Mallikarjun Kharge: குடியரசுத் தலைவரை அழைக்காமல் நாடாளுமன்ற கட்டிடத்தை திறப்பதா..? காங்கிரஸ் தலைவர் கடும் கண்டனம்..!
நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவிற்கு குடியரசுத் தலைவரை அழைக்கவில்லை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கடுமையாக சாடியுள்ளார்
நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவிற்கு குடியரசுத் தலைவரை அழைக்கவில்லை என கடுமையாக சாடிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மோடி அரசு தேர்தல் காரணங்களுக்காகவே தலித் மற்றும் பழங்குடியின சமூகத்தை சேர்ந்தவர்களை குடியரசு தலைவராக தேர்தெடுப்பதாக தெரிவித்தார்.
நாட்டின் புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறப்பு விழா தேதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தனது கனவு திட்டத்தை மே 28-ம் தேதி தொடங்கி வைக்கிறார் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவிற்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, மற்றும் முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந் ஆகியோரை அழைக்காதது குறித்து கடுமையாக சாடினார். மோடி அரசு தொடர்ந்து அரசியலமைப்பு உரிமையை அவமதிப்பதாக அவர் தெரிவித்தார்.
தேர்தல் காரணங்கள்:
மல்லிகார்ஜூன கார்கே தனது ட்விட்டர் பதிவில், முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தும் நாடாளுமன்ற கட்டட அடிக்கல் நாட்டு விழாவிற்கு அழைக்கப்படவில்லை என்றும், மோடி அரசாங்கம் தேர்தல் காரணங்களுக்காகவே, தலித் மற்றும் பழங்குடியின சமூகத்தில் இருந்து குடியரசு தலைவர்களை தேர்ந்து எடுப்பதாக அவர் தெரிவித்தார்.
The Modi Govt has repeatedly disrespected propriety.
— Mallikarjun Kharge (@kharge) May 22, 2023
The Office of the President of India is reduced to tokenism under the BJP-RSS Government.
4/4
நாடாளுமன்றம் நாட்டின் உயரிய அதிகாரம் கொண்ட அமைப்பு என்றும், குடியரசுத் தலைவர் அரசு, எதிர்கட்சி மற்றும் நாட்டின் ஒவ்வொரு குடிமகனையும் பிரதிநிதித்துவ படுத்துகிறார் என்றும் கார்கே கூறியுள்ளார்.
நாட்டின் உயரிய அதிகாரம் கொண்ட அமைப்பாக நாடாளுமன்றம் உள்ளது என்றும், குடியரசுத் தலைவர் அதில் உயரிய அரசியலமைப்பு அதிகாரம் கொண்டவர் என்றும் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற கட்டிடத்தை குடியரசுத் தலைவர் திறந்து வைத்தால், அது அரசியலமைப்பு உரிமைக்கான அர்ப்பணிப்பை அடையாளப்படுத்தும் என்றும் தெரிவித்தார்.
முன்னதாக, புதிதாக கட்டப்பட்டுள்ள நாடாளுமன்ற கட்டிடத்தை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தான் திறந்து வைக்க வேண்டும், பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்க கூடாது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். "புதிய பாராளுமன்ற கட்டிடத்தை ஜனாதிபதி தான் திறந்து வைக்க வேண்டும், பிரதமர் அல்ல" என்று ராகுல் காந்தி ட்வீட் செய்துள்ளார்.
மேலும் படிக்க