மேலும் அறிய

தேர்தல் முடிவுகள் 2024

(Source: ECI/ABP News/ABP Majha)

President Speech: "2047ம் ஆண்டிற்குள் புதிய இந்தியா; இளைஞர்கள், பெண்கள் இதை செய்ய வேண்டும்” - ஜனாதிபதி திரௌபதி முர்மு உரையின் அம்சங்கள்!

2047ம் ஆண்டிற்குள் பொன்னான அத்தியாயங்களை கொண்ட முழு தேசத்தை கட்டியெழுப்ப வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பேசியுள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாத இறுதியில் நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்குவது வழக்கம். இதன்படி, நாடாளுமன்ற நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. ஒவ்வொரு ஆண்டும் தொடங்கும் முதல் கூட்டத்தொடரானது குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்குவது வழக்கம். நாடாளுமன்றத்தின் மைய கட்டிடத்தில் நடக்கும் இந்த கூட்டத்தொடர் சற்று முன் தொடங்கியது.

மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களின் முன்னிலையில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பேசியதாவது,

பொன்னான அத்தியாயங்கள்:

“சுதந்திரத்தின் 75வது சுதந்திர தின ஆண்டில் நாடாளுமன்றத்தில் உரையாற்றுவது மகிழ்ச்சி. இந்தாண்டில் தன்னிறைவு பெற்ற நாடாக நாம் தொடர்ந்து வேகமாக முன்னேறி வருகிறோம். 2047ம் ஆண்டிற்குள் பொன்னான அத்தியாயங்களை கொண்ட முழு தேசத்தை கட்டியெழுப்ப வேண்டும். நாட்டின் இளைஞர்களும், பெண்களும் முன்னணியில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. உலகின் பார்வையில் இந்தியாவின் நிலை என்பது பெருமளவில் மாறியுள்ளது

மற்ற நாடுகள் தங்களின் பிரச்சினையை தீர்க்க இந்தியாவை எதிர்பார்க்கின்றன. இந்தியா தனது பிரச்சினைகளை தீர்க்க பிற நாடுகளை சார்ந்திருக்காது. ஏழைகளுக்காகவும், சமூகத்தில் ஒடுக்கப்பட்டவர்களுக்காகவும் மத்திய அரசு தீவிரமாக பணியாற்றி வருகிறது. வறுமை இல்லாத, நடுத்தர வர்க்கம் செழிப்பான, இளைஞர்கள் முன்னணியில் நிற்கும் இந்தியாவாக இருக்க வேண்டும். நிலையான, அச்சமற்ற, தீர்க்கமான அரசு பெரிய கனவுகளை நனவாக்கும் நோக்கில் செயல்படுகிறது.

பாராட்டிய உலகநாடுகள்:

சட்டப்பிரிவு 370 நீக்கம், முத்தலாக் தடைச்சட்டம் உள்ளிட்ட விஷயங்களில் அரசு தீர்க்கமாக முடிவு எடுக்கிறது. கரீப் கல்யாண் திட்டம் மூலம் கோடிக்கணக்கான ஏழை மக்கள் தடையற்ற உணவைப் பெறுகின்றனர். ஊழலை ஒிப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்துள்ளது. கொரோனாவை இந்தியா கையாண்ட விதத்தை பார்த்த உலகமே பாராட்டியது. பழங்குடியினருக்கான முன்னெப்போதும் இல்லாத முடிவுகளை மத்திய அரசு எடுத்துள்ளது.

நாடு முழுவதும் அரசின் இலவச 50 கோடி மக்கள் இலவச மருத்துவ சேவைகளை பெற்று வருகின்றனர். முறைகேடு என்பது அச்சுறுத்தல் என்பதால் முறைகேடு இல்லாத இலக்கை நோக்கி அரசு பயணிக்கிறது. சரியான முடிவுகள் காரணமாக பிற நாடுகளை காட்டிலும் இந்தியாவின் நிலை சிறப்பாக உள்ளது. பட்டியலின, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் வளர்ச்சி குறித்த நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. ஆயுஷ்மான் பாரத திட்டம் மூலம் ஏழை, எளிய மக்கள் மருத்துவ வசதிகள் பெற்றுள்ளனர்.

பயங்கரவாதத்திற்கு முடிவு:

ஏழைகள் நலன் காக்கும் மத்திய அரசின் நடவடிக்கைகளை உலக வங்கி பாராட்டியுள்ளது. குற்றம் செய்துவிட்டு வெளிநாடுகளுக்கு தப்பியோடியவர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளோம். அரசின் திட்டங்களால்  பெண் குழந்தைகள் பள்ளியில் இருந்து இடை நிற்பது குறைந்துள்ளது. துல்லிய தாக்குதல் உள்ளிட்ட பல நடவடிக்கைகள் மூலம் பயங்கரவாத நடவடிக்கைக்கு பதிலடி தரப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரில் மிகப்பெரிய அச்சுறுத்தலாக கருதப்பட்ட பயங்கரவாத நடவடிக்கைக்கு முடிவு காணப்பட்டுள்ளது.

நாட்டு மக்கள் அனைவருக்கும் எந்தவித பாகுபாடுமின்றி மத்திய அரசு பாடுபட்டு வருகிறது. பெண்களின் முன்னேற்றத்திற்காகவும், பெண்களுக்கு அதிகாரம் அளிக்கவும் மத்திய அரசு முக்கியத்துவம் அளிக்கிறது. முன்மாதிரி மாவட்டங்கள் திட்டம் மேலும் 500 பகுதிகளுக்கு விரிவாக்கப்பட உள்ளது. காசி தமிழ்சங்கமம் நிகழ்ச்சி இந்தியாவின் ஒற்றுமையை வெளிப்படத்துவதாக அமைந்தது. பெண் குழந்தைகளுக்கு கல்வி அளிப்பதில் மிகப்பெரிய முன்னேற்றத்தை கண்டுள்ளோம்.  நாடு முழுவதும் 11 கோடி வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் இணைப்பு வசதி. நவீன கட்டமைப்பை நோக்கி இந்தியா நகர தொடங்கியுள்ளது” 

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மராட்டிய மண்ணில் வெற்றி கொடி நாட்டிய தமிழன்! தாராவி மக்களின் காலா.. யார் இந்த கேப்டன் தமிழ்ச்செல்வன்!
மராட்டிய மண்ணில் வெற்றி கொடி நாட்டிய தமிழன்! தாராவி மக்களின் காலா.. யார் இந்த கேப்டன் தமிழ்ச்செல்வன்!
தங்கை உந்தன் உள்ளம் தானே அண்ணன் என்றும் வாழும் எல்லை! - கனிமொழியை புகழ்ந்து தள்ளிய ஸ்டாலின் -  ஏன் தெரியுமா?
தங்கை உந்தன் உள்ளம் தானே அண்ணன் என்றும் வாழும் எல்லை! - கனிமொழியை புகழ்ந்து தள்ளிய ஸ்டாலின் -  ஏன் தெரியுமா?
"CMஆன பிறகுதான் வருவேன்" ஜெயலலிதா பாணியில் சபதம்.. செய்து காட்டிய ஃபட்னாவிஸ்!
”CM ஆனா கண்டிப்பா இது நடக்கும்”: 4ஆம் வகுப்பு மாணவன் வைத்த கோரிக்கை - உறுதி கொடுத்த விஜய்!
”CM ஆனா கண்டிப்பா இது நடக்கும்”: 4ஆம் வகுப்பு மாணவன் வைத்த கோரிக்கை - உறுதி கொடுத்த விஜய்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Tiruchendur Elephant : ’’சோறு சாப்டியா?’’நலம் விசாரித்த டாக்டர்CUTE-ஆக தலையாட்டிய யானைPriyanka Gandhi : ’’நான் ஜெயிச்சுட்டேன் அண்ணா!’’ ராகுலை மிஞ்சிய பிரியங்கா!பாசமலருக்கு அன்பு கடிதம்Maharastra CM :  ஷிண்டே  vs ஃபட்னாவிஸ் புதுகணக்கு போடும் பாஜக! முதல்வர் அரியணை யாருக்கு?Rahul Gandhi Warning : ’’அழிவை நோக்கி நகரும் டெல்லி!மிகப்பெரிய ஆபத்தில் இந்தியா!’’எச்சரிக்கும் ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மராட்டிய மண்ணில் வெற்றி கொடி நாட்டிய தமிழன்! தாராவி மக்களின் காலா.. யார் இந்த கேப்டன் தமிழ்ச்செல்வன்!
மராட்டிய மண்ணில் வெற்றி கொடி நாட்டிய தமிழன்! தாராவி மக்களின் காலா.. யார் இந்த கேப்டன் தமிழ்ச்செல்வன்!
தங்கை உந்தன் உள்ளம் தானே அண்ணன் என்றும் வாழும் எல்லை! - கனிமொழியை புகழ்ந்து தள்ளிய ஸ்டாலின் -  ஏன் தெரியுமா?
தங்கை உந்தன் உள்ளம் தானே அண்ணன் என்றும் வாழும் எல்லை! - கனிமொழியை புகழ்ந்து தள்ளிய ஸ்டாலின் -  ஏன் தெரியுமா?
"CMஆன பிறகுதான் வருவேன்" ஜெயலலிதா பாணியில் சபதம்.. செய்து காட்டிய ஃபட்னாவிஸ்!
”CM ஆனா கண்டிப்பா இது நடக்கும்”: 4ஆம் வகுப்பு மாணவன் வைத்த கோரிக்கை - உறுதி கொடுத்த விஜய்!
”CM ஆனா கண்டிப்பா இது நடக்கும்”: 4ஆம் வகுப்பு மாணவன் வைத்த கோரிக்கை - உறுதி கொடுத்த விஜய்!
ஆசிரியரின் காலை அழுத்தும் மாணவர்கள்... அதிர்ச்சி வீடியோவால் பாய்ந்த அதிரடி நடவடிக்கை
ஆசிரியரின் காலை அழுத்தும் மாணவர்கள்... அதிர்ச்சி வீடியோவால் பாய்ந்த அதிரடி நடவடிக்கை
Jharkhand Election Result 2024: சல்லி, சல்லியாய் போன பா.ஜ.க.! ஜார்க்கண்டில் ஜாம் ஜாம் மோடில் ஹேமந்த் சோரன்!
Jharkhand Election Result 2024: சல்லி, சல்லியாய் போன பா.ஜ.க.! ஜார்க்கண்டில் ஜாம் ஜாம் மோடில் ஹேமந்த் சோரன்!
CBSE Scholarship: மாதந்தோறும் கல்வி உதவித்தொகை; சிபிஎஸ்இ அழைப்பு- விண்ணப்பிப்பது எப்படி?
CBSE Scholarship: மாதந்தோறும் கல்வி உதவித்தொகை; சிபிஎஸ்இ அழைப்பு- விண்ணப்பிப்பது எப்படி?
SBI SCO Recruitment 2024: ரூ.85 ஆயிரம் ஊதியம்; எஸ்பிஐயில் வங்கி வேலை- விண்ணப்பிப்பது எப்படி?
SBI SCO Recruitment 2024: ரூ.85 ஆயிரம் ஊதியம்; எஸ்பிஐயில் வங்கி வேலை- விண்ணப்பிப்பது எப்படி?
Embed widget