மேலும் அறிய

Punjab Internet Ban: மனித வெடிகுண்டுகளை சேர்க்கும் அம்ரித் பால்.. பஞ்சாபில் இணைய சேவை துண்டிப்பு நீட்டிப்பு

பஞ்சாபில் இணைய சேவை துண்டிப்பு இரண்டாவது முறையாக மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

சீக்கிய மதபோதகர் அம்ரித் பாலை தேடும் பண்இ தொடரும் நிலையில், பொதுமக்கள் நலன் கருதி பஞ்சாபில் செல்போன்களுக்கான இணைய சேவை துண்டிப்பு செவ்வாய்க்கிழமை நண்பகல் வரை 12 மணி வரை மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது. 

”இளைஞர்களை மனித வெடிகுண்டுகளாக்கும் அம்ரித் பால்”

தேடப்பட்டு வரும் சீக்கிய மதபோதகர் அம்ரித்பால் சிங் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுந்த வண்ணம் உள்ளன. அதன்படி, போதைப்பொருள் மறுவாழ்வு மையத்தில் உள்ள இளைஞர்களை மூளை சலவை செய்து அவர்களை அம்ரித் மனித வெடிகுண்டுகளாக மாற்றி வருவதாக பல்வேறு பாதுகாப்பு அமைப்புகள் தகவல் தெரிவிக்கின்றன.   அதோடு, குருத்வாரா பகுதியில் ஆயுதங்களை மறைத்து வைத்து, தற்கொலைப்படை தாக்குதல் நடத்த இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து வருவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதையடுத்து, தலைமறைவாக உள்ள அம்ரித்பாலை தேடும் பணிகள் தீவிரமாக முடுக்கிவிடப்பட்டுள்ளன.

இணைய சேவை ரத்து நீட்டிப்பு:

இதனிடையே, அசம்பாவிதங்களை தவிர்க்கும் நோக்கில் பஞ்சாபில் “குரல் அழைப்பு தவிர, அனைத்து மொபைல் இணைய சேவைகள், எஸ்எம்எஸ் சேவைகள் (வங்கி மற்றும் மொபைல் ரீசார்ஜ் தவிர) மற்றும் அனைத்து டாங்கிள் (dongle) சேவைகளும் மொபைல் நெட்வொர்க்குகளில் வழங்கப்படும் பிற சேவைகளும்  பிராந்திய அதிகார வரம்பில் பொது பாதுகாப்பு நலன் கருதி நாளை நண்பகல் 12:00 மணி நேரம் இடைநிறுத்தப்படும்" தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம், பஞ்சாபில் தொடர்ந்து மூன்றாவது நாளாக இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாபில் நடப்பது என்ன?

சீக்கியர்களுக்கு தனி தேசம் உருவாக வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி காலிஸ்தான் இயக்கத்தின் தீவிர ஆதரவாளரான அம்ரித்பால் சிங், தன்னைத் தானே மதபோதகர் என அழைத்து கொள்கிறார். அம்ரித்பாலின் கூட்டாளியான லவ்பிரீத் சிங் என்பவரை பஞ்சாப் போலீசார் கைது செய்து அஜ்னாலா பகுதி சிறையில் அடைத்து வைத்துள்ளனர். லவ்பிரீத் சிங்கை விடுவிக்க வலியுறுத்தி, அம்ரித்பால் சிங்கின் ஆதரவாளர்கள் கைகளில் வாள், துப்பாக்கிகளை ஏந்தியவாறு, கடந்த வாரம் அஜ்னாலா காவல்நிலையத்தை முற்றுகையிட்டு சூறையாடி வன்முறையில் ஈடுபட்டனர்.

இதில் காவல்துறை அதிகாரிகள் உள்பட 6 போலீசார் பலத்த காயமடைந்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும், அம்ரித்பாலின் ஆதரவாளர்கள் 6 பேரை பஞ்சாப் போலீசார் இருதினங்களுக்கு முன்னர் கைது செய்தனர். இதையடுத்து, அம்ரித்பால் சிங்கை கைது செய்யும் நடவடிக்கைகளை போலீசார் தீவிரப்படுத்தினர். ஆனால், அம்ரித்தை கைது செய்தால் கலவரம் ஏற்பட்டு, பஞ்சாப்பில் நடைபெற்று வரும் ஜி20 கூட்டம் பாதிக்கப்படும் என, கைது நடவடிக்கையை தாமதப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இணையதள சேவை துண்டிப்பு நீட்டிப்பு

இதனிடையே, ஜலந்தரின் ஷாகோட் பகுதிக்கு அம்ரித் செல்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததை தொடர்ந்து, ஆதரவாளர்களின் வாகனங்கள் புடைசூழ சென்று கொண்டிருந்த அம்ரித்பால் சிங்கை, பஞ்சாப் சிறப்பு போலீசார் விரட்டினர். ஆனால், போலீசாரின் பிடியில் சிக்காமல் அம்ரித் தப்பினர்.  இதையடுத்து அசம்பாவிதங்களை தவிர்க்கும் நோக்கில் மாநிலம் முழுவதும் 18ம் தேதியன்றே இணையதள சேவைகள் துண்டிக்கப்பட்டது.

தொடர்ந்து, அம்ரித்தின் ஆதரவாளர்கள் 80-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதோடு, அம்ரித்தை தேடும் பணியும் மாநிலம் முழுவதும் முடுக்கிவிடப்பட்டு உள்ளது. இந்நிலையில், இன்று நண்பலுடன் முடியவிருந்து இணைய சேவை துண்டிப்பு, மீண்டும் நாளை நண்பகல் 12 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

Gummidipoondi Gudur Train: தமிழ்நாட்டில் புது ரயில் வழித்தடம் - 90KM நீளம், ரூ.2,229 கோடி ப்ராஜெக்ட் - முழு விவரம்
தமிழ்நாட்டில் புது ரயில் வழித்தடம் - 90KM நீளம், ரூ.2,229 கோடி ப்ராஜெக்ட் - வேலைவாய்ப்பு, பலன் விவரங்கள்
கேரளாவின் அதிசய கோவில்கள்: குறிப்பிட்ட நாட்களில் ஆண்கள் நுழைய தடை ஏன்?
கேரளாவின் அதிசய கோவில்கள்: குறிப்பிட்ட நாட்களில் ஆண்கள் நுழைய தடை ஏன்?
ஓணம் சிறப்பு ரயில்: சென்னை-கொல்லம் பயணிகளுக்கு முக்கிய வழிகாட்டுதல்கள்!விபரம் இதோ.
ஓணம் சிறப்பு ரயில்: சென்னை-கொல்லம் பயணிகளுக்கு முக்கிய வழிகாட்டுதல்கள்!விபரம் இதோ.
மோகன்லால் 'அதிமனோகரம்' படத்திற்குத் தடை: சபரிமலை வனத்துறை அதிரடி!விபரம் இதோ
மோகன்லால் 'அதிமனோகரம்' படத்திற்குத் தடை: சபரிமலை வனத்துறை அதிரடி!விபரம் இதோ

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
Minister Vanniyarasu: ”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
Upcoming Hyundai Cars: வரப்போது 5 ஸ்ட்ராங் ஹைப்ட்ரிட் கார்.. ஹுண்டாய் இறக்கப்போகும் அந்த பஞ்ச பாண்டவர்கள் யார்? யார்?
Upcoming Hyundai Cars: வரப்போது 5 ஸ்ட்ராங் ஹைப்ட்ரிட் கார்.. ஹுண்டாய் இறக்கப்போகும் அந்த பஞ்ச பாண்டவர்கள் யார்? யார்?
Gummidipoondi Gudur Train: தமிழ்நாட்டில் புது ரயில் வழித்தடம் - 90KM நீளம், ரூ.2,229 கோடி ப்ராஜெக்ட் - முழு விவரம்
தமிழ்நாட்டில் புது ரயில் வழித்தடம் - 90KM நீளம், ரூ.2,229 கோடி ப்ராஜெக்ட் - வேலைவாய்ப்பு, பலன் விவரங்கள்
Chennai Bengaluru Bullet Train: 350 கி.மீ SPEED... வெறும் 1.13 மணி நேரம்.! சென்னை- பெங்களூர்- அமராவதி வழியாக புல்லட் ரயில்.! அசத்தல் PLAN
350 கி.மீ SPEED... வெறும் 1.13 மணி நேரம்.! சென்னை- பெங்களூர்- அமராவதி வழியாக புல்லட் ரயில்.! அசத்தல் PLAN
மக்களே...மாதம் 14 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை; ஐடிஐ தொழில் பழகுநர் பயிற்சி- விண்ணப்பிப்பது எப்படி?
மக்களே...மாதம் 14 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை; ஐடிஐ தொழில் பழகுநர் பயிற்சி- விண்ணப்பிப்பது எப்படி?
வீடு கட்ட ரூ.5 லட்சத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு- யாருக்கு கிடைக்கும்.? விண்ணப்பிப்பது எப்படி.?
வீடு கட்ட ரூ.5 லட்சத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு- யாருக்கு கிடைக்கும்.? விண்ணப்பிப்பது எப்படி.?
Embed widget