மேலும் அறிய

Watch Video: தெலங்கானா அரசு பேருந்தில் ரகளை! நடத்துனரை சரமாரியாக தாக்கிய இளம்பெண் - வீடியோ வைரல்!

தெலங்கானாவில் மதுபோதையில் இருந்த பெண், பேருந்து நடத்துரை தாக்கிய விடியோக்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

Watch Video: தெலங்கானாவில் மதுபோதையில் இருந்த பெண், பேருந்து நடத்துரை தாக்கிய வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. 

பேருந்து நடத்துனரை தாக்கிய பெண்:

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் எல்பி நகரில் இருந்து தில்சுக்நகர் வழித்தடத்தில் பேருந்து சென்றுக் கொண்டிருந்தது. அப்போது, ஹயாத் நகரில் பேருந்தில் ஏறிய பெண் ஒருவர், இலவச பேருந்து திட்டத்திற்கான அடையாள அட்டையை நடத்துனர் கேட்டார். ஆனால், அந்த பெண் தன்னிடம் அடையாளம் அட்டை இல்லை என்று கூறியிருக்கிறார்.

இதனால், பயணத்திற்கான கட்டணத்தை கொடுக்க வேண்டும் என்று நடத்துனர் கூறியுள்ளார். அந்த பெண், சரியான தொகையை தராமல் 500 ரூபாயை கொடுத்ததாக கூறப்படுகிறது. அதாவது 10 ரூபாய் பயணச்சீட்டுக்கு ரூ.500 கொடுத்ததாக சொல்லப்படுகிறது. 

நடத்துனரும் தன்னிடம் சில்லறை இல்லை என்று கூறியிருக்கிறார். இதனால், அந்த பெண் நடத்துனரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். நடத்துனர் இருக்கையில் அமருமாறும் கூறியதாக தெரிகிறது. அப்போது, மதுபோதையில் இருந்ததாக கூறப்படும் நிலையில், தன்னிலை மறந்த அந்த பெண் நடத்துரை சரமாரியாக தாக்கி, தகாத வார்த்தைகளால் திட்டத் துவங்கியுள்ளார்.

மேலும், அவரை தன் கால்களால் எட்டி உதைத்தும், ரகளையில் ஈடுபட்டுள்ளார். இந்த சம்பவத்தால், பேருந்தில் பெரும் பரபரப்பான சூழல்  நிலவியது. இந்த சம்பவத்தை பேருந்தில் பயணித்த சிலர் வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோவும் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

வீடியோ வைரல்:

அந்த வீடியோவில், பேருந்தில் இருந்த பெண் ஒருவர் நடத்துனரிடம் பயணச்சீட்டுக்கு தகராறில் ஈடுபட்டிருக்கிறார். சில நிமிடங்களாக நடத்துனரை தகாத வார்த்தைகளால் பேசி இருக்கிறார். அப்போது, அங்கு மற்றொரு பெண் நடத்துனர் வந்திருக்கிறார். அங்கு, ரகளையில் ஈடுபட்ட பெண்ணை சமாதானப்படுத்தியிருக்கிறார்.

இருப்பினும், அந்த பெண் தொடர்ந்து நடத்துனரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். தொடர்ந்து தகராறில் ஈடுபட்ட அந்த பெண், நடத்துனரை காலால் எட்டி உதைத்து, அவர் மீது எச்சிலை துப்பியும் ரகளையில் ஈடுபட்டுள்ளார். பின்னர், பேருந்தில் இருந்து இறங்கி  செல்வது போன்று வீடியோவில் உள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக புகார் அளிக்கப்பட்டதை  அடுத்து, அந்த பெண் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தெலங்கானா மாநிலத்தில் வசிக்கும் அனைத்து வயது பெண்கள் மற்றும் திருநங்கைகள் அனைவரும் அரசு பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம். இந்த மகாலட்சுமி திட்டத்தின் மூலம் பேருந்துகளில் பயணிக்கும் பெண்கள், தங்கள் வசிப்பிட அடையாள அட்டையை மட்டும் காண்பித்து பயணிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"கூட்டத்தை கூட்டுங்க" தேர்தல் பிரச்சாரம் கேன்சல்.. டெல்லி விரைந்த அமித் ஷா!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kasthuri Arrest : நடிகை கஸ்தூரி கைது போலீஸ் போட்ட ரகசிய ஸ்கெட்ச் ஹைதராபாத்தில் அதிரடி!Nayanthara Vs Dhanush : PUBLICITY தேடும் நயன்தாரா!கல்யாண வீடியோவுக்கு PROMOTION!ஊறுகாவா தனுஷ்?Kasthuri Arrest : ஹைதராபாத் to சென்னை..!காவல்நிலையத்தில் கஸ்தூரி சிரித்த முகத்துடன் ஆஜர்Rahul Eating Poha : ’’ஆஹா…என்ன ருசி’’ ரோட்டுக்கடை போஹா!ருசித்து சாப்பிட்ட ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"கூட்டத்தை கூட்டுங்க" தேர்தல் பிரச்சாரம் கேன்சல்.. டெல்லி விரைந்த அமித் ஷா!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
விஜய்க்கு ஸ்கெட்ச் போட்டு தரும் தமிழர்.. தவெகவின் அரசியல் ஆலோசகர் யார்?
விஜய்க்கு ஸ்கெட்ச் போட்டு தரும் தமிழர்.. தவெகவின் அரசியல் ஆலோசகர் யார்?
சளி, இருமல் பிரச்னையா?நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் சூப்பர் உணவு!
சளி, இருமல் பிரச்னையா?நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் சூப்பர் உணவு!
80 சீட்.. துணை முதல்வர் பதவி.. அதிமுகவுடன் டீல் பேசுகிறாரா தவெக விஜய்?
80 சீட்.. துணை முதல்வர் பதவி.. அதிமுகவுடன் டீல் பேசுகிறாரா தவெக விஜய்?
பில்டப் ப்ரமோஷன்களாலே ப்ளாப்! பிரம்மாண்ட பட்ஜெட் படங்களுக்கு வில்லன் - இது தேவையா கோபி?
பில்டப் ப்ரமோஷன்களாலே ப்ளாப்! பிரம்மாண்ட பட்ஜெட் படங்களுக்கு வில்லன் - இது தேவையா கோபி?
Embed widget