PM Modi Kedarnath Visit | ஆதி சங்கராச்சார்யாரின் சிலையைத் திறந்துவைத்தார் பிரதமர் மோடி.. முழு விவரம்..
ஒட்டுமொத்த மறுகட்டுமான பணியும், பிரதமரின் வழிகாட்டுதலின் கீழ் மேற்கொள்ளப்பட்டது. சரஸ்வதி அஸ்தாபத்தில் (ரிஷிகேஷ்) முடிக்கப்பட்ட மற்றும் நடைபெறும் வளர்ச்சி பணிகளை பிரதமர் ஆய்வு செய்கிறார்.
இன்று உத்தராகண்ட் மாநிலத்துக்கு பயணம் செய்த பிரதமர் மோடி அங்குள்ள கேதார்நாத் கோயிலில் பிரதமர் பிரார்த்தனை செய்தார். பின்னர், ஆதி சங்கராச்சார்யா சமாதியை திறந்து வைக்கிறார் மற்றும் ஸ்ரீ ஆதி சங்கராச்சார்யா சிலையை தொடங்கி வைக்கிறார். 2013ம் ஆண்டு வெள்ளத்தில் சேதமடைந்த பிறகு, இந்த சமாதி மீண்டும் கட்டப்பட்டுள்ளது.
WATCH PM @narendramodi taking the view of development works carried out in #Kedarnath after the 2013 floods@PMOIndia pic.twitter.com/u5papfVHgZ
— DD News (@DDNewslive) November 5, 2021
Prime Minister @narendramodi performs Darshan of Shri Kedarnath, offers Puja & visits the Temple complex in Uttarakhand.#PMAtKedarnath pic.twitter.com/jUeqVBrJO9
— PIB India (@PIB_India) November 5, 2021
Prime Minister @narendramodi lays foundation stones & dedicates to the Nation various development projects in Kedarnath, Uttarakhand #PMAtKedarnath pic.twitter.com/tubqIwUUAx
— PIB India (@PIB_India) November 5, 2021
இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில்,
ஒட்டுமொத்த மறுகட்டுமான பணியும், பிரதமரின் வழிகாட்டுதலின் கீழ் மேற்கொள்ளப்பட்டது. அவர் இத்திட்டத்தை தொடர்ந்து ஆய்வு செய்து கண்காணித்தார். சரஸ்வதி அஸ்தாபத்தில் (ரிஷிகேஷ்) முடிக்கப்பட்ட மற்றும் நடைபெறும் வளர்ச்சி பணிகளை பிரதமர் ஆய்வு செய்கிறார்.
Speaking at Kedarnath. Watch. https://t.co/QtCLIbRZy7
— Narendra Modi (@narendramodi) November 5, 2021
இங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் பிரதமர் உரையாற்றுகிறார். நிறைவு செய்யப்பட்ட முக்கிய கட்டுமான திட்டங்களை அவர் தொடங்கிவைக்கிறார். சரஸ்வதி நதி தடுப்புச் சுவர் மற்றும் படித்துறைகள், மந்தாகினி ஆறு தடுப்புச் சுவர், தீர்த் புரோகித் இல்லங்கள் மற்றும் மந்தாகினி ஆற்றில் கருட் சாத்தி பாலம் உட்பட முக்கிய கட்டுமான திட்டங்களை பிரதமர் தொடங்கி வைக்கிறார். இந்த திட்டங்கள் ரூ.130 கோடிக்கும் மேற்பட்ட செலவில் முடிக்கப்பட்டுள்ளன. சங்கம் படித்துறை மறுசீரமைப்பு, முதல் உதவி மற்றும் சுற்றுலா உதவி மையம், நிர்வாக அலுவலகம், மருத்துவமனை, இரண்டு விருந்தினர் இல்லங்கள், காவல் நிலையம், கட்டுப்பாட்டு மையம், மழைக்கால தங்குமிடம், சரஸ்வதி மக்கள் வசதி மையம் உட்பட ரூ.180 கோடிக்கும் மேற்பட்ட பல திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டுகிறார்"என்று தெரிவித்தது.
#PMAtKedarnath
— DD News (@DDNewslive) November 5, 2021
A first look at the statue of Shri Adi Shankaracharya unveiled by PM @narendramodi at Shri Adi Shankaracharya Samadhi Sthal @PMOIndia pic.twitter.com/wCgFiX7c2b
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்