Watch video: புதுச்சேரி மணக்குல விநாயகர் கோயில் லட்சுமி யானையின் கடைசி நிமிடங்கள்..
மணக்குள விநாயகர் கோவிலில் யானை லட்சுமி விடியற்காலை நடை பயிற்சிக்காக ஈஸ்வரன் கோயில் அருகே உள்ள தனது இருப்பிடத்திலிருந்து கல்வே காலேஜ் அருகே நடந்து சென்றபோது திடீரென மயங்கி கீழே விழுந்து உயிரிழந்தது.
உலகப் புகழ் பெற்ற புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலில் யானை லட்சுமி விடியற்காலை நடை பயிற்சிக்காக ஈஸ்வரன் கோயில் அருகே உள்ள தனது இருப்பிடத்திலிருந்து கல்வே காலேஜ் அருகே நடந்து சென்றபோது திடீரென மயங்கி கீழே விழுந்து உயிரிழந்தது.
இந்த வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. காண்பாரோ கண்ணீர் வடிக்க செய்துள்ளது இந்த வீடியோ.
மணக்குள விநாயகர் கோயில் யானை இன்று காலை நடைபயிற்சி மேற்கொண்டபோது மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பக்தர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் புகழ்பெற்ற ஸ்தலம் மணக்குள விநாயகர் ஆலயமாகும் இந்த ஆலயத்தில் உள்ள லட்சுமி என்ற பெண் யானை உள்ளது இது கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கும், வெளிமாநில மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளையும் வெகுவாக கவர்ந்துள்ளது.
தந்தத்துடன் கூடிய பெண் யானையாக காட்சிதந்த லட்சுமி காலில் கொலுசு அணிந்தும் முக்கிய நாட்களில் நெற்றிப்பட்டம் அணிந்தும் காட்சி தந்து இந்த கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு ஆசிர்வாதம் அளித்து அனைவரின் அன்பையும் பெற்றுள்ளது.
இந்த லட்சுமி யானை இந்த கோவிலுக்கு கடந்த 1997-ம் ஆண்டு 6 வயதாக இருக்கும்போது கொண்டு வரப்பட்டது. இந்நிலையில் லட்சுமி வழக்கம்போல் காமாட்சி அம்மன் கோயில் வீதியில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்த போது திடீரென மயங்கி விழுந்து சம்பவ இடத்திலே உயிரிழந்தது.
கரூர்: ஸ்ரீ தர்ம சாஸ்தா ஆலயத்தில் 10ஆம் ஆண்டு உற்சவர் சுவாமி திருவீதி உலா
இதனை பார்த்த அவ்வழியே நடை பயிற்சியில் ஈடுபட்டிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தார்கள் தகவலறிந்து வந்த பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் ஆழ்ந்த சோகத்தில் மூழ்கினர். மேலும் அவர்கள் லட்சுமி யானைக்கு மாலை அனுவித்து மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து வனத்துறை ஊழியர்கள் யானையின் பிரேதத்தை கைப்பற்றி உடற்கூற் ஆய்வு செய்த பின்னரே யானை இறந்ததற்கான காரணம் தெரிய வரும் எனத் தெரிவித்துள்ளனர். லட்சுமி யானை உயிரிழந்த சம்பவம் புதுச்சேரி மக்களிடையே சோகத்தை ஏற்ப்படுத்தி உள்ளது.
நல்லடக்கம்
புதுச்சேரியில் உயிரிழந்த மணக்குள விநாயகர் கோயில் யானையை அடக்கம் செய்ய வனத்துறை பின்புறம் உள்ள ஜே.வி.எஸ் நகருக்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர் யானை நல்லடக்கம் செய்யப்பட்டது. பொதுமக்கள் சோகத்துடன் காணப்பட்டனர்.
தஞ்சையில் ஒரே கோயிலில் 9 அதிசயங்கள்
உலக அதிசயங்கள் ஏழு. ஆனால் தஞ்சையில் ஒரே கோயிலில் ஒன்பது அதிசயங்கள் உள்ளன. அட நம்புங்க. உண்மையிலும் உண்மைதாங்க. அந்த கோயில் எது என்றும்... அந்த 9 அதிசயங்கள் பார்ப்போம் வாங்க.
பிரளயத்தின் முடிவில் ஒரு யுகம் முடிந்து அடுத்த யுகம் தோன்ற வேண்டும். அப்படிதான் பூமியெங்கும் மழை கொட்டத்தீர்த்தது. உயிரினங்கள் அழிய திரும்பிய திசையெல்லாம் வெள்ளம். ஆனால் பூலோகத்தின் ஒரு பகுதி மட்டும் நீரில் மூழ்காமல் திட்டாக நின்றது அதுதான் தென்குடித் திட்டை என்கிற திட்டை.
பெரு வெள்ளத்திலும் மூழ்காத திட்டை தலம் ஒரு அதிசயத்திலும் அதிசயம்தான். இந்த திட்டை வசிஷ்டேஸ்வரர் கோயிலில்தான் இந்த அதிசயங்கள் அடங்கி உள்ளது. இங்கு இறைவனுக்கு நிகராக மிக உயர்ந்த பீடத்தில் அம்பாள் எழுந்தருளியுள்ளார். அம்மன் சன்னதிக்கு மேலே மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக் கட்டங்கள் மேற்கூரையில் செதுக்கப்பட்டுள்ளன. தங்கள் ராசியின் கீழ் நின்று அந்தந்த ராசிக்காரர்கள் அம்மனை வழிபடும்போது அம்மன் தோஷம் நீங்க அருள் பாலிப்பார். திருமணத்தடை, மாங்கல்ய தோஷம் நீங்க அருள்புரிவதால் மங்களாம்பிகை எனப் புகழப்படும் உலகநாயகி இரண்டாவது அதிசயம்.
பழனியில் பெரிய நாயகி அம்மன் கோயில் வருடாபிசேக விழா - திரளான பக்தர்கள் பங்கேற்பு
மும்மூர்த்திகளும் வழிபட்டு வரம் பெற்றது இங்குதான் என்பது மூன்றாவது அதிசயம். மூலவர் வசிஷ்டேசுவரர் விமானத்தில் சந்திரக்காந்தக்கல், சூரியக்காந்தக்கல் வைத்து கட்டப்பட்டுள்ளது. இறைவனுக்கு மேலே உள்ள சந்திரக்காந்தக்கல் காற்றிலிருந்து ஈரப்பதத்தை ஈர்த்து ஒரு நாழிகைக்கு ஒரு சொட்டாக இறைவனுக்கு நித்யாபிஷேகம் செய்யப்படுகிறது. 24 நிமிடங்களுக்கு (ஒரு நாழிகை) ஒரு முறை இறைவன் மீது ஒரு சொட்டு நீர் விழுவதை இப்போதும் உண்டு. எந்த ஒரு சிவன் கோவிலிலும் காண முடியாத அற்புதம் இது. இது நான்காவது அதிசயம். ஆஹா என்கிறீர்களா. இருங்க. இன்னும் 5 அதிசயங்கள் என்னவென்று பாருங்கள்.