World Environment Day 2021 : உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு விவசாயிகளுடன் உரையாடிய பிரதமர் மோடி!
பிரதமர் மோடி உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு நாளை வீடியோ கான்பிரன்ஸ் மூலம் விவசாயிகளுடன் கலந்துரையாட உள்ளார்.
உலக சுற்றுச்சூழல் தினம் ஆண்டுதோறும் ஜூன் 5-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. உலகின் இயற்கை வளங்களின் முக்கியத்துவம், காடுகள் மற்றும் விலங்குகளின் முக்கியத்துவம் ஆகியவற்றை உணர்த்தும் விதமாக உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையடுத்து, இந்தாண்டிற்கான உலக சுற்றுச்சூழல் தினம் நாளை கொண்டாடப்படுகிறது.
இந்தியாவில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, பிரதமர் மோடி நாளை காணொளி காட்சி மூலமாக கலந்துரையாடுகிறார். இந்த கலந்துரையாடலின்போது விவசாயிகளுடன் அவர் பேச உள்ளார். அப்போது, நிபுணர்கள் குழுவின் எத்தனால் பற்றிய அறிக்கையை வெளியிட உள்ளார். இந்த நிகழ்ச்சிக்கு சிறந்த சூழலுக்கு உயிரி எரிபொருட்களை ஊக்குவித்தல் என்று தலைப்பிடப்பட்டுள்ளது.
Prime Minister Narendra Modi will participate in the World Environment Day event on 5 June at 11am via video conferencing. The theme for this year’s event is ‘promotion of biofuels for better environment’ pic.twitter.com/Qcom4kHrqv
— ANI (@ANI) June 4, 2021
மேலும், விவசாயிகளிடம் எத்தனால் மற்றும் பயோ கேஸை பயன்படுத்திய அனுபவங்கள் பற்றியும் கேட்டறியவுள்ளார். இந்த நிகழ்ச்சி பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு துறையினராலும், வனத்துறையினராலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.