பிரதமரின் சாப்பருக்கு அருகே பறந்த கருப்பு பலூன்: பாதுகாப்பில் குளறுபடி எப்படி?
விஜயவாடா விமான நிலையத்தில் இருந்து பிரதமர் விமானம் புறப்பட்டபோது அவரது ஹெலிகாப்டர் அருகே கருப்பு பலூன்கள் காணப்பட்டதாக கூறப்படுகிறது.
பிரதமர் நரேந்திர மோடி கடந்த திங்கள் அன்று விஜயவாடாவுக்கு விஜயம் செய்தபோது அவரது பாதுகாப்பு 'சமரசம்' செய்யப்பட்டதாக பாதுகாப்பு ஏஜென்சிகள் கவலை தெரிவித்துள்ளன. விஜயவாடா விமான நிலையத்தில் இருந்து பிரதமர் விமானம் புறப்பட்டபோது அவரது ஹெலிகாப்டர் அருகே கருப்பு பலூன்கள் காணப்பட்டதாக கூறப்படுகிறது.
கன்னவரம் விமான நிலையத்தில் இருந்து பிரதமர் மோடியின் ஹெலிகாப்டர் புறப்பட்ட உடனேயே பலூன்களை விடுவித்ததற்காக நான்கு காங்கிரஸ் போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டனர், அங்கு விமான நிலையத்தைச் சுற்றி கடுமையான பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டிருந்தது என்று கிருஷ்ணா மாவட்ட எஸ்பி சித்தார்த் கவுஷல், சம்பவம் நடந்த சிறிது நேரத்திலேயே ஊடக நிறுவனங்களிடம் செய்தியைப் பகிர்ந்தார்.
#WATCH | A Congress worker released black balloons moments after PM Modi's chopper took off, during his visit to Andhra Pradesh.
— ANI (@ANI) July 4, 2022
(Source: unverified) pic.twitter.com/ZYRlAyUcZK
"இந்த விவகாரம் தொடர்பாக மொத்தம் நான்கு காங்கிரஸ் உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்னும் சிலர் கைது செய்யப்பட உள்ளனர். கைது செய்யப்பட்ட 4 காங்கிரஸ் உறுப்பினர்களும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள்" என்று ஆந்திரப் பிரதேச மாநிலம் கிருஷ்ணா மாவட்ட டிஎஸ்பி விஜய் பால் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக விஜயவாடா சென்ற பிரதமர் நரேந்திர மோடி, இரவு ஐதராபாத்தில் தங்கினார். அவர் விஜயவாடாவுக்கு வந்தபோது, காங்கிரஸ் கட்சியினர் பிரதமர் மோடிக்கு எதிராக பதாகைகளை ஏந்தியவாறும், கருப்பு பலூன்களை ஏந்தியபடியும் இருந்தனர்.
பிரதமரின் ஹெலிகாப்டர் அருகே பலூன்களை விடுவித்த செயல், பிரதமரின் பாதுகாப்பை மீறிய செயலாக பார்க்கப்படுகிறது. பாதுகாப்பு வளையத்தையும் கடந்து பிரதமரின் அருகில் உள்ள வளாகத்திற்குள் காங்கிரஸ் தொண்டர்கள் எப்படி நுழைந்தனர் என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னதாக, பிரதமர் மோடி பஞ்சாப் காங்கிரஸ் முன்னாள் தலைவர் அம்ரீந்தர் சிங்கிடம் போன் செய்து பேசினார்.
கடந்த ஆண்டு காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய அமரீந்தர் சிங் விரைவில் பாஜகவில் சேர வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெளியாகி உள்ளன.
89 வயதாகும் அமரீந்தர் சிங், முதுகு அறுவை சிகிச்சைக்காக லண்டனில் உள்ளார். அடுத்த வாரம் நாடு திரும்பிய பிறகு அவர் தனது பஞ்சாப் லோக் காங்கிரஸ் கட்சியை பாஜகவுடன் இணைக்க வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.
ஞாயிற்றுக்கிழமை அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து, அமரீந்தர் சிங்குடன் பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார். கேப்டன் அமரீந்தர் சிங், கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியில் இருந்துள்ளார்.