Watch Video | இத்தனை பேர் இறந்திருக்காங்க..! கையில் லிஸ்டுடன் வேளாண் சட்டம் குறித்து கொதித்த ராகுல்காந்தி!
மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு மத்திய அரசு எப்போது இழப்பீடு தரும் - ராகுல் காந்தி கேள்வி
மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு மத்திய அரசு எப்போது இழப்பீடு தரும் என நாடாளுமன்ற உறுப்பினரும், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் செயல் தலைவருமான ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
My interaction with members of the Press about the farmers’ crisis. https://t.co/9kfvhCNxER
— Rahul Gandhi (@RahulGandhi) December 3, 2021
டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை செயலகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் ராகுல் காந்தி கலந்து கொண்டார்.
நடப்பு குளிர்கால கூட்டத் ஹ்டோடரில், வேளாண் போராட்டத்தில் உயிரிழந்த விவாசயிகளின் தரவுகள் அரசிடம் ஏதுமில்லை என்ற மத்திய அரசின் பதிலை கடுமையாக சாடிய ராகுல் காந்தி, "அரசுக்கு நிவாரணம் வழங்கும் எண்ணம் இல்லாததால் தான் போராட்டத்தில் இறந்த விவசாயிகளின் விவரங்கள் இல்லை என்று சொல்லுகிறது" என்று தெரிவித்தார்.
மேலும், வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடி உயிர் நீத்த விவசாயிகளின் பட்டியலையும் பத்திரிகையாளர் சந்திப்பில் ராகுல் காந்தி வெளியிட்டார். மோடி அரசிடம் பணக்கார நண்பர்களின் எண்கள்தான் இருக்கும். எங்களிடம் இறந்த விவசாயிகளின் விவரங்கள் உள்ளன. இறந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு அரசாங்கம் இழப்பீடு வழங்க வேண்டும். இந்த பட்டியலில் உயிரிழந்த விவசாயிகளின் கும்பத்தினரின் விலாசம், தொலைபேசி எண்கள் உள்ளது" என்றும் தெரிவித்தார்.
சட்ட எதிர்ப்புப் போராட்டத்தில் உயரிழந்த 403 விவசாயிகளின் குடும்பங்களுக்கு பஞ்சாப் அரசு மனிதாபிமான அடிப்படையில் 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கியுள்ளது. ஆனால், இதற்கு முழு பொறுபேற்க வேண்டிய மத்திய அரசு இன்னும் நிவாரணம் வழங்கவில்லை. நாளை மறுநாள் உயிரிழந்த விவசாயிகளின் பட்டியலை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளோம் என்றும் அவர் தெரிவித்தார்.
My interaction with members of the Press about the farmers’ crisis. https://t.co/9kfvhCNxER
— Rahul Gandhi (@RahulGandhi) December 3, 2021
மேலும், லக்மிபூர் நிகழ்வுக்கு அமைச்சரை பதவி நீக்கம் செய்வது எப்போது? போராடிய விவசாயிகள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை திரும்பப் பெறுவது எப்போது? வேளாண் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை உறுதி செய்யும் சட்ட மசோதாவை எப்போது கொண்டு வரப்படும்? என்று அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்தார். விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை பிரதமர் கேட்ட மன்னிப்பு வெறும் கண் துடைப்புதான் என்றும் குறிப்பிட்டார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்