POCSO : ஒரு பெண்ணிடம் ‘ஐ லவ் யூ’ சொன்னால்.... போக்சோ வழக்கில் நீதிமன்றம் கூறிய கருத்து...!
குற்றம் சாட்டப்பட்டவர் மீதான குற்றத்தை நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் இல்லாததால், அனைத்து குற்றச்சாட்டுக்களிலிருந்தும் அவரை நீதிமன்றம் விடுவித்தது.
ஒரு பெண்ணிடம் ‘ஐ லவ் யூ’ என்று ஒரு முறை கூறுவது அவரது மரியாதையை வேண்டுமென்றே அவமதிப்பது அல்ல, அதிகபட்சம் அது அன்பின் உணர்வை வெளிப்படுத்தும் விதம்தான் என்று மும்பை நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. சிறப்பு நீதிமன்றம் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்ட 23 வயது இளைஞனை விடுவிக்கும் போது இந்த கருத்தை கூறியுள்ளது.
நீதிபதி கல்பனா பாட்டீல் முன்பு இன்று விசாரணை வந்தது. அப்போது விரிவான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட 17 வயது இளைஞரின் குடும்பத்தினர் அளித்த புகாரின்படி, குற்றம் சாட்டப்பட்டவர் 2016 ஆம் ஆண்டு தங்கள் குடியிருப்புக்கு அருகில் காதலிப்பதாக சிறுமியிடம் கூறியுள்ளார்.
குற்றம் சாட்டப்பட்டவர் சிறுமியைப் பார்த்து கண்ணடித்தாகவும், மேலும் அவரது தாயாரை மிரட்டியதாகவும் புகார்தாரர் குற்றம் சாட்டினார். புகாரின் அடிப்படையில், போலீசார் குற்றம் சாட்டப்பட்டவர் மீது பாலியல் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
இருப்பினும், குற்றம் சாட்டப்பட்டவர் மீதான குற்றத்தை நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் இல்லாததால், அனைத்து குற்றச்சாட்டுக்களிலிருந்தும் அவரை நீதிமன்றம் விடுவித்தது.
"பாதிக்கப்பட்ட பெண்ணின் கூற்றுப்படி, சம்பவத்தன்று, குற்றம் சாட்டப்பட்டவர் பெண்ணிடம் ‘ஐ லவ் யூ’ என்று கூறினார். பலமுறை அவரை பின்தொடர்ந்து ‘ஐ லவ் யூ’ என்று கூறியது குற்றம் அல்ல. நான் உன்னை காதலிக்கிறேன் என்று கூறும் ஒரு சம்பவம், பாதிக்கப்பட்டவருக்கு குற்றம் சாட்டப்பட்டவரின் அன்பின் உணர்வை வெளிப்படுத்துவதாக இருக்கும். அப்பெண்ணின் கண்ணியத்தை அவமதிக்கும் நோக்கில் இந்தச் செயலைச் செய்ததாகக் கூற முடியாது. அப்பெண்ணின் அடக்கத்தை அவமதிக்கும் வகையில் அந்த நபர் வெளிப்படையான செயலை அரசு தரப்பு பதிவு செய்யவில்லை” என்று நீதிமன்றம்கூறியது.
மேலும், குற்றம் சாட்டப்பட்ட இளைஞர் பாலியல் நோக்கத்துடன் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு எதிராக எந்தச் செயலையும் செய்ததாகவோ அல்லது பாதிக்கப்பட்ட பெண்ணுக்கோ அல்லது அவரது தாயாருக்கோ அவர் எந்தவிதமான அச்சுறுத்தலையும் கொடுத்தார் என்பதற்கான எந்த ஆதாரத்தையும் அரசுத் தரப்பு பதிவு செய்யவில்லை என்றும் நீதிமன்றம் கூறியது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்