![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
PM Modi Speech Lok Sabha | ஆட்சிக்கு வரமுடியவில்லை..அகங்காரமும் குறையவில்லை.. ராகுல் பேச்சுக்கு பிரதமர் மோடி பதில்
தமிழகத்தில் 1962-க்கு பிறகு காங்கிரஸ் ஆட்சியமைக்கவில்லை என பிரதமர் மோடி பேசியுள்ளார்
![PM Modi Speech Lok Sabha | ஆட்சிக்கு வரமுடியவில்லை..அகங்காரமும் குறையவில்லை.. ராகுல் பேச்சுக்கு பிரதமர் மோடி பதில் PM Modi Speech in Lok Sabha on president thanks giving motion answers to rahul gandhi tamilian speech PM Modi Speech Lok Sabha | ஆட்சிக்கு வரமுடியவில்லை..அகங்காரமும் குறையவில்லை.. ராகுல் பேச்சுக்கு பிரதமர் மோடி பதில்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/07/d7eb4e1380bb81b7b93d49b66dcbf82e_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நாடாளுமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மக்களவையில் பேசிய பிரதமர் மோடி, “ 1967-க்கு பிறகு காங்கிரஸ் கட்சியால் தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வர முடியவில்லை. பல மாநிலங்களில் காங்கிரஸை ஆட்சியில் அனுமதிக்க மக்கள் விரும்பவில்லை. பல இடங்களில் ஆட்சி கைவிட்டுப்போன பிறகும், காங்கிரஸுக்கு ஆணவம் மட்டும் குறையவில்லை” என்று பேசினார்.
முன்னதாக ராகுல் காந்தி மக்களவையில் பேசியது
ஜனாதிபதி உரையில் வேலையில்லா திண்டாட்டம் பற்றி ஒரு வார்த்தை கூட இல்லை. நாடு முழுவதும் இளைஞர்கள் வேலை தேடி வருகின்றனர். உங்கள் அரசால் அவர்களுக்கு வேலை வழங்க முடியவில்லை. 2021ல் 3 கோடி இளைஞர்கள் வேலை இழந்துள்ளனர்.
இன்றைய தேதியில் இந்தியா 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலைவாய்ப்பின்மையை எதிர்கொள்கிறது. மேக் இன் இந்தியா, ஸ்டார்ட்-அப் இந்தியா என்று நீங்கள் பேசுகிறீர்கள், ஆனால் இளைஞர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த வேலை கிடைக்கவில்லை” என அவர் பேசினார்.
மேலும், “துரதிர்ஷ்டவசமாக, ஜனாதிபதியின் உரையானது அரசாங்கம் செய்ததாகக் கூறும் விஷயங்களின் நீண்ட பட்டியலாக இருக்கிறது. ஆனால் நாம் எதிர்கொண்டு வரும் மூலோபாய சிக்கல்களைப் பற்றி ஆழமான தகவல்களை அது கொண்டிருக்கவில்லை. நம் நாடு எதிர்கொள்ளும் இரண்டு முக்கிய சவால்களைப் பேசவில்லை. எனக்கு, ஜனாதிபதி உரை என்பது ஒரு மூலோபாய பார்வைக்கு பதிலாக அதிகாரம் சொல்ல விரும்புவதைச் சொல்லுவதாக உள்ளது. இது ஒரு நல்ல தலைமைத்துவம் எழுதிய உரையாக இல்லாமல் அதிகாரம் சொல்லுவதைப் பிரதிபலிக்கும் கீழே போடத் தகுதியான காகிதமாகவே உள்ளது.” என்றும் பேசினார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)