மேலும் அறிய

G20 Summit Delhi: பிரதமர் மோடியுடன் அமெரிக்க அதிபர் பைடன் சந்திப்பு..எதிர்பார்ப்பை எகிற வைக்கும் ஜி20 உச்சி மாநாடு..!

ஜி20 மாநாட்டிற்காக இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன் டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.

G20 Summit Delhi: டெல்லியில் பிரதமர்  மோடியை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சந்தித்து பேசினார்.

இந்தியா வந்தார் ஜோ பைடன்:

உலக பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் நாடுகள் இடம்பெற்றுள்ள, ஜி20 அமைப்பிற்கு இந்த ஆண்டு இந்தியா தலைமை தாங்குகிறது. அதன்படி, அந்த அமைப்பின், உச்சிமாநாடு நாளை (செப்டம்பர் 9) மற்றும் நாளை மறுநாள் (செப்டம்பர் 10)  டெல்லியில் நடைபெற உள்ளது. இந்த ஜி20 உச்சி மாநாட்டில் அமெரிக்கா, கனடா, ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட 20 உறுப்பு நாடுகள் மற்றும் 20 அழைப்பு நாடுகள் என மொத்தம் 40 முக்கிய தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.

இந்நிலையில், ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனி விமானம் மூலம் இன்று இரவு 7.00 மணியளவில்  இந்தியா வந்தடைந்தார். டெல்லி வந்த அதிபர் ஜோ பைடனை மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங் வரவேற்றார். அவருடன் உயர் அதிகாரிகளும் ஜோ பைடனை வரவேற்றனர். ஜோ பைடன் வருகையொட்டி அமெரிக்க அதிபர்கள் பயணிக்கும் தி பீஸ்டு காடில் லாக் காரும் டெல்லி வந்தது. இந்த காரிலேயே ஜோ பைடன் பயணம் மேற்கொண்டுள்ளார். 

பிரதமர் மோடியை சந்தித்தார் அதிபர் ஜோ பைடன்:

இதனை அடுத்து, இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார் ஜோ பைடன்.  லோக் கல்யாண் மார்க்கில் அமைந்துள்ள பிரதமர் மோடியின் இல்லத்தில் மோடியை சந்தித்து பேசினார் ஜோ பைடன். சந்திப்பில் இருநாட்டு தலைவர்களும் இந்திய - அமெரிக்கா இடையேயான உறவை பலப்படுத்துவது உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். சுமார் 1 மணி நேரமாக இந்த சந்திப்பு நடந்தது. இந்த சந்திப்பு குறித்து பிரதமர் மோடி பதிவிட்டுள்ள ட்விட்டரில், "எங்கள் சந்திப்பு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இருநாடுகள் இடையே பொருளாதார ஒத்துழைப்பு உள்ளிட்டவை குறித்து  விவாதித்தோம்.  இந்தியா-அமெரிக்கா நட்புறவு உலக நாடுகளின் நன்மைக்கு தொடர்ந்து பெரும்பங்கு வகிக்கும்" என்று குறிப்பிடிருந்தார்.

விழாகோலம் பூண்ட டெல்லி:

ஜி20 உச்சி மாநாடு நாளை மற்றும் நாளை மறுநாள் டெல்லியில் நடைபெற உள்ளது. இதில் அமெரிக்கா, கனடா, ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட 20 உறுப்பு நாடுகள் மற்றும் 20 அழைப்பு நாடுகள் என மொத்தம் 40 முக்கிய தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.  இதனால் ஒட்டுமொத்த டெல்லியே விழாக்கோலம் பூண்டுள்ளது. அதேநேரம், டெல்லியில் மாநகரம் முழுவதும் வரலாறு காணாத பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. டெல்லி மாவட்டம் முழுவதும் காவல்துறை தங்களது கட்டுப்பாட்டில் எடுத்துள்ள நிலையில், நாளை முதல் பொதுமக்களுக்கு பல்வேறு பயண கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

No Detention Policy: பள்ளிகளில் ஆல் பாஸ் முறை ரத்து ஏன்?- புள்ளிவிவரங்களைப் புட்டுப்புட்டு வைத்த அண்ணாமலை
No Detention Policy: பள்ளிகளில் ஆல் பாஸ் முறை ரத்து ஏன்?- புள்ளிவிவரங்களைப் புட்டுப்புட்டு வைத்த அண்ணாமலை
திமுகவிற்கு ஆதரவு.. அன்புமணி அதிரடி அறிவிப்பு.. முதலமைச்சருக்கு செக்
திமுகவிற்கு ஆதரவு.. அன்புமணி அதிரடி அறிவிப்பு.. முதலமைச்சருக்கு செக்
TN Rain: தமிழ்நாட்டில் மழை பெய்யுமா, பெய்யாதா? வானிலை மையம் சொல்வது என்ன.?
TN Rain: தமிழ்நாட்டில் மழை பெய்யுமா, பெய்யாதா? வானிலை மையம் சொல்வது என்ன.?
5, 8ஆம் வகுப்புக்கு ஆல் பாஸ் முறை ரத்து: கல்வி அமைச்சர் அறிவிப்பு
5, 8ஆம் வகுப்புக்கு ஆல் பாஸ் முறை ரத்து: கல்வி அமைச்சர் அறிவிப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK TVK Alliance | ’’அதிமுக தவெக கூட்டணி! நிச்சயம் ஆட்சியை பிடிக்கும்’’ பற்ற வைத்த அமீர் | AmeerAnnamalai vs Senthil Balaji: டார்கெட் செந்தில்பாலாஜி!அண்ணாமலை பலே ப்ளான்.. OK - சொன்ன மோடி!Vijayadharani Join TVK: தவெகவில் இணையும் விஜயதரணி? பாஜகவிற்கு TATA.. ஸ்கெட்ச் போட்ட விஜய்!TVK Vijay | தவெக-வின் அடுத்த சம்பவம்! 2025-ல் காத்திருக்கும் TWIST இறங்கி அடிக்கும் விஜய்! | Bussy

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
No Detention Policy: பள்ளிகளில் ஆல் பாஸ் முறை ரத்து ஏன்?- புள்ளிவிவரங்களைப் புட்டுப்புட்டு வைத்த அண்ணாமலை
No Detention Policy: பள்ளிகளில் ஆல் பாஸ் முறை ரத்து ஏன்?- புள்ளிவிவரங்களைப் புட்டுப்புட்டு வைத்த அண்ணாமலை
திமுகவிற்கு ஆதரவு.. அன்புமணி அதிரடி அறிவிப்பு.. முதலமைச்சருக்கு செக்
திமுகவிற்கு ஆதரவு.. அன்புமணி அதிரடி அறிவிப்பு.. முதலமைச்சருக்கு செக்
TN Rain: தமிழ்நாட்டில் மழை பெய்யுமா, பெய்யாதா? வானிலை மையம் சொல்வது என்ன.?
TN Rain: தமிழ்நாட்டில் மழை பெய்யுமா, பெய்யாதா? வானிலை மையம் சொல்வது என்ன.?
5, 8ஆம் வகுப்புக்கு ஆல் பாஸ் முறை ரத்து: கல்வி அமைச்சர் அறிவிப்பு
5, 8ஆம் வகுப்புக்கு ஆல் பாஸ் முறை ரத்து: கல்வி அமைச்சர் அறிவிப்பு
RN Ravi Meets PM Modi : ”ஆளுநர் – பிரதமர் சந்திப்பு – இருவரும் பேசியது என்ன?” வெளிவராத விவரங்கள்..!
RN Ravi Meets PM Modi : ”ஆளுநர் – பிரதமர் சந்திப்பு – இருவரும் பேசியது என்ன?” வெளிவராத விவரங்கள்..!
CA Registration: சிஏ முதல்நிலைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்- ஜன.1 கடைசி- எப்படி?
CA Registration: சிஏ முதல்நிலைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்- ஜன.1 கடைசி- எப்படி?
Pudhumai Penn scheme: அடடே.. இனி இவர்களுக்கும் மாதம் ரூ.1000: டிச.30 முதல் அமல்- விவரம்!
Pudhumai Penn scheme: அடடே.. இனி இவர்களுக்கும் மாதம் ரூ.1000: டிச.30 முதல் அமல்- விவரம்!
DMK Alliance: ஆடிப்போன ஸ்டாலின் ”தமிழகத்தில் அதிக ஆணவக் கொலைகள், தலித் கொடுமைகள்
DMK Alliance: ஆடிப்போன ஸ்டாலின் ”தமிழகத்தில் அதிக ஆணவக் கொலைகள், தலித் கொடுமைகள்" கூட்டணி கட்சி போட்ட பழி
Embed widget