குடித்துவிட்டு மாமியாரை அடித்த மருமகள்... தலைமுடியை பிடித்து பாட்டிலால் தாக்கிய கொடூரம்!
மது அருந்திவிட்டு தனது மாமியாரை மருகள் ஒருவர் அடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தனது மகன், அம்மா பாட்டிய அடிக்காதீங்க என்று கெஞ்சியும் அவர் தொடர்ந்து தாக்கியுள்ளார்.

மது அருந்திவிட்டு தனது மாமியாரை மருகள் ஒருவர் அடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தனது மகன், அம்மா பாட்டிய அடிக்காதீங்க என்று கெஞ்சியும் அவர் தொடர்ந்து தாக்கியுள்ளார்.
மாமியாரை கொடூரமாக தாக்கிய மருமகள்:
பஞ்சாப் மாநிலம் குருதாஸ்பூர் மாவட்டத்தில், ஒரு மருமகள் தனது வயதான மாமியாரை தனது மகன் முன்னிலையில் அடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது. அதாவது சம்மந்தப்பட்ட அந்த வீடியோவில் ஒரு பெண் தனது மாமியாரை கடுமையாக தாக்குகிறார். அந்தப் பெண் தனது மாமியாரின் தலைமுடியை இழுத்து போட்டு அடிக்கிறார்.
அந்த காட்சிகளை வீடியோவாக எடுத்த அவரது மகன் அம்மா பாட்டியை அடிக்காதீங்க என்று கெஞ்சுகிறார். ஆனால் இதையெல்லாம் கொஞ்சம் கூட காதில் வாங்கமல் தனது மாமியாரை தாக்கிய அந்த பெண்ணின் பெயர் ஹர்ஜீத் கவுர் என்று காவல்துறையினர் விசாரனையில் தெரியவந்திருக்கிறது.
காவல் துறையில் புகார்:
இந்த வீடியோ சமூக வலைதளாங்களில் வைரலானதை தொடர்ந்து, பஞ்சாப் மகளிர் ஆணையம் இந்த சம்பவம் குறித்து தானாக முன்வந்து புகார் அளித்து, குருதாஸ்பூர் மூத்த காவல் கண்காணிப்பாளருக்கு (SSP) கடிதம் எழுதியுள்ளது. இந்த விவகாரத்தை ஒரு மூத்த காவல் அதிகாரி விசாரிக்க வேண்டும் என்றும், அக்டோபர் 2 ஆம் தேதிக்குள் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அறிக்கை அளிக்க வேண்டும் என்றும் ஆணையம் வேண்டுகோள் வைத்துள்ளது. பாதிக்கப்பட்ட குர்பச்சன் கவுர் என்ற பெண், தனது மருமகள் ஹர்ஜீத் கவுர் சிறிது காலமாக தன்னை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் துன்புறுத்தி வருவதாகக் குற்றம் சாட்டி உள்ளார்.
Old lady being assaulted so bad by her daughter-in-law and grandson is making video
— Deepika Narayan Bhardwaj (@DeepikaBhardwaj) October 1, 2025
Please enquire and take action @PP_Gurdaspur @DcGurdaspur @DGPPunjabPolice @PunjabPoliceInd pic.twitter.com/CEs3rrdFa1
நான்கு மாதங்களுக்கு முன்பு ஓய்வுபெற்ற தொகுதி தொடக்கக் கல்வி அதிகாரியான தனது கணவர் இறந்த பிறகு மருமகள் தாக்கும் சம்பவம் அதிகரித்துள்ளது என்றும் கூறியுள்ளார். அதாவது தன்னுடைய பெயருக்கு அனைத்து சொத்துக்களையும் மாற்ற வேண்டும் என்று கூறி தான் மருமகள் மாமியரை தாக்கியது தெரியவந்திருக்கிறது.
முன்னதாக, இந்த வீடியோவை படம்பிடித்த குர்பச்சன் கவுரின் பேரன் சரத்வீர் சிங், தனது தாய் ஒரு குடிகாரி என்றும், தனது பாட்டி மற்றும் தந்தை இருவரையும் அடிக்கடி தாக்குவதாகவும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.





















