மந்திரம் சொல்லியபடியே தாலியின் தங்கம் அபேஸ் : திருமண வீடியோவில் சிக்கிய புரோகிதர்

ஒரு புரோகிதர் மணமகன் கட்டும் தாலியில் இருந்து தங்கக்குண்டுகளை திருடிச்சென்ற சம்பவம் தெலங்கானாவில் நடந்துள்ளது.

FOLLOW US: 

திருமணம் என்றால் பலர் புரோகிதர்களை வைத்து வேதமந்திரங்கள் ஓதி, சில சம்பிரதாய பூஜைகள் செய்து செய்வார்கள். பெரியோர்கள் முன்னிலையில் நடைபெறும் இதுமாதிரியான வேதமந்திரங்கள் ஓதப்படும் திருமணங்களுக்கு புரோகிதர்தான் மிக முக்கியமானவர் என கருதப்படுகிறது. அப்படிப்பட்ட ஒரு புரோகிதர் மணமகன் கட்டும் தாலியில் இருந்து தங்கக் குண்டுகளை திருடிச்சென்ற சம்பவம் தெலங்கானாவில் நடந்துள்ளது. மந்திரத்தை ஓதிக்கொண்டே சர்வ சாதாரணமாக தங்கத்தை பாக்கெட்டில் போட்டுச்சென்ற புரோகிதர் திருமண வீடியோவால் சிக்கியுள்ளார்.மந்திரம் சொல்லியபடியே தாலியின் தங்கம் அபேஸ் : திருமண வீடியோவில் சிக்கிய புரோகிதர்

தெலங்கானா மாநிலம் மேதக் மாவட்டத்தில் 16-ஆம் தேதி ஞானசந்தர் தாஸ்க்கும் - வசந்தாவிற்கும் திருமணம் நடைபெற்றது.  வேத மந்திரங்கள் ஓதி முறைப்படி சம்பிரதாய சடங்குடன் திருமணத்தை நடத்த நினைத்த இருவீட்டாரும் புரோகிதர் ஒருவரை அழைத்திருந்தனர். திருமண மேடையில் பலமாக வேத மந்திரங்களை ஓதிய புரோகிதர் மணமகள் தாலியில் கோர்க்க வேண்டிய தங்கக்குண்டுகளுக்கு மஞ்சள், குங்குமம் வைத்து பூஜை செய்தார். பிறகு மணமகன் தாலிகட்ட திருமணம் சிறப்பாக முடிவடைந்தது.
’லிவிங் டுகெதர் உறவுமுறை தவறு!’ – பஞ்சாப் உயர்நீதிமன்றம்
 திருமணம் நடத்தி வைத்த புரோகிதரும் அவசரம் அவசரமாக கிளம்பிவிட்டார். திருமணம் முடிந்த நிலையில் இருவீட்டாரும் மணமக்களை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர். அப்போதுதான் மணமகள் தாலியில் தங்கக்குண்டுகள் இல்லாததை கவனித்துள்ளனர். பூஜையில் இருந்த தங்கக்குண்டுகள் இப்போது எங்கே சென்றது என தெரியாமல் குழப்பமடைந்தவர்கள் திருமணத்தில் எடுத்த வீடியோவை ஆய்வு செய்துள்ளனர். வீடியோவில் மந்திரம் ஓதிக்கொண்டே தங்கக்குண்டுகளை நைஸாக தன் பாக்கெட்டில் வைக்கிறார் புரோகிதர். மந்திரம் சொல்லியபடியே தாலியின் தங்கம் அபேஸ் : திருமண வீடியோவில் சிக்கிய புரோகிதர்

இதனைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த திருமண வீட்டார் புரோகிதர் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புரோகிதரின் வீட்டிற்கு சென்று விசாரிக்கையில் புரோகிதர் 3 நாட்களாக வீட்டிற்கே வரவில்லை என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். தங்கக்குண்டுகளுடன் தலைமறைவான புரோகிதரை போலீசாரும், திருமண வீட்டாரும் தேடி வருகின்றனர். திருமண வீட்டாருக்கு எவ்வளவோ வழிகளில் பிரச்னை வரும். புரோகிதர் வழியில் வந்த இந்த பிரச்சனையை அவர்கள் சற்றும் எதிர்பார்க்கவில்லை .
பிக் பாஸ் வீட்டிற்கு சீல்; கொரோனா பரவியதால் நடவடிக்கை!
 
Tags: Priest telangana Priest telangana theft telangana marriage theft

தொடர்புடைய செய்திகள்

Citizenship Amendment Act: போராட்டம் நடத்துவது  தீவிரவாதச் செயல் அல்ல - டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி

Citizenship Amendment Act: போராட்டம் நடத்துவது தீவிரவாதச் செயல் அல்ல - டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி

Tamil Nadu Coronavirus LIVE News : கோவிஷீல்டு தடுப்பூசி இடைவெளி 16 வாரங்களாக மாற்ற பரிந்துரைக்கவில்லை - இந்திய விஞ்ஞானிகள்

Tamil Nadu Coronavirus LIVE News : கோவிஷீல்டு தடுப்பூசி இடைவெளி 16 வாரங்களாக மாற்ற பரிந்துரைக்கவில்லை - இந்திய விஞ்ஞானிகள்

Morning News Wrap | காலை 7 மணி முக்கியத் தலைப்புச் செய்திகள்

Morning News Wrap | காலை 7 மணி முக்கியத் தலைப்புச் செய்திகள்

Tamil Nadu Coronavirus LIVE News : மகாராஷ்ட்ராவில் இன்று 9,350 நபர்களுக்கு புதியதாக கொரோனா

Tamil Nadu Coronavirus LIVE News : மகாராஷ்ட்ராவில் இன்று 9,350 நபர்களுக்கு புதியதாக கொரோனா

கொரோனா தடுப்பூசி அலர்ஜியால் முதல் மரணம் - அறிவித்தது மத்திய அரசின் குழு..!

கொரோனா தடுப்பூசி அலர்ஜியால் முதல் மரணம் - அறிவித்தது மத்திய அரசின் குழு..!

டாப் நியூஸ்

BREAKING: சிவசங்கர் பாபாவின் பள்ளி அங்கீகாரத்தை ரத்துசெய்ய குழந்தைகள் நலக்குழு பரிந்துரை..!

BREAKING: சிவசங்கர் பாபாவின் பள்ளி அங்கீகாரத்தை ரத்துசெய்ய குழந்தைகள் நலக்குழு பரிந்துரை..!

சுஷில் ஹரி பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய குழந்தைகள் நலக்குழு பரிந்துரை..!

சுஷில் ஹரி பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய குழந்தைகள் நலக்குழு பரிந்துரை..!

Naira Shah Arrested |காதலருடன் போதைப் பார்ட்டி : தமிழ் நடிகை கைது!

Naira Shah Arrested |காதலருடன் போதைப் பார்ட்டி : தமிழ் நடிகை கைது!

Reliance Jio fiber | இனி வீட்டுக்கு வீடு வைஃபை தான்.. அதிரடி சலுகையுடன் களமிறங்கும் ஜியோ ஃபைபர்!

Reliance Jio fiber | இனி வீட்டுக்கு வீடு வைஃபை தான்.. அதிரடி சலுகையுடன் களமிறங்கும் ஜியோ ஃபைபர்!