PM Modi: முத்ரா திட்டம் மாற்றத்தை ஏற்படுத்தும் - பிரதமர் மோடி தமிழில் ட்வீட்
PM Modi: நாடு முழுவதும் முத்ரா திட்டம் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார்.
முத்ரா திட்டத்தின் மூலம் கோடிக்கணக்கானவர்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது மட்டும் இல்லாமல் தொழில் முனைவோரையும் உண்டாக்கியுள்ளது என பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார்.
44 கோடிக்கும் மேலான பிணையமில்லா முத்ரா யோஜனா கடன்கள் கோடிக்கணக்கான தொழில்முனைவோரை மேம்படுத்தியுள்ளன, இவர்களில் 70 சதவீதமானவர்கள் பெண்கள். வேலை தேடுபவர்கள் இப்போது வேலையை உருவாக்குகிறார்கள். இது மோடியின் உத்தரவாதம் என பாஜக சமூகவலைதளப் பக்கத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதற்கு பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், ” முத்ரா திட்டம் மாற்றத்தை ஏற்படுத்தும் ஒரு முயற்சியாகும், இது கோடிக் கணக்கானவர்களுக்கு அதிகாரம் அளிக்கிறது மற்றும் தொழில்முனைவோரை வளர்க்கிறது. அதிக எண்ணிக்கையிலான பயனாளிகள் பெண்கள், எஸ்சி/எஸ்டி மற்றும் ஓபிசி பிரிவினர் என்பது குறிப்பிடத்தக்கது” என குறிப்பிட்டுள்ளார்.