![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Heeraben Modi Demise : தாயாரின் உடலை சுமந்து சென்ற பிரதமர் மோடி... மலர் வளையம் வைத்து அஞ்சலி..!
குஜராத் காந்திநகரில் தாயார் ஹீராபென் உடலை பிரதமர் மோடிதோளில் சுமந்து சென்றார்.
![Heeraben Modi Demise : தாயாரின் உடலை சுமந்து சென்ற பிரதமர் மோடி... மலர் வளையம் வைத்து அஞ்சலி..! PM Modi Pays Tribute To His Mother At Her Residence In Gandhinagar Heeraben Modi Demise : தாயாரின் உடலை சுமந்து சென்ற பிரதமர் மோடி... மலர் வளையம் வைத்து அஞ்சலி..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/30/b9ac4ca9ed11f38fe7158be2dc32ef391672370308512571_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
குஜராத் காந்திநகரில் தாயார் ஹீராபென் உடலை பிரதமர் மோடிதோளில் சுமந்து சென்றார். முன்னதாக, தனது தாயார் ஹீராபென்னின் உடலுக்கு மலர்வளையம் வைத்து பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார்.
#WATCH | Gandhinagar: Prime Minister Narendra Modi carries the mortal remains of his late mother Heeraben Modi who passed away at the age of 100, today. pic.twitter.com/CWcHm2C6xQ
— ANI (@ANI) December 30, 2022
பிரதமரின் தாயார் இறுதிச்சடங்கு:
குஜராத் காந்திநகரில் பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் உடலுக்கு காந்தி நகரில் இறுதிச்சடங்கு நடந்து வருகிறது. தாயார் ஹீராபென் உடலை தோளில் சுமந்து சென்றதுடன் இறுதிச்சடங்கில் கலந்து கொண்டுள்ளார்.
பிரதமர் மோடி தாயார் ஹீராபென் மறைவு:
பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் (100) உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவர் அகமதாபாத்தில் உள்ள ஐநா மேத்தா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.உடல்நலக்குறைவால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு இருந்த பிரதமரின் தாயார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சமீபத்தில் நடந்து முடிந்த குஜராத் சட்டசபை தேர்தலின் போது பிரதமர் மோடி தனது தாயை சந்தித்தார். குஜராத்தில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவுக்கு ஒரு நாள் முன்னதாக டிசம்பர் 4 ஆம் தேதி, காந்திநகரில் உள்ள தனது தாயாரின் இல்லத்திற்குச் சென்ற மோடி, அங்கு தேர்தலுக்கு முன் ஆசி பெற்றார்.
முன்னதாக, ஜூன் 18 ஆம் தேதி ஹீராபெனின் 100வது பிறந்தநாளில் பிரதமருடன் நேரத்தை செலவிட்டார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)