Kolkata museum : அருங்காட்சியகத்தில் பரபரப்பு...சக ராணுவ வீரர்கள் மீது சரமாரி துப்பாக்கிச்சூடு...என்ன நடந்தது?
ராணுவ குடியிருப்பில் சிஐஎஸ்எஃப் கான்ஸ்டபிள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியதில் துணை ராணுவ வீரர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
மேற்குவங்கம் கொல்கத்தாவில் இந்திய அருங்காட்சியகத்துடன் இணைக்கப்பட்டிருந்த ராணுவ குடியிருப்பில் சிஐஎஸ்எஃப் கான்ஸ்டபிள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியதில் துணை ராணுவ வீரர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இதில் பலர் காயமடைந்தனர்.
A paramilitary jawan was shot dead and several others were injured after a head constable of a CISF unit opened fire inside a barrack attached at the Indian Museum in Kolkata this evening.
— ThePrintIndia (@ThePrintIndia) August 6, 2022
Watch: https://t.co/MvA8G7qnAz
தனது துப்பாக்கியை பயன்படுத்தி சக ஊழியர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்ட கான்ஸ்டபிள் நிராயுதபாணியாக்கப்பட்டு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
Paramilitary Jawan Dead, Many Injured In Firing At Kolkata Museum https://t.co/X1JYVqBOBW
— Kashi Post (@PostKashi) August 6, 2022
"இந்த சம்பவம் மாலை 6.30 மணியளவில் நடந்தது. ஒரு சிஐஎஸ்எஃப் ராணுவ வீரர் கொல்லப்பட்டார். மற்றொருவர் படுகாயமடைந்தார். குற்றம் சாட்டப்பட்டவரை நாங்கள் கைது செய்துள்ளோம்" என்று போலீஸ் கமிஷனர் வினீத் கோயல் கூறியுள்ளனர்.
Paramilitary Jawan Dead, Many Injured In Firing At Kolkata Museum https://t.co/ztoqcntLE8
— sanjeev rana (@sanjeevrana02) August 6, 2022
போலீஸ் வாகனம் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில், வாகனத்தின் ஓட்டுநர் உள்பட பல போலீசார் காயமடைந்ததாக கூறப்படுகிறது.
கடந்த 2019 டிசம்பரில், மத்திய தொழில் பாதுகாப்புப் படையின் கட்டுப்பாட்டின் கீழ் அருங்காட்சியகம் வந்தது. கொல்கத்தாவின் மையப்பகுதியில் அமைந்துள்ள இந்த அருங்காட்சியகம், மத்திய கலாசார அமைச்சகத்தின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் ஒரு தன்னாட்சி அமைப்பாகும்.
ராணுவ வீரர் ஒருவர், சக பாதுகாப்பு படை வீரரை சுட்டு கொன்றிருப்பது கொல்கத்தாவில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்