PM Modi Hyderabad Visit: ஸ்மார்ட்போன்... இணையதளம்.. சீர்திருத்தம்: ஹைதராபாத்தில் பிரதமர் மோடி பெருமிதம்!
கடந்த 30 ஆண்டுகளில் நாட்டில் சீர்திருத்தங்களுக்கான தேவை இருந்தாலும் அது எதுவும் சரியாக நடைபெறவில்லை என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி இன்று தெலங்கானா மற்றும் தமிழ்நாடு பயணம் மேற்கொள்கிறார். அதில் முதலாவதாக தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்திற்கு பிரதமர் மோடி சென்றார். அவருக்கு விமான நிலையத்தில் பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பை அளித்தனர். அதன்பின்னர் அவர் பாஜக நிர்வாகிகள் முன்பாக பேசினார். அதைத் தொடர்ந்து அவர் ஐஎஸ்பி கல்லூரியின் 20ஆம் ஆண்டு விழாவில் பங்கேற்றார். அங்கு அவர் உறையாற்றினார்.
அதில், “கடந்த 8 ஆண்டுகளை நாம் 30 ஆண்டுகளுடன் ஒப்பிட்டு பார்த்தால் ஒரு விஷயம் நமக்கு தெளிவாக தெரியும். அதாவது கடந்த 30 ஆண்டுகளில் நாட்டில் சீர்திருத்தங்களுக்கான தேவை இருந்தாலும் அது எதுவும் சரியாக நடைபெறவில்லை. அதற்கு காரணம் அப்போது இருந்த அரசியல் சிரதன்மையின்மை தான். 2014ஆம் ஆண்டிற்கு பிறகு இந்தியாவில் இந்த நிலை மாறியுள்ளது. ஸ்மார்ட்போன் டேட்டா பயன்பாட்டில் இந்தியா முதல் இடத்தை பிடித்துள்ளது. அத்துடன் உலகளவில் இணையதள சேவையை பயன்படுத்துவோரின் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. உலகளவில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் இருப்பதில் இந்தியா 3ஆவது இடத்தில் உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
If we compare last 8 years with the previous 3 decades we'll see that reforms couldn't take place despite their need, due to a lack of political willpower & instability. Country couldn't take big decisions. After 2014, India is witnessing political willpower & reforms: PM Modi pic.twitter.com/ElKlD6n7zQ
— ANI (@ANI) May 26, 2022
பிரதமர் மோடி தன்னுடைய ஹைதராபாத் பயணத்தை முடித்துவிட்டு சென்னைக்கு பிரதமர் மோடி பயணம் செய்கிறார். சென்னையில் பிரதமர் மோடியை வரவேற்க பாஜக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்