(Source: Poll of Polls)
Kamarajar Manimandapam: புதுச்சேரியில் காமராஜர் மணி மண்டபம் - பிரதமர் மோடி திறந்து வைத்தார்!
புதுச்சேரியில் ரூ.122 கோடியில் அமைக்கப்பட்ட சிறு, குறு தொழில்மேம்பாட்டு தொழில்நுட்ப மையத்தையும் பிரதமர் திறந்து வைத்தார்.
புதுச்சேரியில் 25ஆவது தேசிய இளைஞர் விழாவை பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் தொடங்கி வைத்தார். இரண்டு நாட்கள் ஆன்லைன் மூலம் நடைபெறும் இளைஞர் விழாவில் பல்வேறு மாநில இளைஞர்கள் கலந்து கொள்கின்றனர். புதுச்சேரி அண்ணாசாலையில் நடைபெறும் தொடக்க விழாவில் ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் மற்றும் முதலமைச்சர் ரங்கசாமி பங்கேற்றுள்ளனர்.
மேலும், கருவடிக்குப்பம் இசிஆர் சாலையில் ரூ.23 கோடியில் கட்டப்பட்ட காமராஜர் மணிமண்டபத்தையும், புதுச்சேரியில் ரூ.122 கோடியில் அமைக்கப்பட்ட சிறு, குறு தொழில்மேம்பாட்டு தொழில்நுட்ப மையத்தையும் பிரதமர் திறந்து வைத்தார்.
PM Narendra Modi inaugurates a technology centre of the MSME Ministry and Perunthalaivar Kamarajar Manimandapam, an auditorium with an open-air theatre, in Puducherry, through video conference pic.twitter.com/qIcpMiklXw
— ANI (@ANI) January 12, 2022
இதனைத்தொடர்ந்து, நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “நாட்டை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்வதில் இளைஞர்கள் முக்கிய பங்காற்றுகிறார்கள். நாடே இளைஞர்கள் போல் உத்வேகத்துடன் இருக்கிறது. சிறு, குறு நடுத்தர தொழில்துறை தொழில்நுட்ப வளாகம் புதுச்சேரியில் தொடங்கப்பட்டுள்ளது. காமராஜர் மணிமண்டபம் இளைஞர்கள் தங்களை மேம்படுத்திக்கொள்ள உதவும்” என்று பேசினார்.
The world has admitted that India has two limitless power -- demography & democracy. The youth of India carry democratic values along with demographic dividends. India considers its youths as development drivers: PM Narendra Modi addressing a National Youth Day programme pic.twitter.com/IOEgPn4CLJ
— ANI (@ANI) January 12, 2022
The year 2022 is very important for the youth of India. Today's youth has to live for the country and fulfill the dreams of our freedom fighters... The strength of the youth will take India to greater heights: PM Modi addressing a National Youth Day programme pic.twitter.com/ic3pAb9dcl
— ANI (@ANI) January 12, 2022
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்