PM Modi : பிரதமர் மோடிக்கே ஹால் டிக்கெட்டா? சர்ச்சையில் சிக்கிய பீகார் பல்கலைக்கழகம்
ஹால் டிக்கெட்டில் பிரதமர் மோடி, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, அம்மாநில ஆளுநர் பகு சவுகான் ஆகியோரின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
பீகார் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள ஹால் டிக்கெட்டில் பிரதமர் மோடி, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, அம்மாநில ஆளுநர் பகு சவுகான் ஆகியோரின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
This is hilarious !! Lalit Narayan Mithila University has issued Admit Cards with Photographs of M0di, cricketer Dhoni and Bihar Governor Phagu Chauhan 🤣🤣🤣
— Katyusha (@Indian10000000) September 11, 2022
Thank you M0diji ! You are omnipresent now !
. pic.twitter.com/occHgWSZSj
தர்பங்காவில் அமைந்துள்ள லலித் நாராயண் மிதிலா பல்கலைக்கழகத்தின் கீழ் வரும் மதுபானி, சமஸ்திபூர் மற்றும் பெகுசராய் மாவட்ட கல்லூரிகளில் பயிலும் பி.ஏ பகுதி III மாணவர்களுக்காக வெளியிடப்பட்டுள்ள ஹால் டிக்கெட்டில் மாணவர்களின் புகைப்படங்கள் இடம்பெற வேண்டிய இடத்தில் பிரபலங்களின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.
இதுகுறித்து பல்கலைக்கழக பதிவாளர் முஷ்டாக் அகமது கூறுகையில், "சமூகவலைத்தளங்கள் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ள முறைகேடுகள் குறித்து தீவிரமாக கருத்தில் கொள்ளப்பட்டுள்ளது. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு, சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. முதல் தகவல் அறிக்கைக் கூட பதிவு செய்யப்படலாம்.
ஹால் டிக்கெட், ஆன்லைனில் வழங்கப்பட்டன. அந்தந்த மாணவர்கள் பதிவிறக்கம் செய்ய, அவர்கள் அனைவருக்கும் தனிப்பட்ட உள்நுழைவு விவரங்கள் வழங்கப்பட்டன. ஹால் டிக்கெட்டுகளை தயாரிப்பதற்காக எங்கள் தரவு மையத்தால் செயலாக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் பிற விவரங்களை மாணவர்கள் பதிவேற்ற வேண்டும். அவர்களில் சிலர் பொறுப்பற்ற குறும்புகளில் ஈடுபட்டதாகத் தெரிகிறது.
This can happen only in #Bihar#LalitNarayanMithilaUniversity, in #Darbhanga has put the photo of @narendramodi and Governor Fagu Chauhan on the admit card for the university examinations. pic.twitter.com/43mB1bqfrL
— Nagen Singh (@SinghNagen) September 10, 2022
விசாரணைக்கு பின் சரியான நடவடிக்கை எடுக்கப்படும். இந்த சம்பவம், பல்கலைக்கழகத்திற்கு கெட்ட பெயரை ஏற்படுத்தி உள்ளது. பிரதமர் மற்றும் கவர்னரின் புகைப்படங்களை தவறாக பயன்படுத்தியதும் மோசமான விஷயம்" என்றார்.
தற்செயலாக, இதே போன்ற சம்பவம், சில ஆண்டுகளுக்கு முன்பு முசாபர்பூரில் அரங்கேறியது. மாணவர்களின் ஹால் டிக்கெட்டில் ஒருவரையொருவர் திருமணம் செய்து கொள்ளாத பாலிவுட் நட்சத்திரங்களான இம்ரான் ஹாஷ்மி மற்றும் சன்னி லியோன் என்ற பெயர்கள் முறையே அப்பா மற்றும் அம்மாவுக்கான பெயர்கள் இடம் பெற வேண்டிய இடத்தில் இடம்பெற்றுள்ளன.