Accident : புனே அருகே, ஊதுபத்தி தொழிற்சாலையில் பயங்கர தீவிபத்து.. அருகிலிருந்த பள்ளி மாணவர்கள் 400 பேர் நிலை என்ன?
புனே அருகே உள்ள அகர்பத்தி தொழிற்சாலையில் ஏற்பட்ட தீவிபத்தால் ஏராளமான பொருட்கள் எரிந்து சாம்பலாகின.
புனே அருகே உள்ள அகர்பத்தி தொழிற்சாலையில் ஏற்பட்ட தீவிபத்தால் ஏராளமான பொருட்கள் எரிந்து சாம்பலாகின.
புனேவின் அகுர்டியில் உள்ள பந்தர்கர் நகரில் உள்ள அகர்பத்தி குச்சி தயாரிக்கும் தொழிற்சாலையில் இன்று காலை தீடிரென தீவிபத்து ஏற்பட்டது. தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை
தொழிற்சாலையில் அதிகளவு எரியக்கூடிய பொருட்கள் சேமித்து வைத்திருந்ததால், சிறியதாக பற்றிய தீ மடமடவென பரவியது. தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் பரவிய தீயை எவ்வளவோ கட்டுப்படுத்த முயற்சித்தும், தீ கட்டுப்பாட்டை இழந்தது. இதையடுத்து, பிம்ப்ரி-சின்ச்வாட் முனிசிபல் கார்ப்பரேஷன் தீயணைப்புப் பிரிவின் அதிகாரிகள், அருகில் உள்ள பள்ளியிலிருந்து மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களை அதிவேகமாக வெளியேற்றினர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பீனா ஆங்கில மீடியம் பள்ளியில் இருந்து சுமார் 400 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் வெளியேற்றப்பட்டன. தொழிற்சாலையை சுற்றிலும் பெரியளவில் புகைமூட்டம் இருந்ததால், தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர்கள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர்.
இதுகுறித்து தீயணைப்பு அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில்,"பிம்ப்ரி சின்ச்வாட்டின் அகுர்டி பகுதியில் அமைந்துள்ள தூபக் குச்சிகள் தயாரிக்கும் பிரிவில் காலை 11 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. தண்ணீர் டேங்கர்கள் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. தீயை அணைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தீ விபத்துக்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை” என தெரிவித்தார்.