மேலும் அறிய

Rahul Gandhi: பொய்களால் கட்டமைக்கப்பட்ட ராகுல் காந்தியின் H-Files; அம்பலமான ‘வாக்கு திருட்டு‘ நாடகம்

கடந்த 2024-ம் ஆண்டு, ஹரியானா தேர்தலில் ராகுல் காந்தி சுமத்திய “வாக்கு திருட்டு” குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்பது உண்மை கண்டறிதல் மூலம் அம்பலமாகியுள்ளது.

2024 ஹரியானா சட்டசபைத் தேர்தலில் பெரும் “வாக்கு திருட்டு” நடந்ததாக சமீபத்தில் செய்தியாளர் சந்திப்பை நடத்தி ராகுல் காந்தி குற்றம்சாட்டினார். ஆனால், உண்மை கண்டறிதலில், ​​அவரது குற்றச்சாட்டுகள் ஒன்றன்பின் ஒன்றாக அடிபட்டுவிட்டது. தனது “H-Files” மூலம் அவர் வைத்த குற்றச்சாட்டுகள் நன்கு திட்டமிட்ட ஒரு தவறான தகவல் பிரசாரமாகவே மாறியுள்ளது.

ராகுல் காந்தியின் அனைத்து குற்றச்சாட்டுகளும் பொய்யானது

முதலாவது குற்றச்சாட்டாக, வயதான ஒரு பெண்மணியின் பெயர், தாகோலா கிராமத்தில் உள்ள ஒரு வாக்குச் சாவடியில் 220 முறை வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றதாக ராகுல் காந்தி கூறினார். ஆனால், அந்தப் பட்டியல் “முலானா” தொகுதியில் இருந்தது. அங்கு காங்கிரஸ் தான் வெற்றி பெற்றது. உண்மையில், வாக்காளர் எண்ணிக்கை அதிகமானால் தேர்தல் ஆணையம் புதிய பூத் பிரிவுகளை உருவாக்குவது வழக்கமான ஒன்று. அது சாதாரண நிர்வாக நடைமுறைதான், மோசடி அல்ல.

அடுத்ததாக, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு பற்றிய குற்றச்சாட்டு. பொதுவாக தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை நம்பாத ராகுல் காந்தி, சில கருத்துக் கணிப்புகள் காங்கிரஸுக்கு சாதகமாக வந்தவுடன், அதையே முக்கிய சான்றாக எடுத்துக் கொண்டார். இதுவே ராகுல் காந்தியின் இரட்டை நிலைப்பாட்டை காட்டுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

அதன்பின், தபால் வாக்கு குறித்து அவர் கூறியதெல்லாம் தவறான விளக்கம் என்பது தெரியவந்துள்ளது. ஹரியானாவில் மொத்த தபால் வாக்குகள் 0.57 சதவீதம் மட்டுமே. இத்தனை சிறிய எண்ணிக்கையை கொண்டு பெரிய அளவிலான மோசடி நடந்தது எனச் சொல்லுவது அபத்தமானதாகும். மேலும், பல இடங்களில் பாஜக தான் தபால் வாக்குகளில் முன்னிலையில் இருந்து இறுதியில் தோற்றது என்பது பதிவாகியுள்ளது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான 99.43 சதவீத வாக்குகளை விட்டுவிட்டு, ஒரு சதவீதத்திற்கும் குறைவான தபால் வாக்குகளை வைத்து அவர் சுமத்திய குற்றச்சாட்டு, வேண்டுமென்றே ஜோடிக்கப்பட்டது என தெளிவாகிறது.

வெட்டி ஒட்டி வெளியிடப்பட்ட பொய்யான வீடியோ

மேலும், முதலமைச்சர்ர் நயாப் சிங் சைனியின் பேச்சை துண்டித்து வெளியிட்டு “வாக்கு திருட்டு ஒப்புதல்” என ராகுல் காந்தி வதந்தி பரப்பினார். ஆனால், அந்த முழு வீடியோவில், “தனியாக அரசு அமைக்கும் நம்பிக்கை” குறித்து அவர் கூறியிருந்தார் என்பது பின்னர் உறுதியானது. பின்னர், அது குறித்து முதலமைச்சர் சைனி ராகுல் காந்தியை விமர்சித்தது தனிக்கதை.

அதேபோல, ஒரே பெண் 22 முறை வாக்களித்தார் என்ற ராகுலின் குற்றச்சாட்டும், முழுக்க முழுக்க புனையப்பட்டது என்பதும் தெரியவந்துள்ளது. பெயர் வேறுபாடு, குடியிருப்பு மாற்றம் போன்ற காரணங்களால், சில பெயர்கள் இருமுறை தோன்றலாம். தேர்தல் ஆணையம் அவற்றை திருத்துவது வழக்கம். இதற்கு எந்த சட்டபூர்வ புகாரும் காங்கிரஸால் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

குற்றச்சாட்டில் வெளிநாட்டையும் இழுத்த ராகுல்

இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக, பிரேசில் நாட்டைச் சேர்ந்த மாடல் ஒருவரின் புகைப்படத்தை பயன்படுத்தி “நகல் வாக்காளர் அடையாளம்” என காங்கிரஸ் காட்டியது. ஆனால், அந்த பிரேசில் நாட்டு மாடல், தனக்கு இந்திய அரசியலோடு தொடர்பே இல்லை என தெரிவித்திருந்தார். இதுவே காங்கிரஸின் தவறான பிரசாரத்தின் உச்சநிலையை காட்டுகிறது.

மொத்தத்தில், ராகுல் காந்தியின் “H-Files”, உண்மைக்குப் புறம்பான நாடகம் என்பது தெளிவாகிறது. எந்த ஒரு குற்றச்சாட்டுக்கும் உண்மையான ஆதாரமே இல்லை. தேர்தல் முறைகள் வெளிப்படையாகவும், சட்டப்படியும் நடைபெற்றுள்ளன. மொத்தத்தில், ராகுல் காந்தி சொன்னது போல் உண்மையில் “வாக்கு திருட்டு” நடைபெறவில்லை. மாறாக, ராகுல் காந்தியால்உண்மை திருட்டுநடத்தப்பட்டுள்ளது என்பதே தெளிவாகிறது.

 

 

தலைப்பு செய்திகள்

வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட்டில் ரயிலில் பயணிக்க முடியுமா? இந்திய ரயில்வேயின் முக்கிய விதிகள் என்ன?
வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட்டில் ரயிலில் பயணிக்க முடியுமா? ரயில்வேயின் முக்கிய விதிகள் என்ன?
திடீரென மாமல்லபுரம் வரும் அமித் ஷா.. நேரில் சந்திக்கும் தென் மாநில முதல்வர்கள்! நடப்பது என்ன?
திடீரென மாமல்லபுரம் வரும் அமித் ஷா.. நேரில் சந்திக்கும் தென் மாநில முதல்வர்கள்! நடப்பது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
கேப் டிரைவருக்கு 100 ஆண்டு ஓட்ட தடை.. ரேபிடோவின் அநியாயம்.. கொதிக்கும் நெட்டிசன்கள் - நடந்தது என்ன?
கேப் டிரைவருக்கு 100 ஆண்டு ஓட்ட தடை.. ரேபிடோவின் அநியாயம்.. கொதிக்கும் நெட்டிசன்கள் - நடந்தது என்ன?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
Netanyahu Fail in Polls: பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
Gold and Silver Rate Aug.19th: காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Araghchi Vs Trump: “பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
“பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
Skoda Comeback Cars: ஸ்கெட்ச் போடும் ஸ்கோடா.! சூப்பர்ப் மாடலில் மீண்டும் டீசல் எஞ்சின்; கம்பேக் கொடுக்கும் ஆக்டேவியா; பிளான் என்ன.?
ஸ்கெட்ச் போடும் ஸ்கோடா.! சூப்பர்ப் மாடலில் மீண்டும் டீசல் எஞ்சின்; கம்பேக் கொடுக்கும் ஆக்டேவியா; பிளான் என்ன.?
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
Maruti Baleno: குறைந்த பட்ஜெட்டில் பிரீமியம் கார்: ரூ.50,000 முன்பணத்தில் மாருதி பலேனோ- EMI திட்டம்!
Maruti Baleno: குறைந்த பட்ஜெட்டில் பிரீமியம் கார்: ரூ.50,000 முன்பணத்தில் மாருதி பலேனோ- EMI திட்டம்!
Embed widget