HBD PM Modi: 74வது பிறந்தநாள் - பிரதமர் மோடி பற்றி பலரும் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்கள் - லிஸ்ட் இதோ..!
HBD PM Modi: பிரதமர் மோடியின் பிறந்தநாளையொட்டி அவரைப் பற்றி பலரும் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
HBD PM Modi: குஜராத்தில் பிறந்த பிரதமர் மோடி இன்று தனது 74வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
பிரதமர் மோடி பிறந்தநாள் கொண்டாட்டம்:
பிரதமர் நரேந்திர மோடி தனது 74வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். 1950ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி நரேந்திர தாமோதர்தாஸ் மோடியாக குஜராத்தில் அவர் பிறந்தார். ஆர்எஸ்எஸ் செயல்பாடுகளாக் ஈர்க்கப்பட்ட அவர், அதில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு தீவிர களப்பணியாற்றினார். படிப்படியாக அரசியலில் கால் பதித்து, குஜராத் மாநில முதலமைச்சராகவும் உயர்ந்தார். கடந்த 2001ம் ஆண்டில் முதலமைச்சரான அவர், 2014ம் ஆண்டு பிரதமர் ஆகும் வரை அந்த பதவியை வகித்து வந்தார். அதைதொடர்ந்து, தற்போது தொடர்ந்து மூன்றாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டாவது இந்திய பிரதமர் என்ற பெருமையை பெற்றுள்ளார். அதோடு, உலகின் மிகவும் செல்வாக்கு மிக்க அரசியல் தலைவராக உருவெடுத்துள்ளார். அவர், இன்று அகமதாபாத்தில் தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி, அஜ்மீர் ஷெரீப் தர்காவில் இன்று 4000 கிலோ சைவ லங்கர் விநியோகம் செய்யப்படுகிறது. இந்த தர்காவில் லங்கர் வழங்குவது என்பது 550 ஆண்டுகால பழமையான பாரம்பரியமாகும். இந்த சூழலில் மோடி பற்றி பலரும் அறிந்திடாத, பல சுவாரஸ்ய தகவல்களை இங்கு அறியலாம்.
மோடி பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்:
- பிரதமர் மோடி மக்களைவ தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்பு, குஜராத்தில் நீண்ட காலம் முதல்வராக இருந்தவர் ஆவார்.
- சுதந்திர இந்தியாவில் பிறந்து பிரதமரான முதல் நபர் ஆவார்.
- வாட்நகரில் குஜராத்தி குடும்பத்தில் பிறந்த பிரதமர் மோடி, சிறுவயதில் உள்ளூர் ரயில் நிலையத்தில் டீ விற்பதில் தனது தந்தைக்கு உதவியாக இருந்தார்
- எட்டு வயதில், பிரதமர் மோடி ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கம் (ஆர்எஸ்எஸ்) பற்றி அறிந்துகொண்டு விரிவுரைகள் அல்லது பயிற்சி அமர்வுகளில் கலந்து கொள்ளத் தொடங்கினார். அவருக்கு லக்ஷ்மண்ராவ் இனாம்தார் என்பவர் வழிகாட்டியாக ருந்தார்.
- பிரதமர் மோடி 1967 இல் உயர்நிலை பள்ளிக் கல்வியை முடித்தார் மற்றும் 1978 இல் அரசியல் அறிவியலில் இளங்கலை பட்டத்தை முடித்தார். 1982 இல் குஜராத் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றதாக கூறப்படுகிறது
- 1975 அவசரநிலையின் போது தலைமறைவாகிய மோடி, அக்கால அனுபங்களை குஜராத்தி மொழியில் புத்தகமாக எழுதியுள்ளார்.
- 1971 போருக்குப் பிறகு, பிரதமர் மோடி ஆர்எஸ்எஸ்-ன் முழுநேர பிரச்சாரகராக ஆனார். 1985-ல் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டார்.
- பிரதமர் மோடி சுவாமி விவேகானந்தரின் போதனைகளை உறுதியாகப் பின்பற்றுபவர் மற்றும் விவேகானந்தரால் நிறுவப்பட்ட ஆசிரமங்களுக்குச் செல்வதை வழக்கமாக கொண்டிருக்கிறார்
- 2014 ஃபோர்ப்ஸ் இதழின் சக்திவாய்ந்த நபர்களின் பட்டியலில் பிரதமர் மோடி 15வது இடத்தைப் பிடித்தார். அதே ஆண்டில், டைம் இதழின் ஆண்டின் சிறந்த நபராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2014, 2015 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் டைம் இதழின் உலகின் மிகவும் செல்வாக்கு மிக்க 100 நபர்களில் மோடி இடம்பெற்றார்
- 90 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோவர்களுடன் சமூக ஊடகத் தளமான 'எக்ஸ்' (முன்னர் ட்விட்டர்) இல், அதிகம் ஃபாலோவர்களை கொண்ட ஆளுமைகள் பட்டியலில் பிரதமர் மோடி இரண்டாவது இடத்தில் உள்ளார்.