Parliament: 5வது நாளாக முடக்கம்.. திங்கள்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்ட நாடாளுமன்றம்.. வீணடிக்கப்படும் நேரங்கள்..!
ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் கடும் அமளியால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் திங்கள்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.
நாடாளுமன்றத்தில் எம்.பி-க்கள் அமளியால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் திங்கள்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.
நாடாளுமன்றம் முடக்கம்:
இந்திய ஜனநாயகம் குறித்து ராகுல்காந்தி பேசிய விவகாரத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் என ஆளுங்கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டனர். மேலும் எதிர்க்கட்சிகள் அதானி விவாகாரம் குறித்து கேள்வி எழுப்பியும் அமளியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக தொடர்ந்து 5வது நாளாக இன்றும் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் முடங்கின.
Rajya Sabha adjourned to reconvene on 20th March, amid ruckus in the House pic.twitter.com/iIYZhGuZ6r
— ANI (@ANI) March 17, 2023
இதையடுத்து, திங்கள்கிழமைக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து 5வது நாளாக இரு அவைகளும் முடங்கியதால், மக்கள் பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்படும் நேரங்கள் வீணடிக்கப்பட்டு வருவதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.