விழா மேடையிலே கனிமொழி, எ.வ.வேலு பெயரை தவிர்த்த பிரதமர் மோடி - தி.மு.க. தொண்டர்கள் அதிர்ச்சி
தூத்துக்குடியில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி விழா மேடையில் இருந்த அமைச்சர் எ.வ.வேலு மற்றும் தூத்துக்குடி எம்.பி. கனிமொழி ஆகியோர் பெயரை தவிர்த்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
தூத்துக்குடியில் இன்று நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்திற்கு அடிக்கல் நாட்டியது உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார், இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய அமைச்சர் எல்.முருகன் ஆகியோருடன் தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர் எ.வ.வேலு, தூத்துக்குடி எம்.பி. கனிமொழி ஆகியோர் பங்கேற்றனர்.
எ.வ.வேலு, கனிமொழி பெயரை தவிர்த்த பிரதமர் மோடி:
இந்த நிகழ்ச்சியில் பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைத்து மக்கள் முன்பு பேசிய பிரதமர் மோடி ஆளுநர் விழா மேடையில் ஆர்.என்.ரவி, மத்திய அமைச்சர்கள் சோனாவால், சாந்தனு தாக்கூர், ஸ்ரீபத் யஷோநாயக் மற்றும் எல்.முருகன் அமர்ந்திருந்தனர். அவர்களது பெயர்களை எல்லாம் குறிப்பிட்ட பிரதமர் மோடி, இவர்கள் இருவரது பெயரை மட்டும் தவிர்த்து விட்டார். பொதுவாக, எந்தவொரு அரசு நிகழ்ச்சியாக இருந்தாலும் அந்த நிகழ்ச்சியில் கட்சி பேதமின்றி அந்த தொகுதி மற்றும் துறை சார்ந்த பிரதிநிதிகள் பங்கேற்பது வழக்கம். அந்த நிகழ்ச்சியில் அவர்களுக்கு முறையான வரவேற்பு அளிக்கப்படுவதும் வழக்கம்.
ஆனால், பிரதமர் மோடியே தமிழ்நாடு அரசியலில் பிரபலமான கனிமொழி மற்றும் எ.வ.வேலு ஆகியோரது பெயரை தவிர்த்துள்ளார். ஏற்கனவே இந்த நிகழ்ச்சியில் தனக்கு முறையான அழைப்பு வழங்கப்படவில்லை என்று அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பங்கேற்கவில்லை.
தமிழக அரசு மீது குற்றச்சாட்டு:
மேலும், இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தமிழ்நாடு அரசு மீது சராமரியான குற்றச்சாட்டுகளை அடுக்கினார். பிரதமர் மோடி தனது உரையில், மத்திய அரசின் திட்டங்களை தமிழ்நாடு அரசு மறைக்கிறது என்றும், தமிழக அரசின் தடைகளை தாண்டி மத்திய அரசின் திட்டத்தை செயல்படுத்தியே தீருவோம் என்று பேசினார்.
ஆர்.என்.ரவி, மத்திய அமைச்சர் அமைச்சர் எல்.முருகன் மற்றும் வட இந்தியாவைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் ஆகியோர் பெயர்களை கூறி வரவேற்றார். ஆனால், அதே மேடையில் தமிழ்நாடு அரசு சார்பில் பங்கேற்றிருந்த அமைச்சர் எ.வ.வேலு மற்றும் கனிமொழி எம்.பி. ஆகியோர் பெயர்களை அவர் தவிர்த்துவிட்டார்.
அதற்கு பதிலாக, பொதுவாக அமைச்சர்கள் என்று கூறினார். தூத்துக்குடியில் இன்று பிரதமர் மோடி பங்கேற்றிருந்த நிகழ்ச்சியில் முதலில் அமைச்சர் கீதா ஜீவன் பங்கேற்கவிருந்த நிலையில், அவருக்கு பதிலாக மக்களவை உறுப்பினர் கனிமொழி பங்கேற்றார். அரசு நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் மோடி மத்திய அமைச்சர்களின் பெயர்களை கூறி வரவேற்று, தமிழ்நாடு அமைச்சரையும், தூத்துக்குடி மக்களவை உறுப்பினரது பெயரையும் மட்டும் தவிர்த்திருப்பது பெரும் அதிர்ச்சியை தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க: எல்லா துறைகளிலும் முதலிடத்தை நோக்கி தமிழ்நாடு...அதற்கு காரணம் திராவிட மாடல் அரசின் சாமர்த்தியம் - முதல்வர் ஸ்டாலின்
மேலும் படிக்க: PM Modi TN Visit LIVE: மத்திய அரசின் திட்டங்களை தமிழ்நாடு அரசு மறைக்கிறது - பிரதமர் மோடி