மேலும் அறிய

Rahul Gandhi: பாரத் ஜோடோ நியாய யாத்திரையில் பங்கேற்ற தேஜஸ்வி யாதவ் - ராகுல் காந்தியுடன் கார் பயணம்!

Rahul Gandhi: பாரத் ஜடோ நியாய யாத்திரையில் பிகாரின் முன்னாள் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் பங்கேற்று ராகுல் காந்திக்கு ஆதரவு தெரிவித்தார்.

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் பாரத் ஜடோ நியாய யாத்திரையில் பிஹார் முன்னாள் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் பங்கேற்றார். 

ராகுல் காந்தி தலைமையில் பாரத் ஜடோ நியாய யாத்திரை கடந்த 14ம் தேதி மணிப்பூரில் தொடங்கியது.  மேகாலயா, ஜார்கண்ட்.அஸ்ஸாம், மேற்கு வங்கம் என பல்வேறு மாநிலங்களை அடுத்து பிஹாரில் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அம்மாநிலத்தில் உள்ள  சசரம் (Sasaram) பகுதியிலிருந்து தொடங்கிய பயணத்தில் ராஷ்டிரிய ஜனதா தள (Rashtriya Janata Dal) தலைவர் தேஜஸ்வி யாதவ் ராகுல் காந்தியுடன் இணைந்துள்ளார். 

சிகப்பு நிற காரில் ராகுல் காந்தியுடன் தேஜஸ்வி கார் ஓட்டிச்செல்லும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. 

நிதிஷ் குமார், பா.ஜ.க. கூட்டணியில் இணைந்துள்ள நிலையில், பிஹாரில் ராகுல் காந்தியின் பயணம் பெரிது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இன்று மதியம் 2.30 மணிக்கு  கைமூரில் (Kaimur) நடைபெறும் பொதுக் கூட்டத்தில் ராகுல் காந்தியும் தேஜஸ்வியும் உரையாற்ற உள்ளனர்.

I.N.D.I.A. கூட்டணியிலிருந்து பிஹார் முதலமைச்சர் நிதிஷ் குமார் வெளிய பிறகு,தேஜஸ்வி யாதவ் ராகுல் காந்தியுடன் இணைந்து பங்கேற்கும் முதல் பொதுக்கூட்டம் இது. 

 ராகுல் காந்தியில் நியாய யாத்திரை பிகாரை அடுத்து இன்று மாலை உத்தர பிரதேசத்தின் சண்டெளலி (Chandauli) பகுதியை அடைகிறது. அங்கு நடைபெறும் பயணத்தில் காங்கிரஸ் பொதுச் செயலாளர், எம்.பி. பிரியங்கா காந்தி பங்கேற்கிறார்.

 கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பர் 7-ம் தேதி  தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் இருந்து, ராகுல் காந்தி தனது பாரத் ஜோடோ யாத்திரையை தொடங்கினார். பல்வேறு மாநிலங்கள் வழியிலான இந்த பயணம் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 30ம் தேதி அன்று ஜம்மு-காஷ்மீரில் முடிவடைந்தது.

பாரத் ஜடோ நியாய யாத்திரை

ராகுல் காந்தி  பாரத் நியாய யாத்திரை என்ற பெயரில் தனது இரண்டாவது கட்ட நடைபயணத்தை தொடங்கியுள்ளார். மணிப்பூரில் தொடங்கிய இந்த பயணம் மும்பையில் முடிவடைய உள்ளது. 

Freelancer Jhansi Rani. MA
Read More

தலைப்பு செய்திகள்

Top 10 News Headlines: முதலமைச்சரை சந்தித்த அன்புமணி, அமைச்சருக்கு ஷாக், ட்ரம்ப் வார்னிங் - 11 மணி வரை இன்று
முதலமைச்சரை சந்தித்த அன்புமணி, அமைச்சருக்கு ஷாக், ட்ரம்ப் வார்னிங் - 11 மணி வரை இன்று
LPG Cylinder: இனி 4 சிலிண்டருக்கு தான்..! விலையை ஏற்றி, மானியத்தையும் குறைத்த மத்திய அரசு - காங்., சாடல்
LPG Cylinder: இனி 4 சிலிண்டருக்கு தான்..! விலையை ஏற்றி, மானியத்தையும் குறைத்த மத்திய அரசு - காங்., சாடல்
Youtubeல் ஹோம் டூர் வீடியோ.. வீடு புகுந்து நகை, பணத்தை திருடிய கும்பல்.. அதிர்ச்சியில் பெண் பிரபலம்!
Youtubeல் ஹோம் டூர் வீடியோ.. வீடு புகுந்து நகை, பணத்தை திருடிய கும்பல்.. அதிர்ச்சியில் பெண் பிரபலம்!
இந்தியா கூட்டணி கூட்டத்திலேயே காங்கிரஸை பொளந்த திருமாவளவன்; விழிபிதுங்கிய ராகுல் - நடந்தது என்ன?
இந்தியா கூட்டணி கூட்டத்திலேயே காங்கிரஸை பொளந்த திருமாவளவன்; விழிபிதுங்கிய ராகுல் - நடந்தது என்ன?

வீடியோ

C Vijayabaskar: திமுக போகும் விஜயபாஸ்கர்? கட்சியில் முக்கிய பொறுப்பு ஸ்டாலின் கணக்கு என்ன?
Dindigul TVK | ”மா.செ-வை உடனே மாத்துங்க” தவெகவில் கோஷ்டி பூசல்! அமைச்சரை சந்திப்பதில் சண்டை
Perambur murder | துண்டு துண்டாக கிடந்த கணவர்!உள்ளாடையால் சிக்கிய மனைவி!கள்ளக்காதலனுடன் சதித்திட்டம்
DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
Annamalai New Party |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
LPG Cylinder: இனி 4 சிலிண்டருக்கு தான்..! விலையை ஏற்றி, மானியத்தையும் குறைத்த மத்திய அரசு - காங்., சாடல்
LPG Cylinder: இனி 4 சிலிண்டருக்கு தான்..! விலையை ஏற்றி, மானியத்தையும் குறைத்த மத்திய அரசு - காங்., சாடல்
Trump Vs Netanyahu: “உங்கள தனியா நிக்க வச்சுடுவேன்“ - நெதன்யாகுவுக்கு எச்சரிக்கை; ஈரானுக்காக ‘U‘ டர்ன் அடித்த ட்ரம்ப்
“உங்கள தனியா நிக்க வச்சுடுவேன்“ - நெதன்யாகுவுக்கு எச்சரிக்கை; ஈரானுக்காக ‘U‘ டர்ன் அடித்த ட்ரம்ப்
TN By-Election: இடைத்தேர்தலுக்கு ரெடி.. ADMK MLA-க்களுக்கு வாய்ப்பு மறுத்த TVK? சொந்த பாய்ஸிற்கு ஜாக்பாட்..!
இடைத்தேர்தலுக்கு ரெடி.. ADMK MLA-க்களுக்கு வாய்ப்பு மறுத்த TVK? சொந்த பாய்ஸிற்கு ஜாக்பாட்..!
Top 10 News Headlines: முதலமைச்சரை சந்தித்த அன்புமணி, அமைச்சருக்கு ஷாக், ட்ரம்ப் வார்னிங் - 11 மணி வரை இன்று
முதலமைச்சரை சந்தித்த அன்புமணி, அமைச்சருக்கு ஷாக், ட்ரம்ப் வார்னிங் - 11 மணி வரை இன்று
US H-1B Visa Fee: ஹேப்பி அண்ணாச்சி.! H-1B விசா கட்டணம் ரத்து; ட்ரம்ப்புக்கு ஆப்பு வைத்த அமெரிக்க நீதிமன்றம்
ஹேப்பி அண்ணாச்சி.! H-1B விசா கட்டணம் ரத்து; ட்ரம்ப்புக்கு ஆப்பு வைத்த அமெரிக்க நீதிமன்றம்
John Britto: விஷயம் தெரியாமல் வாய்விட்ட (அ)திமுகவினர்? ஜான் பிரிட்டோ பெயரால் வந்த குழப்பம் - எல்லாமே பொய்யா?
விஷயம் தெரியாமல் வாய்விட்ட (அ)திமுகவினர்? ஜான் பிரிட்டோ பெயரால் வந்த குழப்பம் - எல்லாமே பொய்யா?
Vairamuthu: ஸ்டாலின் தோல்வி.. கொளத்தூர் மக்களை சாடிய வைரமுத்து.. நன்றியுணர்வு மீது சந்தேகம்!
Vairamuthu: ஸ்டாலின் தோல்வி.. கொளத்தூர் மக்களை சாடிய வைரமுத்து.. நன்றியுணர்வு மீது சந்தேகம்!
TN Weather Update: இடி, மின்னல், பலத்த காற்றுடன் 10 மாவட்டங்களில் கனமழை, சென்னை? தமிழக வானிலை நிலவரம் என்ன?
இடி, மின்னல், பலத்த காற்றுடன் 10 மாவட்டங்களில் கனமழை, சென்னை? தமிழக வானிலை நிலவரம் என்ன?
Embed widget