மேலும் அறிய

ஆராய்ச்சியில் அசத்திய புதுச்சேரி மாணவி.. ஜெர்மனிக்கு சென்று படிக்க கிடைத்த வாய்ப்பு.. வாவ்

மதிப்புமிக்க இந்தோ - ஜெர்மன் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தின் பிஎச்டி தொழில்துறை உதவித்தொகைத் திட்டத்திற்கு புதுச்சேரி NITஇன் ஆராய்ச்சி மாணவி ஷிமோல் பிலிப் தேர்வாகியுள்ளார்.

காரைக்காலில் அமைந்துள்ள புதுச்சேரி தேசிய தொழில்நுட்ப கழகத்தின் மூத்த ஆராய்ச்சி மாணவியான ஷிமோல் பிலிப் மதிப்புமிக்க இந்தோ-ஜெர்மன் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தின் பிஎச்டி தொழில்துறை ஈடுபாடு உதவித்தொகைத் திட்டத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

புதுச்சேரி மாணவி அசத்தல்: 

நீடித்த கான்கிரீட் மற்றும் அதன் பண்புகளை கணிக்க செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு என்ற தலைப்பில்  ஷிமோல் பிலிப் ஆராய்ச்சி மேற்கொண்டு வந்தார். இந்த மதிப்புமிக்க உதவித்தொகைத் திட்டத்திற்கு நாடு முழுவதும் உள்ள தலைசிறந்த கல்வி நிறுவனங்களிலிருந்து 10 மாணவர்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

அதில், ஷிமோல் பிலிப்பும் ஒருவர் ஆவார். இந்த ஆராய்ச்சியானது இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கி ஆறு மாத காலங்கள் நடைபெறவுள்ளது. ஜெர்மனியின் பௌஹவுஸ் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானியான டாக்டர். கிறிஸ்டியன் ரோஸ்லர் என்பவருடன் சேர்ந்து ஷிமோல் பிலிப் பணியாற்ற உள்ளார்.

ஜெர்மனிக்கு செல்லும் ஷிமோல் பிலிப்: 

புதுமையான தொழில்நுட்பங்கள் மூலம் கான்கிரீட் துறையின் சுற்றுச்சூழல் தடயத்தைக் குறைப்பதற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு புத்தொழில் நிறுவனத்தில் இருவரும் இணைந்து பணியாற்றவுள்ளார். மேலும், கலை மற்றும் வடிவமைப்பில் சிறந்து விளங்குவதற்காக சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனமான பௌஹவுஸ் பல்கலைக்கழகம் வெய்மரில் உள்ள மேம்பட்ட ஆய்வக வசதிகளையும் பயன்படுத்திக் கொள்ளவுள்ளார்.

இந்த ஆராய்ச்சியின்போது மாதாந்திர உதவித்தொகை, விமான கட்டணம், விசா கட்டணம் மற்றும் காப்பீடு ஆகியவற்றை உள்ளடக்கிய பயண உதவி, அத்துடன் ஆராய்ச்சி காலம் முழுவதும் மருத்துவ வசதி உள்ளிட்ட விரிவான நிதி உதவி வழங்கப்படவுள்ளது.

புதுச்சேரி தேசிய தொழில்நுட்ப கழகத்தின் இயக்குநர், முனைவர். மகரந்த் மாதாவ் கங்ரேகர், தனது அலுவலகத்தில் நடந்த சந்திப்பின் போது, ஷிமோல் மற்றும் அவரது வழிகாட்டியான முனைவர் எம். நிதி ஆகியோரை நேரில் வாழ்த்தி, அவர்களின் குறிப்பிடத்தக்க சாதனையைப் பாராட்டினார்.

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read More

தலைப்பு செய்திகள்

‘பத்தா’ படத்திற்கு கேரளாவில் அமோக வரவேற்பு! விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பதிவு!
‘பத்தா’ படத்திற்கு கேரளாவில் அமோக வரவேற்பு! விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பதிவு!
Kerala Accident: 3 பேரை காரில் இடித்துக் கொன்ற இளைஞன்..! “இந்த விஷயத்தை அப்பா பார்த்துக்கொள்வார்” என பஞ்ச்
3 பேரை காரில் இடித்துக் கொன்ற இளைஞன்..! “இந்த விஷயத்தை அப்பா பார்த்துக்கொள்வார்” என பஞ்ச்
Maharashtra: பிங்க் ரேபிடோவில் ஓட்டுநராக வந்த ஆண்.. ஷாக்கான இளம்பெண்.. கடைசியில் ட்விஸ்ட்!
Maharashtra: பிங்க் ரேபிடோவில் ஓட்டுநராக வந்த ஆண்.. ஷாக்கான இளம்பெண்.. கடைசியில் ட்விஸ்ட்!
அரசு ஊழியர்களின் சம்பளம் 3 மடங்கு உயருமா? 8ஆவது சம்பள கமிஷனில் புதிய பரிந்துரை!
அரசு ஊழியர்களின் சம்பளம் 3 மடங்கு உயருமா? 8ஆவது சம்பள கமிஷனில் புதிய பரிந்துரை!

வீடியோ

Abhijeet Dipke : ”பாட்டி இறந்ததை சொல்லலயா?”பொய் சொன்னாரா அபிஜீத் திப்கேவீடியோ ஆதாரத்துடன் வந்த போலீஸ்
Car bike accident : மொத்தமாக பறந்த பைக்! நூலிழையில் தப்பிய இளைஞர்! பகீர் சிசிடிவி காட்சி
Samantha ZOY Launch: பெண்கள் ஆரோக்கியத்தில் புதிய புரட்சி! நடிகை சமந்தாவின் ZOY லான்ச்
Navanethem pillay : மண்டேலாவுக்காக வாதாடிய தமிழச்சி! ஈழத்தமிழர்களுக்காக குரல் அமைதிக்கான நோபல் பரிசு யார் இந்த நவநீதம் பிள்ளை?
Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!
EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
ஒரே சார்ஜில் 625 கி.மீட்டர் மைலேஜ்... அறிமுகமாகியது வால்வோவின் புதிய Volvo EX90 மின்சார கார்! விலை எம்புட்டு?
ஒரே சார்ஜில் 625 கி.மீட்டர் மைலேஜ்... அறிமுகமாகியது வால்வோவின் புதிய Volvo EX90 மின்சார கார்! விலை எம்புட்டு?
’சத்துணவிற்கான கொண்டக்கடலை, பச்சை பயிறு கொள்முதலில் சுணக்கம்’ கேக் வாங்க டெண்டர் விட்ட தவெக அரசு..!
’சத்துணவிற்கான கொண்டக்கடலை கொள்முதலில் சுணக்கம்’ கேக் டெண்டருக்கு துரிதம்..!
மனுக்களால் திணறிய ஆட்சியரகம்: ஒரே நாளில் குவிந்த 380 கோரிக்கைகள்!
மனுக்களால் திணறிய ஆட்சியரகம்: ஒரே நாளில் குவிந்த 380 கோரிக்கைகள்!
திமுக தோத்ததுக்கு SIR காரணமில்ல.. ஸ்டாலினே சொல்லிட்டாரு.. வெளுத்து வாங்கிய மாணிக்கம் தாகூர்!
திமுக தோத்ததுக்கு SIR காரணமில்ல.. ஸ்டாலினே சொல்லிட்டாரு.. வெளுத்து வாங்கிய மாணிக்கம் தாகூர்!
நள்ளிரவில் ஆசை ஆசையாக வந்த அருள் பாண்டி.. அதற்கு நோ சொன்ன கள்ளக்காதலி.. இறுதியில் நடந்த ட்விஸ்ட்!

Embed widget