PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
குழந்தை போல ராகுல் காந்தி பேசியதாகவும் மக்களவையில் சிறுபிள்ளைத்தனமான சேட்டைகளில் ஈடுபட்டதாகவும் பிரதமர் மோடி கடுமையாகச் சாடி உள்ளார்.
குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு பிரதமர் மோடி இன்று (ஜூலை 2) பதிலுரை ஆற்றினார்.
பிரதமர் மோடி பேசத்தொடங்கியதும் பாஜக எம்.பிக்கள் மோடி, மோடி என முழக்கமிட்டனர். உடனே எதிர்க்கட்சி எம்.பிக்கள் கூச்சலிட்டு கடும் அமளியில் ஈடுபட்டனர். தமிழக எம்.பி.க்கள் காப்பாற்று, காப்பாற்று என்று முழக்கத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவற்றுக்கு மத்தியில் பேசிய பிரதமர் மோடி “பள்ளி மாணவர் போல உண்மையைச் சொல்லாமல், பிறரைக் குற்றம்சாட்டி சிலர் பேசுகின்றனர். ஓபிசிக்களை அவமதித்த வழக்கில் பிணையில்தான் ராகுல் காந்தி வெளியில் வந்திருக்கிறார். மக்களவையில் ராகுல் காந்தியின் சிறுபிள்ளைத்தனமான சேட்டைகளை நாம் அனைவரும் பார்த்தோம். அவரின் செயல் நாடாளுமன்றத்தின் அனைத்து வரையறைகளையும் கடந்துவிட்டது.
"Lies regarding EVM... lies regarding Constitution... lies regarding reservation... before that, lies regarding Rafale, HAL, LIC, banks... They even had the courage to mislead the House yesterday. They told lies regarding Agniveer. They said that MSP is not being given : PM Modi pic.twitter.com/64Igy8VjvT
— SansadTV (@sansad_tv) July 2, 2024
நாடாளுமன்றத்தில் அனைவரையும் தவறுதலாக வழிநடத்திய ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும். கோடிக்கணக்கான இந்துக்களை ராகுல் காந்தி புண்படுத்தி விட்டார். இந்துக்களை அவமதிப்பதை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள முடியாது. மக்களவையில் அவர் பேசியதற்கு,100 ஆண்டுகள் ஆனாலும் காங்கிரஸை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்” என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
இதனிடையே நீட் தேர்வு குறித்து நாளை நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இதையும் வாசிக்கலாம்: "சிலரின் வலியை புரிந்து கொள்ள முடிகிறது" நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் மீது பிரதமர் மோடி தாக்கு!