராம்டர் உதவி இல்லாமல் பிரதமர் மோடியால் பேசவே முடியாது என ராகுல் காந்தி கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.