Hacking' Alerts: ”முடிந்தால் என் போனை ஹேக் செய்; பிரதமரின் ஆன்மா அதானியிடம் உள்ளது”: மத்திய அரசை சாடிய ராகுல் காந்தி!
முதலில் நான் நம்பர் ஒன் பிரதமர், நம்பர் 2 அதானி, நம்பர் 3 அமித் ஷா என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் இப்போது இந்த அரசியலை புரிந்து கொண்டோம் என ராகுல் காந்தி பேசியுள்ளார்.

காங்கிரஸ், டிஎம்சி, ஆம் ஆத்மி உள்ளிட்ட பல கட்சிகளின் தலைவர்கள் தங்கள் தொலைபேசிகள் மற்றும் மின்னஞ்சல்களில் ஆப்பிள் நிறுவனத்திடமிருந்து எச்சரிக்கைகள் வந்ததாகக் கூறியுள்ளனர். அவர்களின் தொலைபேசிகள் மற்றும் மின்னஞ்சல்களை அரசாங்கம் ஹேக் செய்ய முயற்சிப்பதாக கண்டனம் எழுந்தது. எதிர்க்கட்சி தலைவர்களின் இந்த கூற்றுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மத்திய அரசை கடுமையாக சாடியுள்ளார். அப்போது அவர், “முடிந்தால் என் போனை ஹேக் செய், நானே எனது போனை தருகிறேன். எனக்கு எந்த கவலையும் இல்லை. இதற்கெல்லாம் நாங்கள் பணிய மாட்டோம், தொடர்ந்து போராடுவோம்” என்றார்.
ராஜா கதையை சொன்ன ராகுல் காந்தி:
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஒரு வயதான ராஜாவின் கதையை மேற்கோள் காட்டி, “பல ஆண்டுகளுக்கு முன்பு, இந்தியாவில் ஒரு மன்னர் இருந்தார். எல்லோரும் அவருக்கு எதிராக நின்றனர். பொதுமக்கள், எதிர் நாட்டு மன்னர்கள் என எல்லாரும் அவருக்கு எதிராக போராடி, தாக்குதலையும் தொடுத்தனர்.
#WATCH | Multiple opposition leaders allege 'hacking' of their Apple devices, Congress leader Rahul Gandhi says, "A number of people in my office have got this message... In Congress, KC Venugopal ji, Supriya, Pawan Khera have got it too...They (BJP) are trying to distract the… pic.twitter.com/1euRYvAL6o
— ANI (@ANI) October 31, 2023
இருப்பினும் அந்த மன்னருக்கு எதிராக எவ்வளவு தாக்குதல் நடந்தாலும் அவருக்கு ஒன்றும் நடக்கவில்லை. இதனால் ஒன்றும் புரியாத அண்டை நாட்டு மன்னர்கள் பல வருடங்கள் கழித்து ஒரு முனிவரிடம் சென்று எங்களுக்கு தெளிவான பதிலை சொல்லுங்கள், எங்களுக்கு ஒரு விஷயம் மட்டும் புரியவில்லை. இந்த ராஜாவை நாங்களும் தாக்குகிறோம். அந்நாட்டு பொதுமக்களும் எதிர்க்கிறார்கள். எதுவும் நடக்காதது போல் இருக்கிறார். தொடர்ந்து தாக்குகிறோம் தவறான இடத்திலேயே அம்புகள் விழுகிறது என்று தெரிவித்தனர். அதற்கு அந்த முனிவர் ஞானி, இந்த மன்னனின் ஆன்மா அவருக்குள் இல்லை, இந்த ராஜாவின் ஆன்மா ஒரு கிளியில் உள்ளது. அந்த கிளியிடம் சென்று அரசனைப் பிடி. அப்போது அந்த மன்னர் சாகடிக்கலாம் என்றார்.
நம்பர் 1- அதானி, நம்பர் 2- பிரதமர் மோடி: ராகுல் காந்தி
அதுபோல், பிரதமர் நரேந்திர மோடியின் ஆன்மா அதானியிடம் உள்ளது. கிளி எங்கோ அமர்ந்திருக்கிறது. ஒட்டு மொத்த எதிர்கட்சிகளும் ராஜாவை வெகு நாட்களாக தாக்கிக் கொண்டிருந்தன. ஆனால் ராஜா ஒரு ராஜா இல்லை என்பதே நிதர்சனம். அதிகாரம் வேறொருவரின் கைகளில் உள்ளது. அதானியை தொட்டவுடனே. ஐடி, சிபிஐ, உளவுத்துறை எல்லாம் வீட்டை தேடி வந்துவிடுகிறது. முதலில் நான் நம்பர் ஒன் பிரதமர், நம்பர் 2 அதானி, நம்பர் 3 அமித் ஷா என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் இப்போது இந்த அரசியலை புரிந்து கொண்டோம். நம்பர் 1- அதானி, நம்பர் 2- பிரதமர் மோடி மற்றும் நம்பர் 3- அமித் ஷா.
அதானி ஜியால் தப்பிக்க முடியாது. திசை திருப்பும் அரசியல் நடந்து கொண்டிருக்கிறது. எனது அலுவலகத்தில் உள்ள பலருக்கு இந்த செய்தி கிடைத்துள்ளது. காங்கிரஸில் கே.சி. வேணுகோபால் ஜி, சுப்ரியா, பவன் கேரா ஆகியோருக்கும் தங்களது மொபைல் ஹேக் செய்ய படுவதாக தகவல் கிடைத்துள்ளது. பாஜக இளைஞர்களின் கவனத்தை திசை திருப்ப முயற்சிக்கின்றனர். அதானி ஜி என்பது தற்போது நாட்டில் நடந்து வரும் ஏகபோகத்தின் அடையாளமாகும். பாஜகவின் நிதி அமைப்பு அதானியுடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளது." என்று தெரிவித்தார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

