ஆராய்ச்சி படிப்பில் புதிய உச்சம்.. ஆயுஷ் இயக்குநரகத்துடன் கைக்கோர்க்கும் புதுச்சேரி பல்கலைக்கழகம்
புதுச்சேரி ஆயுஷ் இயக்குநரகத்துடன் புதுச்சேரி பல்கலைக்கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இதன் மூலம், பாடத்திட்டம் மேம்படுத்தப்பட்டு ஆயுஷ் நடைமுறைகள் அங்கீகரிக்கப்பட உள்ளது.

புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் புதுச்சேரி ஆயுஷ் இயக்குநரகத்துடன் புதுச்சேரி பல்கலைக்கழகம் நேற்று (ஜூன் 09) கைக்கோர்த்துள்ளது. இந்தக் கூட்டாண்மை, பல்வேறு துறைகளில் ஆராய்ச்சி, நிதியுதவிக்கான அணுகல், பாடத்திட்டத்தை மேம்படுத்துதல் மற்றும் ஆயுஷ் (ஆயுர்வேதம், யோகா, யுனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி) நடைமுறைகளை அங்கீகரிப்பதற்கு உதவும்.
ஆயுஷ் இயக்குநரகத்துடன் கைக்கோர்க்கும் புதுச்சேரி பல்கலைக்கழகம்:
இந்தக் கூட்டாண்மையின் கீழ், புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் பல்வேறு துறைகள் புதுச்சேரி ஆயுஷ் இயக்குநரகத்துடன் இணைந்து செயல்பட உள்ளது. புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தான நிகழ்ச்சியில் பேசிய புதுச்சேரி பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் பி. பிரகாஷ் பாபு, “ஆயுஷ் உடனான இந்த ஒருங்கிணைப்பு, வளர்ந்து வரும் சுகாதாரத் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கான உயர்தர முயற்சிகளில் ஈடுபடுவதற்கு புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் அனைத்து பங்குதாரர்களுக்கும் அதிகாரம் அளிக்கும்" என்று கூறினார்.
ஆயுஷ் இயக்குநரகத்தின் சார்பாக, ஆயுஷ் இயக்குநரும் மருத்துவ தாவர வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரியுமான டாக்டர் ஆர். ஸ்ரீதரன் பேசியபோது, "இந்த ஒருங்கிணைப்பு ஆய்வக ஆராய்ச்சிக்கும் பாரம்பரிய சுகாதார அமைப்புகளின் உலக பயன்பாட்டிற்கும் இடையிலான ஒரு இணைப்பாகும்.
ஆராய்ச்சி படிப்பில் புதிய உச்சம்:
பாரம்பரிய இந்திய சுகாதார அமைப்புகளை மேம்படுத்துவதற்கும் ஒருங்கிணைப்பதற்கும் நோக்கமாகக் கொண்ட பல்வேறு அரசு திட்டங்களையும் அவர் எடுத்துரைத்தார்.
இந்த ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தைப் பற்றிப் பேசிய புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் சர்வதேச உறவுகள் துறை தலைவர் பேராசிரியர் விக்டர் ஆனந்த்குமார், கல்வித்துறை மற்றும் அரசை உள்ளடக்கிய இந்த இருதரப்பு ஒப்பந்தம் பலதரப்பட்ட கற்றலுக்கான புதிய பாதையை ஏற்படுத்துகிறது என்று கூறினார்.
நுண்ணுயிரியல் துறையின் இணைப் பேராசிரியரும் புரிந்துணர்வு ஒப்பந்த ஒருங்கிணைப்பாளருமான டாக்டர் வி. தில்லை சேகர் தனது உரையில், "இந்த கூட்டாண்மை ஒரு வருட கால உரையாடல் மற்றும் மூலோபாய திட்டமிடலின் உச்சமாகும்.
ஆயுஷ் பயிற்சியாளர்களுடன் ஒத்துழைப்பதன் மூலம், பல்கலைக்கழகம் பாரம்பரிய அறிவு மற்றும் நடைமுறைகளைப் பயன்படுத்தி சுகாதாரப் பராமரிப்புக்கான புதிய அணுகுமுறைகளை உருவாக்க முடியும்" என்று கூறினார்.
இதையும் படிக்க: ஆராய்ச்சியில் அசத்திய புதுச்சேரி மாணவி.. ஜெர்மனிக்கு சென்று படிக்க கிடைத்த வாய்ப்பு.. வாவ்






















