(Source: ECI/ABP News/ABP Majha)
PSLV C56: வெற்றிகரமாக விண்ணில் சீறிப்பாய்ந்தது பி.எஸ்.எல்.வி-சி 56, வானிலை ஆராய்ச்சிக்கான 7 செயற்கைகோள்கள்..!
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் பி.எஸ்.எல்.வி-சி 56 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் பி.எஸ்.எல்.வி-சி 56 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
பி.எஸ்.எல்.வி-சி 56 ராக்கெட்:
சிங்கப்பூரின் புவி கண்காணிப்பு செயற்கைக்கோளான டிஎஸ் – சாரை சுமந்துக்கொண்டு பி.எஸ்.எல்.வி-சி 56 ராக்கெட் ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது. இதற்கான கவுண்டவுன் நேற்று தொடங்கிய நிலையில், இன்று காலை 6.30 மணியளவில் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து இந்த ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. பிஸ்எல்வி-சி56 இஸ்ரோவின் 90வது விண்வெளி திட்டமாகும்.
#WATCH | Indian Space Research Organisation (ISRO) launches its PSLV-C56 with six co-passenger satellites from Satish Dhawan Space Centre (SDSC) SHAR, Sriharikota.
— ANI (@ANI) July 30, 2023
(Source: ISRO) pic.twitter.com/2I1pNvKvBH
7 செயற்கைக்கோள்கள்:
சிங்கப்பூரின் இந்த DS-SAR செயற்கைக்கோள் ரேடார் இமேஜிங் புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் ஆகும். இத்துடன் நியூஸ்பேஸ் இந்தியா (NewSpace India) என்ற தனியார் நிறுவனத்தின் ஆறு செயற்கைக்கோள்களும் வானிலை தகவல்களுக்காக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது.
535 கி.மீ தூரத்தில் நிலைநிறுத்தப்படும் செயற்கைகோள்கள்:
சிங்கப்பூரைச் சேர்ந்த TeLEOS-2 செயற்கைக்கோள் ஏப்ரல் மாதம் பி.எஸ்.எல்.வி. சி.55 (PSLV-C55) ராக்கெட் மூலம் வெற்றிகரமாக ஏவப்பட்டதைத் தொடர்ந்து தற்போது DS-SAR என்ற செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டுள்ளது. 535 கிமீ உயரத்தில் உள்ள பூமத்திய ரேகைக்கு அருகில் உள்ள சுற்றுப்பாதையில் (NEO) iந்த செயற்கைக்கோள்கள் நிலைநிறுத்தப்பட்டன. கடந்த 14ம் தேதி இந்தியாவின் சந்திரயான் 3 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட நிலையில், தற்போது பி.எஸ்.எல்.வி. சி.56 விண்கலமும் இஸ்ரோவால் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது.
செயற்கைகோள் விவரங்கள்:
டிஎஸ் – சார் 360 கிலோகிராம் எடைகொண்டசெயற்கைகோள், ராணுவ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்துடன் (டிஎஸ்டிஏ) சேர்ந்து உருவாக்கியது. இது சிங்கப்பூர் அரசின் கீழ் செயல்படும் மையமாகும் மற்றும் எஸ்டி இன்ஜினியரிங் என்ற சிங்கப்பூரின் இன்ஜினியரிங் மற்றும் தொழில்நுட்ப குழுவாகும். இந்த செயற்கைகோள் சிந்தடிக் அப்ரேச்சர் ரேடார் தொழில்நுட்பத்தில் செயல்படக்கூடியது. அதாவது பகல் இரவு என அனைத்து காலங்களிலும் துல்லியமாக புகைப்படங்கள் எடுக்கும் தன்மை கொண்டது. கூடுதலாக Velox-AM, ARCADE, SCOOB-II, NuLIoN, Galassia-2, and ORB-12 Strider ஆகிய செயற்கைகோள்கள் பயணிக்கின்றன. வெலாக்ஸ், ஆர்கேட் மற்றும் ஸ்கூப் – 2 சிங்கப்பூர் நயாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்டது. நியூலன் நியூஸ்பேஸ் என்ற சிங்கப்பூரின் ஏரோ ஸ்பேஸ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. சிங்கப்பூரின் காலாசியா – 2 என்பது சிங்கப்பூரின் தேசிய பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்டது. ஓஆர்பி – 12 ஸ்ரைடர், சிங்கப்பூரின் ஸ்பேஸ் டெக் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. ஆர்கேட் என்றால், அட்மாஸ்ஃபெரிக் கப்ளிங் மற்றும் டைனாமிக்ஸ் எக்ஸ்ப்ளோரர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.