Rahul Gandhi : ராகுல் காந்தியிடம் இருந்து வந்த அந்த உருக்கமான மெசேஜ்...மனம் திறந்த பிரியங்கா காந்தி..!
"நாட்டில் நடக்கும் அரசியல் தேசத்திற்கு நன்மை செய்ய முடியாத ஒன்று. பிளவுப்படுத்தும் அரசியல் தேசத்தைப் பாதிக்கிறது" என பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு உள்ளிட்டவற்றுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்திய ஒற்றுமை நடைபயணம் தொடங்கப்பட்டது.
காங்கிரஸ் கட்சியை மக்களிடம் மீண்டும் கொண்டு சேர்க்கும் வகையில் அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, இந்திய ஒற்றுமை நடைபயணத்தை தலைமை தாங்கி நடத்தினார்.
இதில், பலத்தரப்பட்ட மக்களிடம் உரையாடி அவர்களின் குறைகளை கேட்டறிந்து வருகிறார் ராகுல் காந்தி. தமிழ்நாட்டில் தொடங்கப்பட்ட நடைபயணம் கேரளா, கர்நாடகம், ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா, சட்டீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், ஹரியானா, டெல்லி, ஹரியானா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களை தொடர்ந்து காஷ்மீரை சென்றடைந்தது.
இந்நிலையில், 146 நாட்கள் நடந்த இந்திய ஒற்றுமை பயணம் இன்று முடிவுக்கு வந்தது. இதன் நிறைவு விழாவில் 12 எதிர்கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
மு.க. ஸ்டாலின் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக), சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் (என்சிபி), தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆர்ஜேடி), நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம், உத்தவ் தாக்கரேவின் சிவசேனா உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி, ராகுல் காந்தியிடம் வந்த உருக்கமான மெசேஜ் குறித்து பேசினார். அதில், வீட்டுக்கு செல்வது தனித்துவமான உணர்ச்சி என ராகுல் காந்தி கூறியதாக பிரியங்கா காந்தி தெரிவித்தார்.
"இந்த ஐந்து மாத இந்திய ஒற்றுமை நடைபயணத்தில் ராகுல் காந்தி எங்கு சென்றாலும் மக்கள் வந்து ஆதரவு தெரிவித்தனர். இந்த நிலம் மற்றும் அதன் பன்முகத்தன்மையின் மீது இந்த நாட்டில் இன்னும் ஒரு பேரார்வம் உள்ளது.
எனது சகோதரன் காஷ்மீருக்கு செல்லும்போது அம்மாவுக்கும் எனக்கும் மெசேஜ் அனுப்பினார். வீட்டிற்கு செல்வது ஒரு தனித்துவமான உணர்வு என அதில் குறிப்பிட்டிருந்தார். தனக்காக குடும்பத்தினர் காத்திருப்பதாக ராகுல் கூறினார். அவர்கள் வந்து கண்ணீருடன் ராகுலை அணைத்துக்கொள்கிறார்கள். அவர்களின் வலியும் உணர்ச்சிகளையும் ராகுல் காந்தியின் காதுகளில் கூறுகின்றனர்.
कन्याकुमारी से लेकर श्रीनगर तक यात्रा जहां-जहां गई, इस यात्रा को अभूतपूर्व जनसमर्थन मिला।
— Congress (@INCIndia) January 30, 2023
क्योंकि इस देश में अभी एक जज्बा है- देश के संविधान के लिए, देश की धरती के लिए।
: @priyankagandhi जी #BharatJodoYatraFinale pic.twitter.com/pmTqVM9zPK
இங்கு நின்று பார்த்தால், நாட்டில் நடக்கும் அரசியல் தேசத்திற்கு நன்மை செய்ய முடியாத ஒன்று என்று சொல்ல முடியும். பிளவுப்படுத்தும் அரசியல் தேசத்தைப் பாதிக்கிறது. ஆக, இது ஒருவகையில் ஆன்மீக யாத்திரைதான்" என்றார்.