Watch Video: கபடி கபடி... சடுகுடு விளையாடும் புதுச்சேரி அமைச்சர் நமச்சிவாயம்- வைரல் வீடியோ!
புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் கபடி விளையாடும் வீடியோ வேகமாக பரவி வருகிறது.
புதுச்சேரி பாஜக சார்பில் தாகூர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கபடி போட்டி ஒன்று நடத்தப்பட்டது. இந்த விளையாட்டு போட்டியை புதுச்சேரியின் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தொடங்கு வைத்தார். அவருடன் புதுச்சேரி மாநில பாஜக தலைவர் சுவாமிநாதன் மற்றும் புதுச்சேரி சட்டமன்ற சபாநாயகர் செல்வம் ஆகியோர் உடன் இருந்தனர்.
இந்த விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்த அமைச்சர் நமச்சிவாயம் முதலில் வீரர்களுடன் கை குழுக்கி வாழ்த்துகளை தெரிவித்தார். அதன்பின்னர் அவரும் வீரர்களுடன் இறங்கி கபடி விளையாடி போட்டியை தொடங்கி வைத்தார். அவருடன் சேர்ந்து சட்டமன்ற சபாநாயகர் செல்வமும் கபடி விளையாடினார்.
Inagurated the kabaddi competition organized by the #BharatiyaJanataParty held at Tagore Arts College Playground along with BJP State President @ShriSamiNathan @embalamrselvam @BlrNirmal @BJP4Puducherry @LGov_Puducherry pic.twitter.com/QTdlASyBff
— A.Namassivayam (@ANamassivayam) January 9, 2022
இது தொடர்பான வீடியோவை நமச்சிவாயம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அந்தப் பதிவை பலரும் பார்த்து அமைச்சரின் செயலை பாராட்டி வருகின்றனர். மேலும் இந்த வீடியோ தொடர்பாக பலரும் தங்களுடைய கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
Inagurated the #kabadicompetition organized by the #BharatiyaJanataParty held at Tagore Arts College Playground along with BJP State President @ShriSamiNathan @embalamrselvam @BlrNirmal @BJP4Puducherry @LGov_Puducherry pic.twitter.com/f7rL8X179U
— A.Namassivayam (@ANamassivayam) January 9, 2022
புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது காரணமாக சில கட்டுப்பாட்டுகளை அரசு விதித்துள்ளது. அத்துடன் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அங்கு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அரசு தீவிரம் காட்டி வருகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் படிக்க: நீண்ட மீசை வைத்திருந்த போலீஸ் கான்ஸ்டபிள்.... சொல்லியும் கேட்காததால் சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுத்த அதிகாரி..!