மேலும் அறிய

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வருகிறார் ஜனாதிபதி திரௌபதி முர்மு! பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் அதிகரிப்பு

ஜனாதிபதி வருகையை முன்னிட்டு ஐப்பசி மாதாந்திர பூஜையில் பங்கேற்க வரும் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளன.

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஆண்டு தோறும் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் விரதமிருந்து இருமுடி கட்டி வருவார்கள். மேலும் ஒவ்வொரு தமிழ் மாதமும் முதல் 5 நாட்கள் நடைபெறும் மாதாந்திர பூஜையிலும் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பார்கள். சபரிமலைக்கு முக்கிய பிரமுகர்கள் பலரும் வந்து செல்வது வழக்கம். அதேபோல் ஜனாதிபதி திரவுபதி முர்மு கடந்த மே மாதம் சபரிமலைக்கு வருவதாக இருந்தது. அவர் பம்பையில் இருந்து நடைபயணமாக சன்னிதானத்துக்கு சென்று சாமி தரிசனம் செய்வார் என்றும், ஒருநாள் சபரிமலையில் தங்கியிருப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வருகிறார் ஜனாதிபதி திரௌபதி முர்மு! பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் அதிகரிப்பு

அதற்கு தகுந்தாற்போல் பம்பையில் இருந்து சன்னிதானம் வரை பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்த நிலையில் இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் பதற்றமான சூழ்நிலை நிலவியதன் காரணமாக ஜனாதிபதியின் சபரிமலை வருகை ஒத்திவைக்கப்பட்டது. வேறொரு நாள் சபரிமலைக்கு வருவார் என்று ஜனாதிபதி மாளிகை தெரிவித்திருந்தது. அதன்படி ஜனாதிபதி திரவுபதி முர்பு இந்த மாதம் சபரிமலைக்கு வருகிறார். இதற்காக அவர் விமானம் மூலமாக வருகிற 22-ந்தேதி மதியம் கொச்சி வருகிறார். அங்கிருந்து நிலக்கல்லுக்கு வரும் அவர், பின்பு பம்பைக்கு சென்று, அங்கிருந்து சன்னிதானத்துக்கு செல்கிறார். ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 17-ந்தேதி திறக்கப்படுகிறது.

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வருகிறார் ஜனாதிபதி திரௌபதி முர்மு! பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் அதிகரிப்பு

ஐப்பசி மாத பூஜைக்காக 22-ந்தேதி வரை கோவில் நடை திறந்திருக்கும். ஐப்பசி மாத பூஜையின் இறுதி நாளான 22-ந்தேதியே ஜனாதிபதி திரவுபதி முர்மு சபரிமலைக்கு வர உள்ளார். அவர் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு 22-ந்தேதி இரவே சன்னிதானத்தில் இருந்து பம்பைக்கு வருகிறார். பின்பு அங்கிருந்து திருவனந்தபுரம் செல்கிறார். ஜனாதிபதி திரவுபதி முர்மு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக 24-ந்தேதி வரை கேரளாவில் இருப்பார் என்று தகவல் வெளியாகி உள்ளது. ஜனாதிபதி வருகையை முன்னிட்டு ஐப்பசி மாதாந்திர பூஜையில் பங்கேற்க வரும் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளன. மேலும் ஜனாதிபதி வருகை தரும் 22-ந்தேதி பக்தர்கள் கோவிலுக்கு வர அனுமதிக்கப்படமாட்டார்கள் என தெரிகிறது. ஆனால் அது தொடர்பான அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. ஜனாதிபதி வருகையை முன்னிட்டு நிலக்கல், பம்பை மற்றும் சன்னிதான பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

SIR: சிறப்பு தீவிர திருத்தம்; வாக்காளர் பட்டியலில் உங்க பெயர் இருக்கா? A- Z சந்தேகங்கள், பதில்கள்.. ஒரு வழிகாட்டி!
SIR: சிறப்பு தீவிர திருத்தம்; வாக்காளர் பட்டியலில் உங்க பெயர் இருக்கா? A- Z சந்தேகங்கள், பதில்கள்.. ஒரு வழிகாட்டி!
Udhayanidhi Stalin : ‘'சென்னையில் Global Sports City’ – விளையாட்டில் திராவிட கொள்கை’ ஓபனாக பேசிய உதயநிதி..!
‘சென்னையில் Global Sports City’ அதிரடியாக அறிவித்த உதயநிதி ஸ்டாலின்..!
Rahul Gandhi: பொய்களால் கட்டமைக்கப்பட்ட ராகுல் காந்தியின் H-Files; அம்பலமான ‘வாக்கு திருட்டு‘ நாடகம்
பொய்களால் கட்டமைக்கப்பட்ட ராகுல் காந்தியின் H-Files; அம்பலமான ‘வாக்கு திருட்டு‘ நாடகம்
UGC Fee Refund: கல்லூரியில் கட்டிய முழுக் கட்டணத்தையும் திரும்பப் பெறலாம்; யுஜிசி புதிய அறிவிப்பு- முழு விவரம்
UGC Fee Refund: கல்லூரியில் கட்டிய முழுக் கட்டணத்தையும் திரும்பப் பெறலாம்; யுஜிசி புதிய அறிவிப்பு- முழு விவரம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

90 KM சைக்கிளிங், 21 KM ரன்னிங்! அசர வைத்த அண்ணாமலை! பூரித்து பாராட்டிய மோடி
சறுக்கிய விஜய் கிராஃப்? தள்ளாடும் தளபதி கச்சேரி! VIEWS குறைந்தது ஏன்?
நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சையில் புதிய மைல்கல்!அசத்திய அப்போலோ
SCHOOL BUS-ஐ மறித்த 3 பேர் கண்ணாடியில் கல் வீசி தாக்குதல் அலறி கத்திய மாணவர்கள் பரபரக்கும் வீடியோ காட்சி | Mayiladuthurai School Van Attack
’’யாரும் என்னை கடத்தலஅடிச்சது என் கணவர் தான்’’பாதிக்கப்பட்ட பெண் பகீர்கோவை கடத்தல் சம்பவம் | CCTV | Viral Video | Kovai Woman Kidnap

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SIR: சிறப்பு தீவிர திருத்தம்; வாக்காளர் பட்டியலில் உங்க பெயர் இருக்கா? A- Z சந்தேகங்கள், பதில்கள்.. ஒரு வழிகாட்டி!
SIR: சிறப்பு தீவிர திருத்தம்; வாக்காளர் பட்டியலில் உங்க பெயர் இருக்கா? A- Z சந்தேகங்கள், பதில்கள்.. ஒரு வழிகாட்டி!
Udhayanidhi Stalin : ‘'சென்னையில் Global Sports City’ – விளையாட்டில் திராவிட கொள்கை’ ஓபனாக பேசிய உதயநிதி..!
‘சென்னையில் Global Sports City’ அதிரடியாக அறிவித்த உதயநிதி ஸ்டாலின்..!
Rahul Gandhi: பொய்களால் கட்டமைக்கப்பட்ட ராகுல் காந்தியின் H-Files; அம்பலமான ‘வாக்கு திருட்டு‘ நாடகம்
பொய்களால் கட்டமைக்கப்பட்ட ராகுல் காந்தியின் H-Files; அம்பலமான ‘வாக்கு திருட்டு‘ நாடகம்
UGC Fee Refund: கல்லூரியில் கட்டிய முழுக் கட்டணத்தையும் திரும்பப் பெறலாம்; யுஜிசி புதிய அறிவிப்பு- முழு விவரம்
UGC Fee Refund: கல்லூரியில் கட்டிய முழுக் கட்டணத்தையும் திரும்பப் பெறலாம்; யுஜிசி புதிய அறிவிப்பு- முழு விவரம்
UGC NET 2025: யுஜிசி நெட் தேர்வு விண்ணப்பத்தில் இன்று முதல் திருத்தம்; கடைசி வாய்ப்பு- எப்படி?
UGC NET 2025: யுஜிசி நெட் தேர்வு விண்ணப்பத்தில் இன்று முதல் திருத்தம்; கடைசி வாய்ப்பு- எப்படி?
TN RAIN: தென் மாவட்டங்களுக்கு ஸ்கெட்ச்.! 2 நாள் வெளுத்து வாங்கப்போகுது கன மழை- எங்கெல்லாம் தெரியுமா.?
தென் மாவட்டங்களுக்கு ஸ்கெட்ச்.! 2 நாள் வெளுத்து வாங்கப்போகுது கன மழை- எங்கெல்லாம் தெரியுமா.?
வைகோ vs பன்னீர்செல்வம்: 2011 தேர்தலில் நடந்தது என்ன? மல்லை சத்யா வெளியிட்ட பரபரப்பு தகவல்!
வைகோ vs பன்னீர்செல்வம்: 2011 தேர்தலில் நடந்தது என்ன? மல்லை சத்யா வெளியிட்ட பரபரப்பு தகவல்!
Train: ரயிலில் மது அருந்திவிட்டு பயணம் செய்யலாமா.? பிடிபட்டால் என்னென்ன தண்டனைகள் தெரியுமா?
ரயிலில் மது அருந்திவிட்டு பயணம் செய்யலாமா.? பிடிபட்டால் என்னென்ன தண்டனைகள் தெரியுமா?
Embed widget