மேலும் அறிய

Raghav Chadha: ஆம் ஆத்மிக்கு ஆபத்து; பாஜகவில் இணையும் ராகவ் சத்தா உள்ளிட்ட மாநிலங்களவை எம்.பி-க்கள்; டெல்லியில் பரபரப்பு

Raghav Chadha Joins BJP: ஆம் ஆத்மி கட்சியில் பெரும் பிளவு ஏற்பட்டுள்ளது. மூன்றில் இரண்டு பங்கு எம்.பி-க்கள் பாஜகவில் இணைவார்கள் என்று மாநிலங்களவை எம்.பி. ராகவ் சதா கூறியுள்ளார். இதனால் டெல்லி அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஆம் ஆத்மி கட்சியின் நிறுவன உறுப்பினரும், மாநிலங்களவை உறுப்பினருமான ராகவ் சத்தா, இன்று ஒரு செய்தியாளர் சந்திப்பை நடத்தி, ஆம் ஆத்மி கட்சியிலிருந்து தனது ராஜினாமாவை அறிவித்தார். சத்தாவுடன், சந்தீப் பதக் மற்றும் அசோக் மிட்டல் ஆகியோரும் மாநிலங்களவையிலிருந்து ராஜினாமா செய்தனர். மேலும், மூன்றில் இரண்டு பங்கு எம்.பி-க்கள் பாஜகவில் இணைவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

“பாஜகவுடன் இணைகிறோம்“

இது குறித்து பேசிய ஆம் ஆத்மி கட்சித் தலைவர் ராகவ் சத்தா, "நாங்கள் பாஜகவுடன் இணைகிறோம். கடந்த 12 ஆண்டுகளில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு, முன்பு பல தலைவர்கள் எடுக்க அஞ்சிய பல முடிவுகளை எடுத்துள்ளது. இந்த தலைமைக்கு மக்கள் ஒருமுறை அல்ல, மும்முறை ஒப்புதல் அளித்துள்ளனர். பிரதமர் மோடியின் தலைமையில் நாங்கள் நாட்டிற்காக பணியாற்றுவோம்," என்று கூறியுள்ளார்.

மேலும், "15 ஆண்டுகளாக என் ரத்தத்தால் நான் வளர்த்தெடுத்த ஆம் ஆத்மி கட்சி, தன் பாதையை இழந்துவிட்டது. இப்போது அது தேசிய நலனுக்காகச் செயல்படாமல், தனிப்பட்ட ஆதாயத்திற்காகச் செயல்படுகிறது. நான் ஆம் ஆத்மி கட்சியிலிருந்து விலகி, மீண்டும் மக்களிடம் திரும்புகிறேன். இந்தக் கட்சியை டெல்லி, பஞ்சாப் மற்றும் நாடு முழுவதும் உள்ள பிற மாநிலங்களுக்கு விரிவுபடுத்த நாம் அனைவரும் ஒன்றிணைந்து உழைத்தோம்," என்றும் அவர் கூறினார்.

பின்னர் பேசிய ஆம் ஆத்மி கட்சித் தலைவர் சந்தீப் பதக், 'என் வாழ்வில் இப்படி ஒரு நிலைமை ஏற்படும் என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை. ஆனால், அது ஏற்பட்டுவிட்டது. நான் 10 ஆண்டுகளாக இந்தக் கட்சியுடன் இணைந்திருந்தேன். இன்று ஆம் ஆத்மி கட்சியிலிருந்து பிரிகிறேன்' என்று கூறினார்.

ஆம் ஆத்மியில் இப்போது எத்தனை எம்.பி-க்கள் இருப்பார்கள்.?

தன்னுடன் 8 எம்.பி.க்கள் இருப்பதாக மாநிலங்களவை எம்.பி. ராகவ் சத்தா கூறியுள்ளார். அவர்கள் அனைவரும் பாரதிய ஜனதா கட்சியுடன் இணைவார்கள். மாநிலங்களவையில் 10 ஆம் ஆத்மி எம்.பி-க்கள் உள்ளனர், அவர்களில் மூன்றில் இரண்டு பங்கிற்கும் அதிகமானோர் எங்களுடன் உள்ளனர் என்று ராகவ் சத்தா கூறியுள்ளார்.

“அவர்கள் கையெழுத்திட்டுள்ளனர். இன்று காலை நாங்கள் கையெழுத்திட்ட கடிதம் மற்றும் ஆவணங்களை மாநிலங்களவை தலைவரிடம் ஒப்படைத்துள்ளோம். அவர்களில் 3 பேர் உங்கள் முன்னால் இங்கே இருக்கிறார்கள். எங்களைத் தவிர, ஹர்பஜன் சிங், ராஜேந்தர் குப்தா, விக்ரம் சாஹ்னி மற்றும் சுவாதி மாலிவால் ஆகியோரும் உள்ளனர்." என்று செய்தியாளர்கள் சந்திப்பில் சத்தா தெரிவித்தார்.

இதையடுத்து, ஆம் ஆத்மி கட்சிக்கு, மாநிலங்களவையில் நாராயண் தாஸ், சஞ்சய் சிங் மற்றும் சந்த் பல்பிர் சிங் ஆகியோர் மட்டுமே எஞ்சியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

தலைப்பு செய்திகள்

வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட்டில் ரயிலில் பயணிக்க முடியுமா? இந்திய ரயில்வேயின் முக்கிய விதிகள் என்ன?
வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட்டில் ரயிலில் பயணிக்க முடியுமா? ரயில்வேயின் முக்கிய விதிகள் என்ன?
திடீரென மாமல்லபுரம் வரும் அமித் ஷா.. நேரில் சந்திக்கும் தென் மாநில முதல்வர்கள்! நடப்பது என்ன?
திடீரென மாமல்லபுரம் வரும் அமித் ஷா.. நேரில் சந்திக்கும் தென் மாநில முதல்வர்கள்! நடப்பது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
கேப் டிரைவருக்கு 100 ஆண்டு ஓட்ட தடை.. ரேபிடோவின் அநியாயம்.. கொதிக்கும் நெட்டிசன்கள் - நடந்தது என்ன?
கேப் டிரைவருக்கு 100 ஆண்டு ஓட்ட தடை.. ரேபிடோவின் அநியாயம்.. கொதிக்கும் நெட்டிசன்கள் - நடந்தது என்ன?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
Netanyahu Fail in Polls: பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
Gold and Silver Rate Aug.19th: காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Araghchi Vs Trump: “பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
“பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
Skoda Comeback Cars: ஸ்கெட்ச் போடும் ஸ்கோடா.! சூப்பர்ப் மாடலில் மீண்டும் டீசல் எஞ்சின்; கம்பேக் கொடுக்கும் ஆக்டேவியா; பிளான் என்ன.?
ஸ்கெட்ச் போடும் ஸ்கோடா.! சூப்பர்ப் மாடலில் மீண்டும் டீசல் எஞ்சின்; கம்பேக் கொடுக்கும் ஆக்டேவியா; பிளான் என்ன.?
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
Maruti Baleno: குறைந்த பட்ஜெட்டில் பிரீமியம் கார்: ரூ.50,000 முன்பணத்தில் மாருதி பலேனோ- EMI திட்டம்!
Maruti Baleno: குறைந்த பட்ஜெட்டில் பிரீமியம் கார்: ரூ.50,000 முன்பணத்தில் மாருதி பலேனோ- EMI திட்டம்!
Embed widget