PM Modi : மெட்ரோவில் பயணம் செய்து பயணிகளுடன் கலந்துரையாடிய பிரதமர் நரேந்திர மோடி!
மும்பையில் மெட்ரோ ரயில் திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்து அதில் பயணம் மேற்கொண்டார்.
PM Modi : மும்பையில் மெட்ரோ ரயில் திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்து அதில் பயணம் மேற்கொண்டார்.
மும்பையில் பிரதமர் மோடி
மும்பையில் ரூ.38,000 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி வருகை தந்துள்ளார். மும்மை பாந்த்ர்-குர்லா காம்பளக்சில் பிரம்மாண்ட பொதுகூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்தேதி குண்ட்வாலி மெட்ரோ ரயில் நிலையத்தில் நடந்த நிகழ்ச்சியில், தசிகர் டி.என்.நகர் மெட்ரோ ரயில் திட்டம் மற்றும் அந்தேதி கிழக்கு-தசிகர் கிழக்கு இடையிலான இரு மெட்ரோ ரயில் திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
இதுதவிர பாந்த்ரா- குர்லா வணிக வளாகத்தில் நடந்த விழாவில் தாராவி பகுதி உட்பட 7 இடங்களில் 17,200 கோடியில் அமைக்கப்பட இருக்கும் கழிவு நீர் சுத்திகரிப்பு மையத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். மேலும், மும்மையில் 400 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலைகளை கான்கிரீட் மயமாக்கும் திட்டத்தையும் தொடங்கி வைத்தார். மெட்ரோ ரயிலுக்கான மொபைல் செயலி மற்றும் மெட்ரோ ரயில் பயன்பாட்டிற்கான ஒரே கார்டையும் அறிமுகம் செய்து வைத்தார். இதனை தொடர்ந்து, சத்ரபதி சிவாஜி டெர்மினஸ் ரயில் நிலைய மேம்பாட்டு பணிகளையும் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டை, துணை முதலமைச்சர் தேவேந்திரா பட்னாவிஸ், எம்.எல்.ஏக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மெட்ரோவில் பிரதமர் மோடி பயணம்
இதனை தொடங்கி வைத்து முதல்வர் ஏக்நாத் ஷிண்டை, துணை முதலமைச்சர் தேவேந்திரா பட்னாவிஸ் ஆகியோருடன் பிரதமர் மோடி பயணம் செய்தார். பின், அங்கு இருக்கும் சக பயணிகளிடம் கலந்துரையாடினார். ரயிலில் பிரதமர் மோடி, மிக சிறப்பாக இளைஞர்களுடன் உரையாடினார்.
#WATCH | Prime Minister Narendra Modi avails Mumbai metro and interacts with the youth onboard. Earlier this evening, he inaugurated two lines of the Mumbai metro.
— ANI (@ANI) January 19, 2023
(Video Source: DD News) pic.twitter.com/6IXCOeivXx
பின்னர், பொதுகூட்டத்தில் உரையாற்றிய மோடி, ”முன்பெல்லாம் நமது வறுமையை பற்றி உலக நாடுகள் பேசிக் கொண்டிருந்தன. மற்ற நாடுகளில் நாம் உதவி கேட்டோம். ஆனால் தற்போது நிலைமை மாறியிருக்கிறது. சுதந்திரத்திற்கு பிறகு நாடு மிகப் பெரிய கனவு கண்டுள்ளது. அந்த கனவு நனவாகியும் இருக்கிறது. வளர்ச்சி அடைந்த நாடுகள் கூட பொருளாதாரத்தை சமாளிக்க போராடுகின்றன. அதே சமயம் இந்தியா 80 கோடி மக்களுக்கு இலவச உணவு தானியம் கொடுத்துக் கொண்டிருக்கிறது” என்றார்.
மேலும், மும்பை வளர்ச்சிக்கு நிதி ஒரு பிரச்சனை இல்லை. ஏக்நாத் ஷிண்டே மற்றும தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் மும்பை மக்களின் கனவுகளை நிறைவேற்றுவர். ஏழைகளுக்கு அடிப்படை வசதிகளை செய்து தர அரசு உறுதி பூண்டுள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.